மிழ்நாட்டில் மதக்கலவரங்களின் மூலமாக தனது கட்சியை வளர்ப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக பயங்கரவாத கும்பல் தமிழ்நாட்டில் இயல்பாக நடைபெறுகின்ற திருவிழாக்கள், மத நிகழ்வுகளை பயன்படுத்தி கலவரத்தை தூண்டுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அதில் ஒரு பகுதியாக  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டில் பிரபலமான கோவிலான பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்த கொடியேற்றம் துவங்கி தொடர்ந்து நடைபெறும்  பத்து நாட்கள் திருவிழாவை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சித்து வருகிறது.

கடந்த 85 ஆண்டுகளாக ஹைந்தவா சேவா சங்கம் என்ற இந்து மதவெறியர்களின் பினாமி அமைப்பின் மூலம் நடைபெற்று வந்த இந்து சமய மாநாட்டை இந்த ஆண்டு அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து இந்து அறநிலையத்துறை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இதற்கான முன்னெடுப்புகளை செய்தவுடன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சங் பரிவார கும்பல் கூச்சலிட துவங்கியது. வழக்கம்போல நாத்திக அரசு, இந்து அறநிலையத்துறை கோவில் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற புளித்துப்போன சரக்கை மீண்டும் விற்கத் துவங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டவுடன் தமிழக அரசு ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கோவிலில் பாரம்பரியம் மற்றும் ஆச்சார விதிகள் மாறாமல் புனரமைப்பு செய்து மீண்டும் வழிபாட்டுக்கு உகந்த வகையில் மாற்றி பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது. தனது கட்சியின் கொள்கையாக பகுத்தறிவு-நாத்திகம் என்று இருந்தாலும் பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த செயலை செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

அமைச்சர் மனோ தங்கராஜ்

வழக்கமாக கோவில்கள் திருவிழாக்கள் போன்றவற்றை தனது பிரச்சார கருவியாக, அதாவது மக்களின் ஆன்மீக உணர்வை, மத உணர்வை இந்து மத வெறியாக மாற்றுவதற்கு பயன்படுத்துகின்ற பாஜகவினர் இந்த முறை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மத்தியில் இது போன்ற செயலில் ஈடுபட முடியாமல் போவது கண்டு கொதிப்படைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி திருவிழாக்கள், இந்து மத பண்டிகைகளை பயன்படுத்தி இந்து பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் கல்லாகட்டும் செயலும் கைவிட்டுப் போகவே தமிழ்நாடு அரசின் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாக “இந்து அறநிலையத்துறையின் சார்பில் மாநாடு நடத்த விட மாட்டோம். மாறாக 85 ஆண்டுகளாக மாநாடு நடத்தி வரும் ஹைந்தவா சேவா சங்கம் மூலம் மாநாடு நடத்துவோம்” என்று தமிழ்நாடு அரசுக்கு சவால் விட்டுள்ளனர். அதுமட்டுமல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி. சிவம் பற்றி அவர் ஒரு திமுககாரன் என்று கொச்சைப்படுத்தி உள்ளனர்.

இதற்கும் மேலே சென்று இந்துமத பண்டாரமான வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் “மண்டைக்காடு மண்டைக்காடாக இருக்கட்டும். தயவு செய்து அயோத்தியாக்கி விடாதீர்கள்” என்று பத்திரிகையாளர் சந்திப்பிலும், பகிரங்கமாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு கிடந்த நாடார் சாதியினரை சக மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று போராடிய ஐயா வைகுண்டர் 191 வது அவதார தினம் மார்ச் மாதம் நான்காம் தேதி தான் வருகிறது.

சாதி, மத பேதங்களை அகற்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்திய ஐயா வைகுந்தரை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ்- பாஜகவினர் செயல்படுவதில்லை. மாறாக அதன் தலைமைபதியாக உள்ள பால பிரஜாபதி அடிகளாரை மிரட்டி பணிய வைக்கவும், தலைமை பதிக்கு கீழ் உள்ள மாவட்ட, நகர பதிகளில் தனது ஆர்எஸ்எஸ் தொண்டர்களை இறக்கிவிட்டு மொத்தமாக கைப்பற்றவும் எத்தனிக்கின்றனர்.

இந்த கேடுகெட்ட கும்பல் ஹைந்தவா சேவா சங்கத்தை பயன்படுத்தி மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அதற்கு மதமாற்றம் செய்ய முயற்சிப்பதை எதிர்ப்பதாக போர்வை போர்த்தி அதற்குள் தன்னை ஒளித்துக் கொண்டு கொண்டு மத கலவரங்களை தூண்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி போன்றவர்களையும், வேறு சில ஆளுநர்களையும் பாஜகவின் தலைவர் அண்ணாமலையையும் அழைத்துக் கொண்டு வந்து மாநாட்டை நடத்துவோம் என்று கலவரம் நடத்துவதற்கான அறைகூவல் விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளப்படும் அளவிலான நாடார் சாதியினர் அங்கிருந்து வெளியேறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மளிகை கடைகளை நடத்தி வருகின்றனர். அந்த மளிகை கடைகள் அனைத்தும் டி மார்ட், வால்மார்ட் போன்ற ஷாப்பிங் மால்களின் கட்டுப்பாட்டிலும், flipkart, amazon போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிடிக்குள் சென்று வருகிறது.

அதுபோல ரப்பர் உற்பத்தியில் ஈடுபடும் ரப்பர் விவசாயிகள் மற்றும் ஆழ்கடல் மீன் பிடிப்பில் நிபுணத்துவம் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் ஆகியோர்களின் வாழ்வாதாரம் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் பாசிச கொள்கைகளினால் ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: கன்னியாகுமரி: தொடர் மழையால் வாழ்க்கை இழந்து நிற்கும் ரப்பர் தோட்ட விவசாயிகள்-தொழிலாளர்கள்!

அவர்களின் வாழ்வாதாரங்களை பற்றி பேசுவதற்கு துப்பு கெட்ட சங்பரிவார கும்பல் வழிபாட்டு பிரச்சனையை பெரிதாக்கி நாடார்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்குவதற்கு துடித்துக் கொண்டுள்ளனர்.

எனவே தமிழகத்தில் மதக் கலவரங்களை உருவாக்கி காலூன்ற துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் சதி திட்டங்களை முறியடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்.

அவர்களின் வாலை ஒட்ட நறுக்குகின்ற வகையில் குண்டர் சட்டத்தில் அவர்களை கைது செய்வதும், ‘சாகா’ என்ற பெயரில் தாக்குதல் மற்றும் தெருச் சண்டைகளுக்கு தயார் படுத்தி உள்ள பாசிச குண்டர்களுக்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் நாமும் மக்கள் தற்காப்பு குழுக்களை கட்டுவோம்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here