The spinster என்கிற ஒரு மலையாளக் குறும்படம். 36 நிமிடங்களில் ஒரு கன்னிப்பெண்ணின் வாழ்வைச் சொல்கிற கலைப்படைப்பு. கன்னிப்பெண் காமாட்சியாக வரும் நந்திதா தாஸ் அவர்களின் உயிர்ப்பு மிக்க நடிப்பு எப்போதும் போல் உருக்கி விடுகிறது.
அக்கா இருக்க தங்கையும், தம்பியும் திருமணம் செய்து கொள்ளும் போது ஒரு 30 வயது கடந்த பெண் படுகிற வாதைகள் நந்தியின் முகத்தில் அலைகின்றன.
90 கிட்ஸ் என்று இந்தச் சமூகம் திருமணத்திற்குப் பெண் கிடைக்காத ஆண்களையும், ஆண் கிடைக்காத பெண்களையும் கேலிச் சித்திரமாக்கி இருக்கிறது. பொருளாதாரம், பண்பாடு, அரசியல், ஜாதி போன்ற காரணிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இவர்கள் கார்ட்டூன் பொம்மைகளாகப் பார்க்கப்படுகிறார்கள்.
யாரும் வேண்டாமென்று தன் வீட்டிற்கே வந்து தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் காமாட்சியின் மேல் விழுகிற அழுத்தத்தைத்தான் சிங்கிள்ஸ், 90 கிட்ஸ் போன்ற சொற்கள் மூலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
தான் மட்டுமே வாழப் பிறந்திருக்கிறோம் என்கிற சுயநலப் பிடியில் கட்டுண்டவர்கள் பிறரின் உணர்வுகளை, உணர்ச்சிகளை மதிக்கப்போவதில்லை.
இந்திய சமூகத்தில் திருமணம் என்கிற சூதாட்டம் தருகிற பின் விளைவுகளைக் காணச் சகியாமல் கடந்து போக வேண்டியுள்ளது.
இந்த the splinter படம் நமக்குள் இருக்கும் சகிப்பைக் கசப்புடன் நமக்கு முன் எடுத்து வைக்கிறது.
பின் குறிப்பு:
நான் 70 கிட்ஸ் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
நன்றி: Naanarkaddan sara.
முகநூல் பகிர்வு.