மாணவி லாவண்யா மரணம் | பாஜக சங்கிகள் பொய் பிரச்சாரம்

நாட்டின் பெரும்பான்மை மக்களை கல்வி கற்கும் உரிமையில் இருந்து தடுத்து உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளை கொண்ட பார்ப்பனப் பேரரசை நிறுவ துடிக்கும் இந்த பயங்கரவாத கூட்டம் பல்வேறு பொய் செய்திகளை பரப்புகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டுவரும் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் நடந்த தற்கொலையை, மதமாற்றம் செய்வதற்காக கட்டாயப்படுத்தியதால் நடந்த தற்கொலை என்று பித்தலாட்டம் செய்கின்றனர் ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்.

இவர்களின் யோக்கியதை என்ன?
பல நூற்றாண்டு காலமாக நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி உரிமையை மறுத்து தன்னை மட்டுமே பிறரை விட மேலானவர்களாக நிலைநிறுத்திக் கொண்ட பார்ப்பன கும்பல் மீண்டும் தனது கேள்விக்கிடமற்ற ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவ துடிக்கிறது.

நாட்டின் பெரும்பான்மை மக்களை கல்வி கற்கும் உரிமையில் இருந்து தடுத்து உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளை கொண்ட பார்ப்பனப் பேரரசை நிறுவ துடிக்கும் இந்த பயங்கரவாத கூட்டம் பல்வேறு பொய் செய்திகளை பரப்புகின்றனர். நல்லிணக்கத்துடன் வாழ்கின்ற மக்களுக்கு இடையில் சாதி, மத, இன வெறியை தூண்டி நிரந்தரமாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். இவர்களின் கட்டுக்கதைகளை பரப்புவதற்கு என்று போலி செய்திகளைப் பரப்புகின்ற ஐந்தாம் படைகளும், கூலி பிரச்சாரகர்களும் நிரம்பி வழிகின்றனர். இறப்பதற்கு முன்னால் ஒரு நீதிபதியின் முன்பு கொடுக்கப்படுகின்ற confession statement தான் சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும்.

யாரோ ஒருவர் தனது மொபைலில் படம் எடுத்து அதனை எடிட் செய்து இதனை ஒரு ஆதாரம் என்று முன்வைத்தால் அதை ஏற்றுக்கொள்வது பாமரத்தனம் ஆகும்.
மாணவி லாவண்யாவின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் இது குறித்து எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்களுக்கும், இதுபோன்ற பொய் பிரச்சாரங்களை கண்டும் காணாமல் கடந்து போகும் சமூகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கேள்வி எழுப்புகிறார்.

தோழர். வில்லவன் ராமதாஸ்.

பாருங்கள்! பகிருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here