தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதை வாழ்வுக்காக இறுதி நாள் வரை போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 48 வது நினைவுநாள் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 24-12-2021 அன்று கடைபிடிக்கப் பட்டது. சென்னை சேத்துப்பட்டு மகஇக தகவல் பலகையில் பெரியார் பங்களிப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. சமுக ஊடகங்களில் சென்னை மகஇக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை மகஇக சார்பில் பெரியார் மேற்கோள்கள் பிரசுரம் தயாரித்து விநியோகிக்கப்பட்டது. சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

திருச்சி மகஇக மாவட்ட செயலர் தோழர். ஜீவா தலைமையில் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் தோழமை அமைப்பு முன்னணியாளர்கள் ஊர்வலமாக வந்து மத்திய பேருந்து நிலைய பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச்செயலாளர் தோழர். கோவன், செயற்குழு உறுப்பினர் தோழர். சத்யா மற்றும் கலைக்குழு தோழர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் உருவச்சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணைசெயலாளர் தோழர்
இராவணன் தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தஞ்சை மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டசெயலர் மதியழகன், எழுத்தாளர் தஞ்சை சாம்பான் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவையில் மக்கள் கலை இலக்கிய கழக பொருளாளர் தோழர். சித்தார்த்தன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேலூர் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் கையில் மாலையுடன் நினைவேந்தல் அறிவிப்பு பதாகையை பிடித்தபடி பேருந்து நிறுத்தத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி சுமார் இருபத்தைந்து பேர் 100 மீட்டர் தூரம் நடந்துசென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சட்டத்தை மீறி பேரணி நடத்தி விட்டதாக வேலூர் போலீசார் தாண்டி குதித்து பரபரப்பூட்டினர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். வாணி ஆகியோர் பெரியாரை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

திருச்சி

சென்னை

தஞ்சாவூர்

வேலூர்

கடலூர்

கோவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here