தமிழ் தினசரிகளின் திருவிளையாடல்கள்!


விசமமான மதக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதில் தமிழ் தினசரி நாளிதழ்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. போகிற போக்கில் வைதிக மதக் கருத்துக்களை திணிப்பவைகளாகத் திகழ்கின்றன. தற்செயலாக இன்றைய தினமலர் 14.04.2022 நாளிதழை வாசிக்க நேர்ந்தது.

இன்றைய தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பில் கண்ட சில கருத்துகள்;

“ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்” என தினமும் 108 முறை சொல்லுங்கள்.

“நாடு செழிக்க பசுவை நேசியுங்கள்”

“தினமும் சிறிதளவு அரிசியை தர்மம் செய்வோம்”

“உன் பணியை நீயே செய்”

“தாய் மதத்தைப் பழிப்பதை தாயைப் பழிப்பதற்குச் சமம்”

வை அனைத்தும் தினமலர் இணைப்பு  பஞ்சாங்கம் 2022-2023 தமிழ் புத்தாண்டு பலனில் வெளிவந்தவை.

இவை அனைத்தும் வைதிக மற்றும் இந்துத்துவாவின் கருத்துகள். இவற்றை இப்பத்திரிக்கைகள் நேரடியாகவே திணித்துவருகின்றன.

படிக்க:

♦  கோயில்கள் யாருக்கு?

♦ கருவறை தீண்டாமைக்கு கல்லறை!

தமிழகத்தில் கனமழை வாய்ப்பு எனும் கட்டுரையில் “தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கும் நிலையில் வரும் நாட்களில் சித்திரை வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது”.

புத்தாண்டு காலண்டர் என்பது நாமாக ஏற்படுத்திக் கொண்ட கணித முறை, இதற்கும் இயற்கை மாற்றங்களுக்கும் எந்தவித விஞ்ஞான அடிப்படையிலான தொடர்பும் இல்லை.ஆனால் பத்திரிக்கைகள் இது போன்ற நம்பிக்கை அடிப்படையிலான தொடர்பை ஏற்படுத்தி மக்கள் மனதை பாழ்படுத்தி வருகின்றன.

‘தமிழ்ப் புத்தாண்டு’ எனும் கட்டுரையில்,

தாம்பாளத் தட்டில் முக்கனிகளான மா, பலா, வாழை, பிற பழங்கள், ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ருபாய் நோட்டுக்கட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை கடவுள் படத்தின் முன் வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன் தாம்பாளத் தட்டில் உள்ள கனிகளைப் பார்த்தபடி கண் விழிக்க வேண்டும்.

னிகள் வாங்குவது, நகை வாங்குவது ரூபாய் நோட்டுக்கட்டு என அடிக்கிக் கொண்டே போகும் இந்த வியாபாரத்தை ஆரம்பித்தது யார்?! இவற்றைச் செய்வதால் வியாபாரிகளுக்கு நன்மையே தவிர பாமர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. பல கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயில்களில் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?! மக்களை முட்டாளாக்கும் பணியினை பஞ்சாங்கம் எனும் பெயரில் செய்துவருவதை மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

‘மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா பத்தாம் நாள்’ எனும் கட்டுரையில், சித்திரை திருவிழாவின் பத்தாம் இன்று நாளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வருகின்றனர். மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய் நாதர் சிவனுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிவன் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் மதுரை நகருக்கு வந்தனர். மங்கல தீபங்கள் ஏந்திய சுமங்கலிகள் தேவர்களை வரவேற்றனர். மணமகளின் பெற்றோர் மலையத்துவஜபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை ஏற்று அருள்புரிய வேண்டும்” என வேண்டினர்.

பிரம்மா தலைமையில் யாக வேள்வி நடந்தது. லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். கல்யாணக்கோலத்தைக் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர்.

இன்று மணக்கோலம் தரிசித்தால் விரைவில் திருமண யோகம் உண்டாகும்.

ல்யாணம் என யார் தீர்மானம் பண்ணினார்கள்?! சிவன் பிரம்மா விஷ்ணு என்கிறவர்கள் 33கோடி தேவர்களில் ஒருவர் என்பதை இக் கட்டுரையும் வலியுறுத்துகிறது.

சிவன் அம்பிகைக்கு கல்யாணம் நடந்தால் மற்றவர்களுக்கும் கல்யாணம் நடக்கும் எனும் நம்பிக்கை எப்படி பொருந்தும்?!

தவிர இந்தத் தேவர்களின் கல்யாணத்திற்கும் பாமர மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

அதிலும் சைவ ஆகமம் காமிகாகமத்தின் படி கட்டப்பட்டு, அதிலுள்ள படி பூசைகள் வழிபாட்டு முறைகள் நடத்தப்படுவது மீனாட்சி கோயில். ஆகமத்தின் படி ஆச்சார அநுஷ்டானத்திற்குத் தொடர்பே இல்லாத சூத்திரனும் பெண்களும் சாதியில்லாத அவர்ணர்களும் கோயிலுக்குள் அனுமதியில்லை. ஆகமத்தில் இப்படி இருக்க,அதன் வழிமுறையைப் பின்பற்றும் மீனாட்சி கோயில் எளிய மக்களின்  கோயிலாக எப்படி இருக்க முடியும்?!

சிந்தித்தால் வைதிக சூழ்ச்சியிலிருந்து விடுபடலாம், இல்லையேல் வைதிக அடிமைகளாக வாழ்ந்து சாக வேண்டியதுதான்!

  • தினகரன் செல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here