கற்புள்ள பெண்களின் ஒழுக்கம்


கற்புள்ள பெண்களின் ஒழுக்கம் பற்றி ‘விசுவ பிரம புராணம்’ விலாவாரியாக விளக்குகிறது.

இதில் கூறப்பட்டுள்ள கற்பு ஒழுக்கம் பெண்களுக்கு உண்டா?,அது தேவையா?, என்பதையல்லாம் தாண்டி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதே உண்மை.இனி விசுவ பிரம புராணம் கூறும் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகளைப் பார்ப்போம்;

கற்பிற்சிறந்தமாதர்கள், தங்கள் தங்கள் கணவர்களின் கட்டளையில்லாமல், யாதொரு தெய்வங்களை வாழ்த்திவணங்குதலும், தெய்வத்தன்மை பொருந்திய கங்கை முதலிய புண்ணியாதிகளில் ஸ்நானஞ் செய்ய விரும்புதலும், தன்மையைத்தரும். பலவகைப்பட்ட விரதங்களை யனுஷ்டித்தலும், திருவிழா முதலிய சிறப்புக்களைப் பார்த்ததுமாகிய விவைகளை யொருபோதுஞ் செய்யார்கள்.

மேன்மைபொருந்திய தங்கள் கணவர்கள் புசித்த பின்பே தாங்களினிதாகப் புசித்தலும், கணவர்கள் யா தொருவருத்தமுமின்றி நித்திரைசெய்தபின்பு தாங் கன் நித்திரை செய்தலும், கணவர்கள் நித்திரைவிட் டெழுந்திருப்பதுமுன்னமே தாங்கள் நித்திரைவிட் டெழுந்திருத்தலும், கெடுதியில்லாத கற்பினையுடைய மாதர்களது நற்செய்கைகளாகும்.

குற்றமில்லாத கற்பினையுடைய மாதர்கள் வயதின் முதிர்ந்து நற்குணமமைந்த பெரியோர்களின் துணை யில்லாமல் யாதொரு விடத்திற்குந் தனித்துப் போக மாட்டார்கள். தாங்கள் வசிக்கு மிடத்தைவிட்டு அன்னியருடைய வீட்டிற் பிரவேசியார்கள், பரியாசமான வார்த்தைகளைச் சொல்லமாட்டார்கள்.

மாதர்கள், திருமகள் வசிக்கும் உலக்கையின் மீதும்,உரலின்மீதும், முறத்தின்மீதும், வாயிற்படியின் மீதும்,அம்மிக்கல்லின் மீதும் இருந்தால் செந்தாமரை மலரில் வசிக்குந் திருமகள் கடாக்ஷம் விலகுமென்று நினைத்து ஒருபோதும் உட்காரமாட்டார்கள்.

மாதர்கள், தங்கள் கணவர்கள் மிகவும் மனமகிழ்ச்சி கொண்டுவக்கும்படி, ஆடையாபரண முதலியவற்றால் தங்களை யலங்கரித்துக் கொள்வார்கள். தங்கள் கணவர்கள் பிரிந்திருக்குங் காலத்தில் தங்களை யவ்வா றலங்கரித்துக் கொள்ளமாட்டார்கள்.

தங்கள் கணவர்களுடைய வயதானது குறையு மென்று பயந்து, அவர்களுடைய பெயர்களைத் தங்கள் வாக்கினாற் சொல்ல மாட்டார்கள். நற்குணமமைந்த கணவர்களை யிகழ்ந்து அவர்கள்மேற் குற்றஞ் சொல்லி யலர் தூற்றுகின்ற துஷ்டப் பெண்களுடைய முகத்தையும் பார்க்கமாட்டார்கள்.

கற்பிற்சிறந்த மாதர்கள், மிகுந்தவழகைத் தரும் மஞ்சளைத் தேகமுழுமையும் பூசிக்கொள்வார்கள். தன்னையன்பின் மிகுதியாற்கலந்த நாயகனது மிச்சிலைக் கிடைத்தற்கரிய தேவாமிர்தமென வியந்து அன்புடனே புசிப்பார்கள்.

கற்பிற்சிறந்த மாதர்கள். தங்கள்கணவர்களுடைய மனோபீஷ்டங்களை அவரெடுத்துச்சொல்லுவதன் முன்னமே குறிப்பினாலரிந்து அவர் மனமுவக்கும்படி நடப்பார்கள். குற்றமற்ற தங்கள் கணவர்க ளுட்கார்ந்திருக்கும் போதல்லாமல் மற்றக்காலங்களி லவருக் கெதிரே யுட்கார்ந்திருக்கவுமாட்டார்கள்.

கற்பிற்சிறந்த மாதர்கள், தங்கள் கணவர்கள் மிகுந்த வழக்கில்லாதவரா யிருந்தாலும், தரித்திரத்தாற்பீடி க்கப்பட்டவராயிருந்தாலும், நாளுக்குநாள் விருத்தியா கத்தக்க வியாதியை யுடையவராயிருந்தாலும், பலவீன ராயிருந்தாலும், தகுதியற்ற மூப்பினரா யிருந்தாலும், அவர்களைத் தங்கள் வாக்கினால் யாதொரு பழுதுஞ் சொல்லாமல் அவரிஷ்டப்படி நடப்பார்கள்.

குற்றமற்ற கற்பிற்சிறந்த மாதர்கள் தங்கள் கணவர் தங்களைக் கோபத்தினாற் பலவாரிகழ்ந்து பேசினாலுந் தாங்களதற்கு எதிர்மொழியாக யாதொன்றுஞ் சொல்லமாட்டார்கள். தங்கள் தேகம் வருந்தும்படித் தங்களையடித்தபோதிலும் தாங்களவர் கண்மேற் கோபித்து அதனால்வரும் குற்றத்திற்காளாகமாட்டார்கள். தகாதகாரியங்களாயிருந்த போதிலுந் தங்கள் கணவர்கள் செய்யென்று சொல்வார்களாயின் அவர்கள் சொல்லிமுடிப்பதின் முன்னமே மனமகிழ்ச்சியோடு செய்துமுடித்தேனென்று சொல்லி யவ்வாரேசெய்து முடிப்பார்கள்.

கற்பினையுடையமாதர்கள். போஜனங்களைப் புசிக்குங்காலத்திலும் தங்கள் நாயகர் தங்களை யழைப்பார்களாயின் உடனே போஜனத்தைவிட்டு அவர்களிடத்திற்கு வருவார்கள். தங்களைப்பெற்றுவளர்த்த மாதா பிதாக்கள் தாங்களன்புடனே பெற்ற புத்திரர்களாகிய இவர்களிடத்திற் றாங்கள் கொண்டிருக்கு மன்பைப் பார்க்கிலுங் கணவரிடத்து மிகுந்த வுள்ளன்புடையவ ராயிருப்பார்கள்.

கற்பிற்சிறந்த மாதர்கள் பூப்படைந்து வீட்டினி ன்றும் நீங்கிப் புறத்தே வசிக்கின்ற மூன்று நாள்களிலும் தங்கள் கணவர் தங்கள் முகத்தைப் பார்க்கும்படி யெதிரில் வரமாட்டார்கள். வீட்டிற்குள் பிரவேசியார்கள். ஒருவேளை பொஜனமேயன்றி மறுவேளைபோ ஜனஞ் செய்யமாட்டார்கள். தங்கள் கணவனெதிரில் நின்று வார்த்தை சொல்லார்கள்.தஙலகளையொத்த பூப்படைந்த மாதர்களுடன் சேரமாட்டார்கள். கிரமப்படி குற்றமற்ற நான்காவது நாளில் சுத்தஜலத்தில் ஸ்நான ஞ்செய்து எல்லாநன்மையு முண்டாகும்படி தங்கள் கணவரை யன்புடனே மனதில் தியானித்துகொண்டு சூரியபகவானைத் தரிசனஞ்செய்வார்கள்.

தங்களுக்குரிய கணவரை வந்தனை வழிபாடுகள் செய்து வணங்குவதையே வுயர்ந்த விரதமாகக்கொள்ளாமல், தேவதாபூஜை முதலியவற்றைச் செய்யுமாதர்கள் கொடிய நரகவாதனையை யனுபவிப்பார்கள். தங்கள் கணவர்மேல் குற்றங்களைச் சொல்லிப் பலறரியத் தூற்றி, அவர்கள் மேலன்பில்லாதவராய்க் கோபித்தெதிர்த்துப் பேசும் மாதர்கள், மருசனனத்தில் பெண்ணாயாகப் பிறப்பார்கள்.

தங்களை மருவிச்சேர்ந்த கணவர் தங்களைக்கோபி ப்பார்களாயின், அதுகாலை யவர்கட் கெதிரிலிருந்து உதாசீனமாகப் பேசுமாதர்கள் புலியாகப் பிறப்பார்கள். பிறபுருஷர்களி னுருவலக்ஷணங்களைக்கண்டு வியந்து பேசுமாதர்கள் பைசாசமாகப் பிறப்பார்கள். தங்கள், கணவர் பசியுடனிருக்க அவர் பசியைத் தணிக்காமல் போஜனஞ் செய்யுமாதர்கள் பன்றியாகப் பிறப்பார்கள்.

தங்களை மணந்த கணவரிறப்பாராயின் தங்கள் உயிரையு முடனே விடும்படி நினைக்குமாதர்களே புண்ணி யசாலிகளாவார். அவ்வா இறந்த கணவரைத் தகனஞ் செய்யு மக்கினியி லவர்மீதிருக்கு மன்பின் மிகுதியினாலே விழுந்துயிரைவிடு மாதர்கள், தங்கள் கணவர்களுடனே சுவர்க்கலோகத்தில் விளங்கி வாழ்வார்கள்.

கற்பிற்சிறந்த மாதர்கன், தங்கள் கணவரிருப்பா ராயி னவர்களுடன் பின்மிகுதியினா லக்கினியிற் குதித்துத் தங்களுயிரையும் விடுவார்களாயின், அக்கணவர் மகாபாவிகளாக யிருந்தபோதிலும், அவர்கள் இயமன் வருத்தாமல் விட்டுவிடுவான். தங்கள் கணவருடனே கூடத் தங்களுயிரையும் விட்டு விடுமாதர்கள், தங்கள் கணவருடனே சேர்ந்து தேவருலகத்தில் நீடூழிகாலம் போகபாக்கியங்களை அனுபவித்து வாழ்வார்கள்.

அழகிய பொன்னாபரணமனைத்து மொருங்கே யிழந்த கைம்பெண்கள், தங்கள் கூந்தலைத் தங்களுக் குள்ள வழகுகெடும்படி யுடனே மழித்துவிடாமல் கூந்தலை முன்போலவே முடித்திருப்பார்களாயின் அவர்களுடைய கணவரை இயமதூதர்கள்
பாசக்கயிற்றினாலே கட்டி வருத்துவார்களென்று மேலோர்கள்
சொல்லுவார்கள்.

மாதர்கள் தங்கள் கணவரிறப்பாராயின் பகற்காலத்தில் ஒரேவேளை போஜனஞ்செய்து தாம்பூலதாரண த்தையும், சுகமான படுக்கையையும் நீக்கித் தரையிலே படுத்து நித்திரை செய்து பலவகைப்பட்ட விரதங்க ளையும் அன்புடனே யனுஷ்டிக்கவேண்டும்.

***********

புராணங்கள் கூறும் கற்பு ஒழுக்கத்தை இப்போது ஒருவரும் பின்பற்றுவதில்லை, ஆனால் புராணங்கள் கூறும் ஆபாசமிக்க தேவர்களை இறைவனாகவும் கடவுளர்களாகவும் பாவித்து வணங்குவது,பூசை வழிபட்டுவருவது தொடர்கிறது.இது கேலிக்குரியதுதானே?!

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here