அன்பார்ந்த வாசகர் தோழர்களே!

மக்கள் அதிகாரம் இணையதளம் துவங்கி ஏறக்குறைய ஒரு ஆண்டாகிறது. எமது அரசியல் தலைமையில் ஏற்பட்ட பிரச்சினைகளை பயன்படுத்தி எமது இணைய ஊடகமாக இருந்து வந்த ‘வினவு’ இணையதளத்தை சிறு கும்பல் கைப்பற்றி வைத்துக்கொண்டனர். வினவு தளத்தை துவங்கியவர்கள் மற்றும் அமைப்பு தோழர்களின் 13 ஆம் ஆண்டு கால உழைப்பு களவாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் கம்யூனிச இயக்கங்களில் தோல்வியடைந்து போன ‘இடது சாகச’ வழியை கைகொள்கிறோம் என்ற பெயரில் குறுங்குழுவாத கும்பலாக செயல்பட்டு வருவதையும் எமது தோழமை அமைப்புகள் பற்றி இழிதகமை கொண்ட அவதூறுகளை பரப்புவதையும் அறிவீர்கள்.

மற்றொரு புறம் கார்ப்பரேட்-காவி பாசிசம் நாட்டை ஏறித்தாக்கி வரும் நிலையில் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய ஊடகங்கள், அவை கார்ப்பரேட் ஊடகங்களாக இருப்பதனால், அவ்வாறு இயங்குவதில்லை. மாறாக, கார்ப்பரேட்-காவி பாசிச சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

இந்தியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை சுமார் 30 கோடியை தொட்டுவிட்டது. எனினும் அவை மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தொட்டு பேசுவதை காட்டிலும் இரண்டாம் பட்ச, மூன்றாம் பட்சமான  சமையல், பயணம், அழகு கலை, சினிமா என மக்களின் அரசியல் சாராத விஷயங்களை கொண்டு இயங்குகின்றன. இதனால் அடிப்படையான மக்கள் தேவைகளைப் பற்றி காத்திரமாக விவாதிக்காத கோடிக்கணக்கான பார்வையாளர்கள் அவற்றுக்கு கிடைத்துள்ளனர்.

இதற்கிடையில், RSS – BJP உள்ளிட்ட சங் பரிவார் கும்பலோ இந்த இணையவெளியை ‘திறமையாக’ கையாள்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள் விட்டெறிந்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை கையில் வைத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்புவதற்கு பெரும் தொகை செலவு செய்து வேலைக்கு ஆட்களை நியமித்துள்ளனர். இஸ்லாமிய வெறுப்பு, பார்ப்பனிய மவுடீக மூடநம்பிக்கைகள், பொய் செய்திகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை பரப்புவதையே தங்கள் பணியாக செய்து வருகின்றனர். பார்ப்பன சாம்ராஜ்யத்தை விரைவில் நிறுவ வேண்டும் என்ற தங்கள் சதித்திட்டத்திற்கு ஏற்றாற்போல் மக்கள் மனநிலையை தகவமைக்கின்றனர்.

இந்த  சிறிதும் ஜனநாயகம் அற்ற இருள் சூழ்ந்த நிலையில் தான் கார்ப்பரேட்-காவி பாசிச எதிர்ப்பு என்பதை நோக்கமாகக் கொண்டு ‘மக்கள் அதிகாரம்’ இணைய ஊடகம் துவங்கப்பட்டது. இதுவரை ஊடகப் பணியிலோ, இணையதளம் இயக்கி அனுபவம் இல்லாதவர்களை கொண்டு துவங்கப்பட்டது. எமது புதிய ஊடகம் மிகப்பெரும் இணைய கடலில் ஒரு துளியாக விழுந்துள்ளது. கடலின் போக்கை இந்த சிறுதுளி மாற்றிட முடியுமா என்ற சந்தேகம் இயல்பாக வரக்கூடியது. எனினும் சிறு துளி பெருவெள்ளமாக மாறும் என்ற அறிவியல் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறோம்.

மேலும் அதனை நாங்கள் மட்டுமே செய்து விடுவோம் என்ற தலைகனத்துடன் செயல்படவோ, சொந்தக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆங்கில ஊடகங்களில் வருகின்ற செய்திகளை மையமாக வைத்து எழுதிவிட்டு பித்தலாட்டம் புரியவோ (plagiarism), நாங்கள் தயாராக இல்லை. மாறாக பாசிச அபாயத்திற்கு எதிராக பரந்தபட்ட ஜனநாயக, புரட்சிகர சக்திகளின் ஒற்றுமை இல்லாமல்  தனித்து செய்ய இயலாது என்பதை தன்னடக்கத்துடன் புரிந்து வைத்துள்ளோம்.

எண்ணற்ற இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், காவி பாசிசத்திற்கு எதிராகவும், மோடி அரசின்  மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு கார்ப்பரேட்-காவி‌ பாசிசத்திற்கு எதிராக செயலாற்ற மக்களைத் தூண்டும் வேலைகளில் ஈடுபட விழைகிறோம்.

இந்த பயணத்தில் தங்களது ஆதரவுடன் சில லட்சக்கணக்கான மக்களை கடந்த ஓராண்டில் சென்றடைந்திருக்கிறோம். எமது யூடியூப் சேனலில் ஆயிரம் வாசகர்களை இணைத்து கொண்டு முன்னேறி செல்கிறோம். இது எமது பயணத்தில் சிறிதளவு வெற்றிதான். எனினும் தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்புடன் பயணிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உழைக்கும் மக்களுக்கான இணைய குரலை உயர்த்தி பிடிப்போம்!

உத்தரவாதமான அலுவலகங்கள், மாதந்தோறும் கிடைக்கும் வருவாய், பல தோழர்களின் உழைப்பில் உருவான பிரபலம் போன்ற எதுவும் இன்றி அன்றாடம் உழைக்கும் மக்களுடன் மக்களாக பணியாற்றிக் கொண்டு சமூக விடுதலைக்காக பாடுபடும் ‘மக்கள் அதிகாரம்’ இணையதளத்தை ஆதரியுங்கள்! பரப்புங்கள்!

தொடர்ந்து எமது முகநூல் பக்கம் மற்றும் யூட்யுப் தளம் ஆகியவற்றை Subscribe செய்யுங்கள்! தங்களுடைய ஒவ்வொரு நண்பருக்கும் அதனை பரப்புங்கள்!

உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஒன்றிணைவோம்!

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் இணைந்துக் கொள்ளுங்கள்…

FACEBOOK :

https://www.facebook.com/peoples.powerTN

YOUTUBE

https://www.youtube.com/channel/UCR1v0DCZwMniQseXpjEidJA

INSTAGRAM:

https://instagram.com/makkalathikaram_media?utm_medium=copy_link

TWITTER :

https://twitter.com/peoplespowerTN?t=1w9i81Q_6IhdHmO1Hvl2IA&s=09

NEWSHUNT :

https://profile.dailyhunt.in/peoplespower2021?s=a&ss=pd&uu=0x41ac947b68027e36

SHARE CHAT

https://sharechat.com/profile/peoplespower?d=n

PINTEREST

https://pin.it/6mSrCWK

உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் எங்களை தொடருங்கள். நண்பர்கள், உறவினர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக புரட்சிகர சக்திகள் அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here