ந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது மறைந்த வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன், மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங், பீகாரின் மறைந்த முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூர் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி ஆகியோருக்கு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.

அத்வானி – தவிர மற்ற நால்வரும் மறைந்து விட்ட நிலையில் அவரின் சார்பாக அவரின் குடும்பத்தினர், கடந்த சனிக்கிழமை அன்று, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு வந்து ஜனாதிபதி இடம் விருதை பெற்றுக் கொண்டனர். வயது மூப்பு காரணமாக அத்வானி அவர்களால் நேரடியாக வந்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அத்வானியின் வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி முர்மு அவர்கள் அத்வானிக்கு விருது வழங்கியபொழுது அத்வானி இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். ஜனாதிபதி அவர்கள் நின்று கொண்டு அவருக்கு விருது வழங்கினார்.

இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் வயது மூப்பு காரணமாக அத்வானி அவர்களால் எழுந்து நிற்க கூட முடியவில்லை என்று கூறப்படலாம் என்பதால் இது குறித்து நாம் கேள்வி எழுப்பவில்லை.

ஜனாதிபதி நின்று கொண்டு விருது வழங்கும் பொழுது அத்வானி அவர்களுடன் திருவாளர் 56 இன்ச் மோடியும் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்தார்.

விருது வழங்கிய பிறகு நாட்டின் முதல் குடிமகள் என்ற மிக உயரிய மரியாதைக்குரிய பழங்குடியின பெண்ணான முர்மு அவர்கள் நின்று கொண்டிருக்க அத்வானியுடன் மோடியும் அமர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருப்பதற்கு காரணம் என்ன?

இதைப் பற்றி நினைக்கும் பொழுது, மரியாதைக்குரிய ஜனாதிபதி முர்மு அவர்கள் பழங்குடியின பெண் என்பதாலும் அவர் கணவனை இழந்தவர் என்பதாலும் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்று நாடு முழுவதும் பரவலாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுதான் நம் நினைவிற்கு வருகிறது.

எவ்வளவு உயரிய பதவி வகித்தாலும் அவர் ஒரு பெண்ணாக, அதுவும் பழங்குடியின பெண்ணாக, அதுவும் பழங்குடியின விதவைப் பெண்ணாக இருப்பாரானால் ஆர் எஸ் எஸ் -ன் வழித் தோன்றலான பாசிச மோடி கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் என்பதையே இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதையும் படியுங்கள்: 

அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று வெகுண்டெழும் சங்கிகளுக்காக
இப்பொழுது சற்று மாற்றி யோசித்துப் பார்ப்போம். ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பாகவத்துடன் மோடி அத்வானி இல்லத்திற்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மோகன் பாகவத் நின்று கொண்டிருக்கும் நிலையில் அத்வானியுடன் திருவாளர் மோடி அமர்ந்து கொண்டு ஒரு புகைப்படம் எடுத்து பொதுவெளியில் வெளியிடுவாரா? மாட்டவே மாட்டார் என்று உறுதியாக அடித்து சொல்லலாம்.

இதற்குக் காரணம், மோகன் பாகவத் ஆர் எஸ் எஸ் -இன் தலைவர் என்பதுடன் அவர் சித்பவனப் பார்ப்பனர் என்பதும் முக்கியமானது. இப்படிப்பட்ட பெண் அடிமைத்தனத்தை, சாதி வெறியை உயர்த்தி பிடிக்கும் பார்ப்பன பாசிச மோடி பேசும் பொழுது பெண்கள் முன்னேற்றம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பெண்களை மதிப்பது போன்றவற்றை பற்றி வாய் கிழியப் பேசுகிறார்.

நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள் மோடியின் வேசத்தை.

  • குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here