மனித கழிவை மனிதன் சுமப்பதும், மனிதனை மனிதன் சுமப்பதும் காட்டுமிராண்டித்தனம்.

மனித கழிவை மனிதனை சுமக்க வைப்பது பார்ப்பன இந்து மதம் அதை நம் தலையில் சுமப்பது அவமானம்.

மனித பதர்களை தலையில் சுமப்பது அதைவிட அவமானம்.

“குடிக்க நீர் அற்றிருக்கும் வேலையிலே கொடுந் தடியர் கூட்டத்திற்கு மடம் கட்டி கொடுத்ததால் வசம் கெட்டுப்போனதடா நமது நன்நாடு” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் வயிறு வளர்க்கும் ஆதீனங்களின் நிலங்களை பறிமுதல் செய்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உழைத்த நிலமற்ற கூலி விவசாயிகளுக்கே வழங்குகின்ற எழுச்சியை உருவாக்குவோம்.

ஆனால் அது வரை நாம் காத்திருக்க முடியாது.
ஆதீனங்கள் என்ற பெயரில் உலவும் கொடும் தடியர்களை தலையில் சுமப்பதை எதிர்த்து கலகம் புரிவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here