அன்பார்ந்த தோழர்களே! இந்திய தத்துவ மரபு என்பது இந்துக்களின் மரபு அல்ல என்பதே வரலாற்று ரீதியான உண்மை. ஆனால் ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன கும்பல், இந்திய தத்துவ மரபு என்பதை இந்து மரபு என்று திரித்து புரட்டுகிறது. இந்த நச்சு கருத்துகளை எதிர்த்து போராடுகின்ற வகையில் இந்திய தத்துவ மரபும் பார்ப்பன திரிபும் என்ற இந்த வெளியீட்டை தொடராக கொண்டு வருகிறோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இணைந்து 2003ஆம் ஆண்டு பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தஞ்சையில் நடத்தினோம். அந்த மாநாட்டில் பேராசிரியர் பெரியார்தாசன் ஆற்றிய உரையை நூலாக ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.
தந்தை பெரியார் காலத்தில் கூட பார்ப்பன கொடுங்கோன்மை, பார்ப்பன ஆதிக்கம் என்றுதான் வரையறுத்து போராடி வந்தார்கள். ஆனால் இந்தியாவிலேயே முதல் முதலாக பார்ப்பனியம் என்பது ஒரு பயங்கரவாதமாக, பார்ப்பன பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது என்பதை வரலாற்றுப் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்கி மக்கள் கலை இலக்கியக் கழகம் அந்த மாநாட்டை கொண்டு சென்றது. அந்த மாநாட்டில் பேராசிரியர். பெரியார்தாசன் ஆற்றிய உரை மிக முக்கியமானது.
கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறி தாக்கி வருகின்ற சூழலில் காவி பாசிசத்தை அம்பலப்படுத்துகின்ற ஒவ்வொரு சிறிய ஆயுதத்தையும் நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், தொழிலாளர்கள் மத்தியில் பார்ப்பன இந்து மதவெறியர்கள் ஏற்படுத்திவரும் வரலாற்று புரட்டுகளை முறியடிக்க உண்மையை உரத்துப் பேச வேண்டியுள்ளது, அந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தொடராக வெளியிடுகிறோம். வழக்கம்போல மக்கள் அதிகாரம் வெளியிடும் தொடர்களை படிக்கின்ற வாசகர்கள் புதிய வாசகர்களுக்கு இந்த கட்டுரைகளை அறிமுகப்படுத்துமாறு தோழமையுடன் கோருகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

ஹரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே!! - YouTube

ந்து மதம், அது இப்போது இல்லாத இடமே இல்லை. இராமகோபாலன் அய்யாவுடைய கோமணத்திற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது. சங்கராச்சாரிக்கு சொறி பிடிக்கின்ற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது. அது போதாதுனு இப்ப புதுசு புதுசா கிளம்பிட்டாங்க. உங்க வாழ்க்கையில என்ன கஷ்டம்னாலும் எங்கிட்ட சொல்லு. லெட்டர் போடு. ஜோசியப்படி கணிச்சு உன் வாசப்படியில கொண்டுவந்து சொருவுரேங்குறான். இதுக்கு இணைப்பு, பிணைப்பு, வெங்காயம், வெள்ளப்பூண்டு, வாஸ்துசாஸ்திரம் என்கிறான். எந்த நாட்டில் வாஸ்துசாஸ்திரம்? தமிழ்நாட்டில், மாராத்தியில், குஜராத்தில், வாழ்வதற்கே வசதியில்லாமல், வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில படுத்துட்டிருக்கிற ஜனங்ககிட்ட வாஸ்து மசுரு என்னத்துக்குன்னு கேட்போமா? கேட்கமாட்டோமா?

இதுக்கு வாஸ்துசாஸ்திரமா? வீடே இல்லையாம் இதுக்கு வாஸ்த்தாம். வாஸ்து எதுக்கு வைப்ப?ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வெளிக்கு போறதுக்கு இடமில்லாமல் டாய்லெட்டுன்னு ஒன்னுதெரியாமல் வெளியபோயிகிட்டிருந்தான். இதுக்கு ஒரு 3 கிலோமீட்டர் போயி குப்புசாமி வரல, கோயிந்தசாமி வரல, நீ சொம்பு எடுத்துக்குனு வா, நா டார்ச் லைட் எடுத்துக்குனு வாரேன்னு பாகப்பிரிவினை பண்ணிக்கினு போனானுங்க. இப்ப வாஸ்துவா? இப்ப பங்களா கட்டுற வீட்டுல வாஸ்துன்னா டாய்லெட் எப்படி வைப்ப? உன் வாஸ்து குளத்தங்கரையில வெளிக்கு போறது. எந்த வாஸ்து சாஸ்திரத்திலே எங்கடா இருக்குது உங்களுக்கு டாய்லெட்டு. கேட்போமா? கேட்கமாட்டோமா? இதை கேட்கிறதுக்குத்தான் இப்போ நான் பேச வந்திருக்கிறேன் என்பது என்னுடைய முன்னுரை.

இவர்களுடைய சாஸ்திரம் இவர்களுடையதா? இப்ப ஆயுர்வேதன்றான். விளக்கெண்ணெய் விக்கணும்னா கூட திடீர்னு ஆயுர்வேதமுறைப்படி தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய்ன் றான். அது இவனுடைய சாஸ்திரமாம். ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம். வாஸ்து இவன் சாஸ்திரம். சோசியம், காலக்கணிதம், நியூமராலஜி, அவனோட ஆயாலஜி எல்லாத்தையும் சேத்து உழைக்கிற நம்மள ஒரு அங்குலங்கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்குற இந்த சதிகளுக்குப் பெயர் இந்து மதம்.

எல்லாரையும் சேத்துக்குவாராம், இவரு. சங்கராச்சாரியாருக்கு இப்ப வந்திருக்கிற பெரிய ஃபுல் டைம் டியூட்டி, 24 மணிநேர வேலை, என்னன்னா? இந்துக்கள் யார், யார்னு பார்த்து அவர்களை ஒன்றிணைக்கிறாராம். இதுவரைக்கும் ஊருக்குள்ள வராதடான்னு துரத்திக்கிட்டிருந்தீங்க, சேரியிலேயே இருடான்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க, உன்ன நா தொடமாட்டன்டான்னு சொல்லிக்கிட்டீருந்தீங்க. இப்ப கூப்புடுறானாம்!

1932இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாட்டுல நீயும் இந்து நானும் இந்துன்னு பாபா சாகேப் அம்பேத்கரைப் பார்த்து அவர் சொன்னாராம். யாரு? மகாத்மா காந்தி. நாமெல்லாம் வெறும் ஆத்மா. அவங்க மட்டும் தான் மகாத்மா. அதற்கு பாபா சாகேப் அம்பேத்கர் பதில் சொல்லியிருக்கிறார். ஹலோ மிஸ்டர் காந்தி! மகாத்மான்றத ஒத்துக்காம முதன் முதல் போர்க் குரல் கொடுத்த பெருந்தலைவன் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். இந்த வெறும் ஆத்மாவே இல்லன்னு சொன்னார் புத்தர். ஆத்மாவே இல்லை இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா! அந்த மகாத்மாவை பார்த்து ஹலோ மிஸ்டர் காந்தி வாயை மூடுங்கன்னு சொல்லிட்டு நீ எப்படி இந்துன்னு என்ன சொல்லற? நீ சொல்லிக்கோ நீ இந்து. என்ன எப்படி சொல்ற? என்று கேட்டதற்கு, இல்ல. நீயும் இந்து நானும் இந்துன்னாரு அவரு.

இந்த விவகாரமெல்லாம் பண்ணாத, “”நா இந்து இல்ல”ன்னு சொன்னாரு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். நீயும் இந்து நானும் இந்து, அப்படின்னா, அப்பதான் கேட்டாரு மலத்த தொட்டிருக்கியான்னு? யாரு? பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். அப்பதான் ஞாபகம் வந்தது “”2” தடவை தொடுற, ஒருநாளைக்கு. கழுவிதான ஆகணும். அவரு மகாத்மான்றதால “”எவாப்ரேட்டா” ஆயிடும்? இப்ப சங்கரச்சாரியாரு வெளிக்கு போனா கழுவிதான ஆவனும். மலத்த தொட்டுதான ஆவனும் தொட்டு கழுவிதான ஆவனும் இரண்டு வேளை. இரண்டுமுறை மலத்த தொடுகிற நீ கைய மட்டும் சோப்பு போட்டு கழுவுற, ஆனா மனிதனா பிறந்த என்னை தீண்டப்படாதவன் என்று சொல்லி தொட்டா குளிக்கணுன்னு சொல்ற, நீயும் இந்து, நானும் இந்துன்னு சொல்றியே ராஸ்கல், அப்போ யார் இங்க இந்து? இவங்க சொல்றாங்க எல்லாருமே இந்துவாம். யாருடா இந்துன்னா? இந்திய தத்துவ மரபில் வந்தவங்க எல்லாரும் இந்துன்றான்.

நாங்க சுடலமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடாவெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுப்பாடி, “”சுடலை மாடன் வந்து….. நின்றான் நின்றானங்கே” நின்றான், நின்றான்னு அரைமணி நேரமா நிற்கிறோமே, நானும் இந்து. சேரிக்குள்ளயே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிச்சிக்கிட்டிருக்கிற நீயும் இந்துவா? என்னுடைய மரபும் உன்னுடைய மரபும் ஒன்றா? இந்தக் கேள்வியைத்தான் இன்றைக்கு இங்கே எழுப்புகிறோம். இந்திய தத்துவ மரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்திய தத்துவ மரபு மிகப் பெரியது. அகலமானது. ஆழமானது. அது சாங்கியர் என்று சொல்லப்படுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார் வரை வந்து இன்றைக்கும் பாமர மக்களென்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்க்கத்தினரிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here