டெல்லியில் நடந்து வரும் 3 வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிரான போராட்டம் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற முழு கடையடைப்பை தொடர்ந்து ஒரு அரசியல் எழுச்சியாக மாறியது.. குறிப்பாக பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீச்சாகவும், பிற மாநிலங்களில் வாய்ப்புள்ள பகுதிகளிலும் தென் மாநிலங்களுக்கான தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு குறிப்பிடுகின்ற வகையிலும் போராட்டத்தை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பாசிச பாஜக கும்பல் விவசாயிகளை தாக்குவதற்கு தக்க தருணத்தை பார்த்துக்கொண்டிருந்தது.
உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநிலத்தை ஆளும் பாசிச பாஜகவைச் சேர்ந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மற்றும் மத்தியில் ஆளுகின்ற மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டுவதற்கு தயார் செய்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அதற்கு அந்த விவசாயிகளின் மீது குண்டர்கள் காரின் மூலம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக 4 விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய உத்திரப்பிரதேச விவசாயிகளின் மீதும் தடியடி நடத்தியுள்ளது உ.பி யின் யோகி ஆதித்யநாத் குண்டர் படை. ஆனால் விவசாயிகள் இந்த தாக்குதல்களுக்கு அஞ்சி பின்வாங்கவில்லை.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மத்திய இணை அமைச்சர் மகன் அஸ்வின் மிஸ்ரா போராடுகின்ற விவசாயிகள் மீது காரை ஏற்றி பச்சைப் படுகொலை செய்துள்ளான். இந்த படுகொலைகளை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதனை ஆதரிக்கின்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல இந்தப் பிரதேசத்தில் லக்கிம்பூர் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேபாளத்தின் எல்லைப்பகுதியான கிராமத்தில் இதுவரை 8 பேர் வன்முறை மற்றும் தீக்குளித்தும் இறந்துள்ளனர். இவர்களில் 2 பேர் பாஜகவைச் சேர்ந்த விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி பற்றி செய்தி சேகரிப்பதற்கு சென்ற சாதனா நியூஸ் சேனல் இன் ஒரு நிருபர் செய்தி சேகரிப்பின் போது இறந்து விட்டார். கார் பலமாக மோதியதில். அவர் சாலையோரத்தில் உள்ள தண்ணீரில் விழுந்து இறந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறவர்கள் நசுக்கப் படுகிறார்கள் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் கொக்கரித்து உள்ளார்.
நாடு முழுவதும் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து கொண்டே வருகிறது அரசியல் கட்சிகள் வேறுவழியின்றி இந்த போராட்டங்களை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் ஐக்கிய முன்னணி போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறது.
போராடும் விவசாயிகளின் உயிரை சாதாரண கிள்ளு கீரையாக நினைத்துக்கொண்டு பாசிச பாஜக கும்பல் தாக்குதல் நடத்தலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்-தொழிலாளர்கள் இதனை இப்படியே அனுமதிக்க முடியாது, கூடாது. விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் குண்டர்களுக்கு எதிராக வீதிகளில் திரண்டு போராடுவதும் களத்தில் நேரடியாக எதிர்த் தாக்குதல் நடத்துவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
கார்ப்பரேட்டுகளின் சூறையாடல்களுக்கு சொந்தக் கட்சியின் மனிதனையே காவு கொடுக்கின்ற அளவிற்கு ஏகாதிபத்திய நிதி மூலதன சேவையில் வெறித்தனத்துடன் இறங்கியுள்ள பாசிச மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொழிலாளர்களை ஒன்று திரட்டுவோம் கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்பு, முழு அடைப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல் ரீதியிலான போராட்டங்களை முன் வைத்து போராடுவோம்.
பா. மதிவதனி