அரைத்த மாவை அரைக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள் மத்தியில் புதுமையான பாணியில் உண்மையான செய்திகள் ஆதரவு தாரீர்!!
அன்பார்ந்த வாசகத் தோழர்களே! வணக்கம்!
மக்கள் அதிகாரம் டாப் 10 செய்திகள் கடந்த 10 நாட்களாக வெளி வருவதை அறிவீர்கள்.
ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் பிடிக்கும் அடங்கி கிடப்பதால், மக்கள் போராட்டங்களையோ கார்ப்பரேட்டுகளின் பகற் கொள்ளையையோ பார்ப்பன பாசிஸ்டுகளின் அதிகார வெறியாட்டங்களையோ, அடக்குமுறைகளையோ வெளியிடுவதில்லை!
தனது வர்க்கத்தின் நலனுக்கேற்ப செய்திகளை வெட்டியும், சுருக்கியும் வெளியிட்டு பொய் பிரச்சாரத்தை தாக்குதல் பாணியில் நடத்துகின்றனர்.
இந்த சூழலில் மக்கள் அதிகாரம் செய்திகள் மிகவும் முக்கியத்துவத்தை பெறுகிறது.
வேறு எந்த ஊடகத்திலும் வராத செய்திகள் புதிய கோணத்தில் வெளி வருகிறது.
தங்கள் ஆதரவை நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் மத்தியில் பரப்புவதின் மூலம் தெரிவியுங்கள்.
சுதந்திரமான உண்மையான ஜனநாயக ஊடக மையத்தை உருவாக்குவோம்!
மாற்றுப் பாதையில் பயணிப்போம்!