மாபெரும் மருந்து மாபியாக்களின் கட்டுப்பாட்டில் உலக நாடுகள் உள்ளனவா?

 

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய  வடிவத்திற்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டது. அது உலகெங்கும் பரவத் தொடங்கி  லாக்டவுன், முகக் கவசம், சமூக இடைவெளி, சானிடைசர், அதனைத் தொடர்ந்து அனைவருக்குமான தடுப்பூசி என ஒரு புதிய ‘உலக ஒழுங்கமைப்பை’ ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோவிட் தொற்று பரவத் தொடங்கிய முதல் அலையின் போது, கிருமியைப் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் பெரும் குழப்பமும், உயிரிழப்புகளைக் காட்டி பெரும் பீதியும் ஏற்படுத்தப்பட்டது. சளி, காய்ச்சல், நுரையீரல் பாதிப்புகளுக்கு ஏற்கனவே உள்ள மருந்துகளை வைத்து அலோபதி மருத்துவம் சமாளிக்க முயன்றது. சில நாடுகள், குறிப்பாக சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் தங்களின் பாரம்பரிய மருத்துவமுறைகளை பயன்படுத்தி குறிப்பிடத்தக்க பலனையும் பெற்றன.

இந்த வைரஸை கட்டுப்படுத்த/ குணப்படுத்த கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியாத மருந்து நிறுவனங்கள் ஏழே மாதத்தில் இதற்கான தடுப்பூசியைத் தயாரித்தனர். அமெரிக்காவின் பைசர், மொடர்னா, ஜான்சன் & ஜான்சன், சீனாவின் சினோவேக், பிரிட்டனின் கோவிஷீல்ட், ரசியாவின் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் அவசரப் பயன்பாட்டுக்கு வந்தன. இவை 2020 – ஆம் ஆண்டு இறுதியில் இருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தொற்றின் இரண்டாம் அலையும் அப்போதுதான் தொடங்கியது.

 

கொரானா பெரும் தொற்று பரவ தொடங்கியவுடன் அமெரிக்க அரசானது தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிக்காக பைசர் நிறுவனத்திற்கு 2 பில்லியன் டாலர்களும், மொடர்னா நிறுவனத்திற்கு இரண்டரை பில்லியன் டாலர்களையும் அளித்தது. மொடர்னா நிறுவனமானது அமெரிக்க அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Health (NIH) – உடன் இணைந்து ஆராய்ச்சியை மேற்கொண்டது. தடுப்பூசி கண்டறியப்பட்டவுடன் NIH இன் 3 விஞ்ஞானிகளுக்கு எந்த அங்கீகாரமும் அளிக்காமல் காப்புரிமையை அந்த நிறுவனமே முழுமையாக கைப்பற்றியது.

இப்படியாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் அடக்கவிலை அதிகபட்சமாக ஒரு டோசுக்கு 3 டாலர்கள்தான். ஆனால் இதை முப்பதிலிருந்து நாற்பது டாலர் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கிறது.  2020இல் நட்டத்தை சந்தித்த இந்த நிறுவனம் தடுப்பூசியின் வருகைக்குப்பின் ஒரே ஆண்டில் 7 பில்லியன் டாலர்களை ( 50 ஆயிரம் கோடி) லாபமாக குவித்தது.

அடுத்து பைசர் நிறுவனம் குறித்துப் பார்ப்போம். இந்த நிறுவனத்தின் தடுப்பூசிக்கு உற்பத்தி செலவு ஒரு டாலராக இருக்கையில் அது 30 டாலருக்கு  (30 மடங்கு லாபத்திற்கு) விற்கப்படுகிறது. பைசர் நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டின் லாபம் 8 பில்லியன் டாலராகும். அது 2021- ல் 19 பில்லியன் டாலர் ( 2 மடங்குக்கு மேல்) இலாபத்தை ஈட்டியது. சமீபத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதாக தகவல் வெளியானவுடன் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் பைசர் மற்றும் மொடர்னாவின் பங்குச் சந்தை மதிப்பு திடீரென உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.

 அவசரப் பயன்பாட்டுக்கான ஒப்புதலைப் பெற்றது எப்படி?

அமெரிக்காவின் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழுவானது Food and Drug Administration (FDA)விடம், தடுப்பூசிக்கான ஆய்வுகள், ஒப்புதல் வழங்கியதற்கான தரவுகளை கோரினர். பதில் ஏதும் அளிக்கப்படாத நிலையில், ஆரோன் சிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த தரவுகளை முழுமையாக வெளியிட 55 ஆண்டுகள் அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் FDA தெரிவித்தது.

அதாவது, பைசர் நிறுவனம் சார்பில் 3,30,000 பக்க ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மாதந்தோறும் 500 பக்கங்கள் வீதம் 55 ஆண்டுகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளது ஆனால் இத்தனை பக்க தரவுகளையும் 108 நாட்களில் எப்படி படித்து முடித்து ஒப்புதல் வழங்கப்பட்டது என ஆரோன் கேட்பது நியாயம்தானே? அனைத்திலும் வெளிப்படைத் தன்மை உள்ளது என FDA கூறிவந்தது அனைத்தும் பொய் என நிரூபணமாகிறது அல்லவா?

உலகம் முழுவதும் விற்பனையாகும் பெரும்பாலான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவின் FDA அங்கீகாரம் பெற விரும்புகின்றன.  அதைப் பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல. இப்படி மருந்துகளுக்கான ஒப்புதல் வழங்குதல் மற்றும் மருந்து தயாரிப்பு  நிறுவனங்களை கண்காணித்தல் போன்றவற்றில் கறார் நிறுவனமாக அறியப்பட்ட FDA -ன்  இன்றைய நிலை இதுதான். அதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலர் விலகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இப்படியாக ஆய்வை முழுமையாக முடிக்காமலே அவசர பயன்பாட்டு ஒப்புதலைப் பெற்றவுடன், பலம் வாய்ந்த இந்த மருந்து நிறுவனங்கள், தடுப்பூசிகளை விற்பனை செய்வதற்காக  மோசமான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் விதித்து பல்வேறு நாடுகளின் அரசுகளை மிரட்டிப் பணிய வைத்தன.

பைசர் நிறுவனமானது, பிரேசில், அல்பேனியா, கொலம்பியா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுடன் ரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது, தடுப்பூசியினால் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட எத்தகைய விளைவுகளுக்கும் தங்களை பொறுப்பாக்கக் கூடாது என்பதுடன் சில நாடுகளின் இறையாண்மையையே அடகு வைக்கும் வகையில் மிரட்டி கொடுமைப் படுத்தியது என்றே கூறலாம். இப்படியாக தனக்கான முழு பாதுகாப்பையும், அதே நேரத்தில் அதிகபட்ச லாபத்தையும் உத்திரவாதப் படுத்திக் கொண்டது.

 பில்கேட்சும், தடுப்பூசியும்!

பில்கேட்ஸ் 2010 ஆம் ஆண்டு பைசர் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனார். அமெரிக்க அரசு, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றுடன் பில்கேட்ஸ் இணைந்து உருவாக்கிய Global Alliance for Vaccine & Immunisation (GAVI) எனும் அமைப்பின் மூலமாக தடுப்பூசிகளை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் நடந்தது. 2010 ல் அவர் பேசும்போது, அடுத்த 20 ஆண்டுகளில் இதன்மூலம் 200 பில்லியன் டாலர்கள் ( 14 லட்சம் கோடி) லாபம் ஈட்டுவதென இலக்கு உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்து 2015 ல் பேசும்போது, உலகில் புதிய வகை வைரஸ் தொற்றுகள் ஏற்படும் என்றும் அதற்கு தடுப்பூசிகள்தான் தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார். அடுத்து, பரிசோதனைக்கான Test kit கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தினார். தடுப்பூசிகள் தயாரிக்கும் மூன்று முக்கிய நிறுவனங்களின் பங்குதாரரானார். இப்படி திட்டமிட்ட நகர்வுகளின் மூலம் தனது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கி நடத்தியபோது, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி கோப்புகளை காலி செய்யும் வைரஸ்களை உருவாக்கி கையும், களவுமாக மாட்டியவர்தான் இந்த திருவாளர் பில்கேட்ஸ்.

 மருந்து மாபியாக்களின் பிடியில் உலகம் செல்கிறதா?

அமெரிக்காவின் மருந்து நிறுவனங்கள் அங்கு நடக்கும் தேர்தல்களில் பல மில்லியன் டாலர்களை கொட்டுகின்றன. 2020 தேர்தலில் 11 மில்லியன் டாலர்களை கட்சிகளுக்கு வழங்கின. கடந்த 23 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 5 பில்லியன் டாலர்களை தேர்தல் சமயத்தில் நன்கொடையாக வழங்கியுள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பல மடங்கு லாபம் ஈட்டுவதே இந்த நிறுவனங்களின் நோக்கமாகும்.

இது மட்டுமின்றி மருந்து கட்டுப்பாடு மற்றும் விற்பனை உரிமை வழங்கக்கூடிய Center for Disease Control and Prevention (CDC) மற்றும் FDA போன்றவற்றில் உயர் பொறுப்பில் உள்ளவர்களையும், World Health Organisation (WHO) போன்ற சர்வதேச நிறுவனங்களையும் ஆட்டிப் படைக்கும் சர்வ வல்லமை பெற்றவையாக இந்த மருந்து நிறுவனங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. WHO – க்கு பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் பெரும் புரவலராக உள்ளது. கடந்த வருடத்தில் 455 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் வியாபார யுக்திதானே இது!

 தடுப்பூசிகள் – மக்களை காக்கவா, லாபத்தை குவிக்கவா ?

இந்த பரிசோதனை தடுப்பூசியை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சகட்டுமேனிக்கு அனைவருக்கும் செலுத்தி அதில் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது இன்றைய நவீன உலகம். மனிதகுல வரலாற்றிலேயே மிகத்தீவிரமாக மருத்துவம் எனும் பெயரில் மனிதர்கள் மீது சோதனை நடத்தப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை நிராகரித்த ஆப்பிரிக்காவின் தான்சானியா, ஹைத்தி, புருண்டி உள்ளிட்ட ஐந்து நாடுகளை சேர்ந்த அதிபர்கள் மர்மமான முறையில் மரணித்துள்ளனர். மடகாஸ்கரின் அதிபரை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பியுள்ளார். இதில் ஈடுபட்ட வெளிநாட்டவர் உள்ளிட்ட ஆறுபேருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவையெல்லாம் பெரும் மருந்து நிறுவனங்களின் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாக எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் கார்ப்பரேட் கம்பெனிகள், கனிமங்கள், பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாட, தங்களது நோக்கங்களை நிறைவேற்ற பல்வேறு கொலைகளையும் ஆட்சி கவிழ்ப்புகளையும் பல நாடுகளில் நிகழ்த்தியுள்ளனர் என்பதை நாம் அறிவோம். தங்களின் இலாப வெறிக்காக எதையும் செய்யும் ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் கயவர்கள்தானே இவர்கள்.

 திட்டமிட்டு பீதியில் ஆழ்த்தப்படும் உலகம்!

2021 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் கொரோனாவால் உலகில் ஏற்பட்ட உயிரிழப்பு 3,14,687. ஆனால் மலேரியாவால் உயிரிழந்தவர்கள் 3,40,584. ஆல்கஹால், தற்கொலை மரணங்களும் இதைவிட அதிகம்தான்.  கேன்சரால் 11 லட்சம் பேர் இறந்துள்ளனர். எனினும் கொரோனா  சோதனைகள், உயிரிழப்புகள் குறித்த செய்திகள் மட்டும் ஊடகங்களில் திட்டமிட்டு ஊதிப் பெருக்கப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸின் புதிய வடிவமான கோவிட் 19, இயற்கையாக உருவானதோ அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதோ, எப்படியாக இருப்பினும் இதை காரணமாக வைத்து அதீத உயிர் பயத்தை ஏற்படுத்தி, தடுப்பூசிதான் தீர்வு என்ற தங்களின் குரலை ஒட்டுமொத்த உலகின் குரலாக ஒலிக்க வைத்து, அறிவியல் எனும் பெயரால் அதிலும் குறிப்பாக மருத்துவம் எனும் பெயரால் உலக மக்களின் ஆரோக்கியத்தை விலையாக கேட்கிறார்கள் இந்த மருந்து மாபியா கிரிமினல்கள்!

இப்படி அறிவியலின் பெயரால்தான் அணு உலைகள், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற நாசகார அழிவுத்திட்டங்களுக்கு பின்னே இருப்பது சுற்றுச்சூழல் அழிவும், மக்களின் வாழ்வாதார பாதிப்பும், உடல்நலக் கேடுகளும், கார்ப்பரேட் வணிகக் கொள்ளையும்தான். வளர்ச்சியின் பெயரால் இதையெல்லாம் செய்யும் இந்த பலம் வாய்ந்த கார்ப்பரேட் கிரிமினல்களுக்கு எதிரான ஒரே பேராயுதம் மக்கள் புரட்சிதான்!

செய்தி ஆதாரங்கள்:

https://www.wionews.com/gravitas

CRIMINAL DRUG CARTEL: FDA refuses to release Pfizer covid jab data until the year 2076

ஆக்கம் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here