அன்பார்ந்த வாசகர்களே!
மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் அதன் முகநூல் பக்கங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நாடுமுழுவதும் கார்ப்பரேட்- காவி பாசிசம் ஏறித்தாக்கி வருகின்ற சூழலில் அதை எதிர்த்து முறியடிப்பதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள், பாசிசத்திற்கு எதிராக செயல்பட விழையும் அமைப்புகள், தனிநபர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பது என்ற நோக்கத்துடன் செயல்படும் மக்கள் அதிகாரத்தின் ஊடக பிரிவாக எமது இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்கள் செயல்படுகிறது.

அதுமட்டுமின்றி பாசிசத்தை வீழ்த்தி, தற்போது நிலவுகின்ற போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை மாற்றியமைத்து உண்மையான ஜனநாயகத்தை முன்வைக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவது உடனடி லட்சியமாக முன்வைக்கிறது.

வறட்டுத்தனமாக, கிளிப் பிள்ளைகளை போல எல்லா காலத்திற்கும் ஒரே முழக்கத்தை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்ய எமது அமைப்பு விரும்பவில்லை.

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்ற மகத்தான புரட்சிகர கடமையில் உடனடியாக செய்யவேண்டிய திட்டத்தை ஜனநாயக கூட்டரசு என்ற வடிவத்தில் முன்வைக்கின்றோம்.

  மக்கள் அதிகாரம் அமைப்பையும், அதன் இணையதளத்தையும் தொடர்ந்து ஆதரியுங்கள். 

இந்த நோக்கத்தை முன்வைத்து செயல்படுகின்ற எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரின் உரைகள், கட்டுரைகள், கவிதைகளை எமது இணையதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

இந்த இணைய தளத்தை நடத்துவதற்கு போதுமான நிதி ஆதாரமோ, ஊடகத்திற்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகளோ ஏதுமின்றி அன்றாடம் உழைக்கின்ற தொழிலாளர்களைக் கொண்டு உழைக்கும் மக்கள் ஊடகமாக வெளிவருகிறது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் முகநூல் பக்கம்.

FACEBOOK :

https://www.facebook.com/peoples.powerTN

YOUTUBE

https://www.youtube.com/channel/UCR1v0DCZwMniQseXpjEidJA

INSTAGRAM:

https://instagram.com/makkalathikaram_media?utm_medium=copy_link

TWITTER :

https://twitter.com/peoplespowerTN?t=1w9i81Q_6IhdHmO1Hvl2IA&s=09

NEWSHUNT :

https://profile.dailyhunt.in/peoplespower2021?s=a&ss=pd&uu=0x41ac947b68027e36

SHARE CHAT

https://sharechat.com/profile/peoplespower?d=n

PINTEREST

https://pin.it/6mSrCWK

இதனை தங்கள் நண்பர்கள்,உறவினர்கள், உடன் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள் இல்லங்களுக்கு அருகிலுள்ள நண்பர்கள் அனைவரிடமும் உரிமையுடன் பரப்புங்கள்!

நாட்டை சூழ்ந்து நிற்கும்,

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!

தோழமையுடன்
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here