இன்று தேசிய – சர்வதேச அளவில் எண்ணற்ற உழைக்கும் மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாத அளவிற்கு பரந்து விரிந்து செல்கின்றன! அதற்கு முகம் கொடுக்கும் பற்பல காரண காரியங்களில் நாம் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது!
நிலைமைகள் இவ்வாறு இருக்க நடிகை கஸ்தூரி போன்ற வாய்க் கொழுப்பெடுத்த பார்ப்பன ஜென்மங்கள் செய்கின்ற அட்டூழியத்தனங்களைப் பாராமுகமாகக் கடந்து செல்ல இயலவில்லை.
காவிப்படை தலைவன்களில் ஒருவனான அர்ஜூன் சம்பத் ஏற்பாடு செய்த பார்ப்பனர் நலன் சார்ந்த சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு இன மக்களை குறிப்பாக பெண்களை மிகவும் இழிவாகப் பேசியதை அனைத்து ஊடகங்கள் வாயிலாக அறிவோம்!
இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் தெலுங்கு சம்மேளன அமைப்புக்கள் பல்வேறு நகரங்களில் காவல் துறை களில் முறையீடு செய்ததன் விளைவாக கஸ்தூரி மீது எண்ணற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் கஸ்தூரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் அவ்வாறு பேசவே இல்லை’ – என்று சத்தியம் செய்து பொய் கூறினார். ஆனால் வழக்குகளின் தீவிரத் தன்மையை உணர்ந்த கஸ்தூரி தனது வழக்கறிஞர்கள் மூலமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை கோரி விண்ணப்பித்தபோது, அவர் பெயரளவில் ஒப்புக்குச் சப்பாக வருத்தம் தெரிவித்துள்ளார் என்பதையும், அவரது பேச்சு நாலாந்தரப் பேச்சு என்பதனையும், அவை இரண்டு மொழி மக்கள் இடையே மோதலை உருவாக்கக்கூடிய சட்ட ஒழுங்குப் பிரச்சினை உருவாக்கக்கூடிய உரை என்பதனையும் வீடியோ ஆதாரங்கள் மூலமாக நீதிபதி ஊர்ஜிதம் செய்து பிணை மறுத்து உத்திரவிட்டார்.
ஒருபுறம் மதுரை உயர்நீதிமன்றம் பிணை மறுத்து இருந்த நிலையில்,
இங்கே சென்னை எழும்பூர் காவல்துறை சார்பாக பதிவான வழக்கின் மீது சம்மன் அளிக்க போலீசார் சென்றபோது, அவர் வீட்டை பூட்டி விட்டு ஏற்கனவே தலைமறைவாகி விட்ட செய்தி பின்னர் வெளியே தெரிய வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டு காவல்துறை நடிகை கஸ்தூரியைக் கைது செய்ய இரண்டு சிறப்பு காவல் படையை அமைத்து தேடிய போது அவர் தெலுங்கானாவில் ஒரு தெலுங்குப் படத் தயாரிப்பாளரின் வீட்டில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து சென்னை இழுத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, ‘எனக்கு ஒரே மகன் மாற்றுத்திறனாளியாக இருக்கிறான். ஒரு தாய் என்ற அடிப்படையில் எனது உதவி அவனுக்கு இன்றியமையாதது; எனவே கணம் நீதிபதி அவர்கள் எனது நிலை உணர்ந்து என்னை சொந்த ஜாமினில் விடுவிக்க வேண்டும்’ – என்ற பாணியில் கதறி உள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி நவம்பர் 29 வரை நீதிமன்ற காவலில் இருக்க வலியுறுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலும் அவர் தமது பார்ப்பனத் தன்மையை வெளிப்படுத்தியதை சில ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தன.
எப்படியோ மீண்டும் அவரது வழக்கறிஞர்கள் சென்னை நீதிமன்றத்தில் அவரது மாற்றுத்திறனாளி மகன் மற்றும் குடும்ப சூழ்நிலையை காண்பித்துப் பிணை கோரிய போது, தமிழ்நாடு அரசோ, அதன் காவல்துறையோ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் எளிதாகப் பிணை கிடைக்க வழிவகை செய்தார்கள். எப்படியோ வெளிவந்து விட்டார். நாம் இதில் கூடுதலாக இப் பெண்மணியிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் நமக்குத் துளியும் இல்லை. மேலே நான் கூறியுள்ள படி நமக்குள்ள மக்கள் பிரச்சனைகள் ஆயிரமாயிரம் இருக்கையில், இந்த ஒரு நபரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏதுமில்லை!
ஆனால் மிகவும் அருவருக்கத் தகுந்த செய்கையை அவர் விடுவதாக இல்லை; தான் எப்போதுமே திருந்தக்கூடிய நபர் இல்லை – என்பதனை அவர் சிறையில் இருந்து பிணையில் வெளியேறிய பொழுது அளித்த பேட்டியை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். அவரை சிறை வாசலில் சில பார்ப்பனர்கள் வரவேற்று அழைத்ததும், இவர் தமது பேட்டியில், ஏதோ மிகப் பெரும் தியாக வேள்வியில் குதித்து சிறை சென்றவர் போல் பம்மாத்துக் காட்டியும், தனக்கு ஆதரவளித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், குன்று போல் இருந்த தம்மை மலை போல் சிறையில் இருந்து மீண்டு வர உதவியோர்க்கும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக’ பேட்டியளித்துள்ளார். தனது தவறு குறித்து எள்ளின் முனையளவும் கருத்து தெரிவித்து சுய விமர்சனம் செய்து கொள்ள அந்த நடிகை முன்வரவில்லை.
அப்படியானால், இவரது பார்ப்பனக் கொழுப்பு அடங்கவில்லை என்பது மட்டுமல்ல; தனது செயலுக்காக இன்று வரை அவர் மயிரளவும் வருந்தவில்லை என்பதனை நிர்வாணமாகக் காட்டிக் கொள்கிறார்.
இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் வழக்கு நிலுவையில் இருக்கக்கூடிய சூழலில், பார்ப்பன நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் மனைவி காமாட்சியம்மாள் நடிகை கஸ்தூரிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அவரை சிறைப்படுத்தக் கூடாது என்று கோதாவில் இறங்கி இருக்கிறார் என்றால், இவர்களின் பார்ப்பன கொட்டத்தை எப்படித் தான் அடக்குவது? காமாட்சி அம்மாளின் அறிக்கை என்பது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் அறிக்கையாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்! எனவே, நாட்டில் பாசிச பார்ப்பனிய கொடுங்கோன்மை நீடிக்க வில்லை என்று பாமரத்தனமாக நம்பியிருக்கும் பலரும் இதனை நன்கு உற்று நோக்க வேண்டும்.
படிக்க: அன்னபூர்ணா நிறுவன உரிமையாளரை மன்னிப்பு கேட்க செய்த நிர்மலா சீதாராமனின் பார்ப்பனத் திமிர்!
கஸ்தூரி மட்டுமல்ல; இந்திய நாடு முழுமையும் பல்லாயிரக்
கணக்கான பெண்கள் (சிறு சிறு தவறுகள் செய்து விட்டவர்கள் உட்பட) மாதக்கணக்கில் வருடக் கணக்கில் சிறையில் வாடத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் இந்த வாய்க் கொழுப்பெடுத்த பார்ப்பனப் பெண்மணி கஸ்தூரிக்கு உருவாக்கப்பட்ட அரணும், ஒத்தாசையும் வழங்கப்படுமா என்பதே நமது கேள்வி!
இவ்விடயத்தை சகலரும் ஆழமாக பரிசீலிக்க வேண்டும் என்பதே என் பேரவா!
- எழில்மாறன்
சிறப்பு
கஸ்தூரியின் வாய்க்கொழுப்பு சென்னை நீதிமன்றம் கொடுத்த சலுகையோ இன்றைய பார்ப்பனையம் பங்கலுக்கு உண்டு என்பதை தெரியும் வகையில் இருந்தது மேலும்
இப்படிப்பட்ட வாய்க்கொழுப்பு உள்ளவர்கள் தப்பிப்பதற்கு குடும்பத்தையும் குழந்தையும் காட்டி தப்பித்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது
கஸ்தூரியின் வாய்க்கொழுப்பு சென்னை நீதிமன்றம் கொடுத்த சலுகையோ இன்றைய பார்ப்பனையம் பங்கலுக்கு உண்டு என்பதை தெரியும் வகையில் இருந்தது மேலும்
இப்படிப்பட்ட வாய்க்கொழுப்பு உள்ளவர்கள் தப்பிப்பதற்கு குடும்பத்தையும் குழந்தையும் காட்டி தப்பித்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது