வள்ளலாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடிப்போம்!
தமிழக அரசு வள்ளலாரின் 200வது ஆண்டு பிறந்த நாளையொட்டி ரூபாய் 20 கோடி ஒதுக்கி பல்லுயிர் காப்பகம் அமைப்பதாக அறிவித்துள்ளது.
சாதி, சமய, சாத்திர குப்பைகளை புறக்கணித்து தனி வழிபாட்டு முறையை முன்வைத்த வள்ளலாரின் வழிபாட்டு முறையை தனிமதமாக அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட வேண்டும். பார்ப்பன இந்து மதத்தின் பிடிக்குள் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
வள்ளலார் பிறந்த மருதூர் வாழ்ந்த வடலூர் மற்றும் கருங்குழி, மேட்டுக்குப்பத்தில் உள்ள நினைவிடங்களை அரசு நேரடி பொறுப்பேற்றுக் கொண்டு உயர்ந்த தரத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும்.
அரசு பணத்தில் செலவு செய்து நடத்தப்படும் அம்மா உணவகங்களில் பெயரை மாற்றி வள்ளலார் உணவகம் என்று பெயரிடப்பட வேண்டும்.
வள்ளலாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை இளம் தலைமுறைக்கு உரிய வகையில் கற்றுக் கொடுப்பதற்கும், அதை பரப்புவதற்கும் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.
- இளஞ்செழியன்