ட மாநிலங்களில் தற்போது துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பட்டி கோட்வாலி பகுதியில் உள்ள ஜஜ்னிபூர் கிராமத்தில் துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தொட்டால் தீட்டு — கொல்

பண்டிகையின் போது ஜஜ்னிபூர் கிராமத்தில் உள்ள ஜக்ரூப் கௌதம் எனும் நபர் துர்கா தேவி சிலையின் பாதத்தை தொட்டு வணங்கியுள்ளார். ஒரு தலித் எப்படி சாமி சிலையை தொடலாம் என்று கூறி ஜக்ரூப் கௌதம்-ஐ ஆதிக்க சாதி வெறியர்கள் கொடூரமாக அடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: முடிவு கட்டு கருவறை தீண்டாமைக்கு!

ஆதிக்க சாதி வெறியர்களின் தாக்குதலில் இருந்து சிலர் கௌதமை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இந்துக்கள் அனைவரும் ஒன்றா?

இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இந்த நாட்டில் , இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒருபுறம் உள்ளது. ஆனால் சாதி தீண்டாமை விஷயங்களில் மனுதர்மம் தான் நடைமுறையில் உள்ளது. இத்தகைய மனு தர்மத்தை எரிக்காமல் இந்த நாட்டில் சாதிவெறிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது.

இப்படி ஒரு இடத்தில் நடந்து விட்டது என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் குறை கூறுவது எப்படி சரி? என்று சிலர் கேள்வி கேட்கலாம். ஆனால் இந்தியா முழுவதும் இது போன்ற நிலை தான் உள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

கர்நாடகாவில் ஜாதி வெறிக்கு வைக்கப்பட்ட ஆப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள ஹுல்லேரஹள்ளி கிராமத்தில், பூத்தமா தேவர் ஆலயத் திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவின் போது சாமி சிலையை தலித் சிறுவன் தொட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர், ஊர் பஞ்சாயத்தில், சிறுவனின் குடும்பத்திற்கு ரூ 60 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த சிறுவனின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளியும் வைத்து விட்டனர்.

இதையும் படியுங்கள்: சாதி-வருண அமைப்பே மக்களைப் பிளவுபடுத்தும் பயங்கரவாதம்!

இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள இந்து கடவுளின் படங்களையும் பூஜைப் பொருட்களையும் அகற்றிவிட்டு அம்பேத்கர் படத்தை வைத்து இனிமேல் நமக்கு அந்தக் கடவுள் — இந்த கடவுள் — எந்த கடவுளும் இல்லை; அம்பேத்கர் தான் நமக்கு கடவுள் என்று பேசும் காட்சிகள் வலைத்தளத்தில் பரவியது. இது சாதிய பாகுபாட்டின் மீது அடிக்கப்படும் வலிமையான ஆப்பு. இப்படிப்பட்ட ஆப்புகள் பல்கிப் பெருகினால் என்ன ஆகும்?

கோவில் பூட்டை உடைத்த கலெக்டர்

இதைப் பார்த்து ‘விழித்துக் கொண்ட’ மாவட்ட ஆட்சியர் பிற அதிகாரிகள் புடைசூழ அந்த கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர் அவரே கோவிலின் பூட்டுக்களை உடைக்கச் சொல்லியுள்ளார். பிறகு அந்த சிறுவனின் குடும்பத்தினரை கோவிலின் கருவறை வரைக்கும் அழைத்துச் சென்று சாமி கும்பிட செய்துள்ளார்.

பார்ப்பனியத்தின் நால்வர்ண பாகுபாடு என்பது பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் நலனுக்கும் எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும். சங்கிகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டரத்தில் மனுதர்மம் தான் சட்டமாக இருக்கும். அந்த மனு தர்மத்தில் சூத்திர பஞ்சம சாதியினர் படிப்பதற்கு உரிமையில்லை. சூத்திர பஞ்சம சாதியினரின் வாரிசுகள் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாக மாறிட விடலாமா? விடக்கூடாது.

தற்போதும் கூட மனுதர்மத்தின் நால்வர்ணக் கோட்பாடு தான்(எழுதப்படாத சட்டமாக) சமூகத்தில் ஆதிக்கத்தில் உள்ளது என்பதை உணர்ந்து அதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டு

தீண்டாமை சாதிய பாகுபாடு பார்க்கும் தெய்வங்களை வணங்க மாட்டோம் அந்தக் கோவில்களுக்கு வரமாட்டோம் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிப்பு செய்து போராடினால் தான் இந்த ஆட்சியாளர்களுக்கு உரைக்கிறது என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

இந்த வழியில் பெரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்து ராஷ்டிரக் கனவை தகர்த்தெறிய வேண்டும்.

  • பாலன்

செய்தி ஆதாரம்:The wire ; one India; thanthi TV and YouTube channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here