சூத்திரன் சுடுகாட்டிற்குச் சமமானவன்


ந்தக் கருத்து பிரம்ம சூத்திரம் சங்கர பாஷ்ய நூலில் இருந்ததைக் குறிப்பிட்டு முன்னர் பதிவு செய்திருந்தேன். அதில் சூத்திரன் சுடுகாட்டிற்குச் சமமானவன் என்பதை ஸ்மிருதி நூல்கள் குறிப்பிடுகின்றன என்கிற தகவல் நூல் ஆசிரியரின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் அவை எந்தெந்த ஸ்மிருதி நூல்கள் என்கிற தகவல் குறிப்பிடப்படவில்லை.

அவற்றைத் தேடியபோது, ஆபஸ்தம்ப மகரிஷியின் தர்ம சாஸ்திர நூலிலும் வசிஷ்டர் தர்ம சாஸ்திர நூலிலும் இந்த தகவல் இருப்பதை அறிய முடிந்தது.

வடமொழியில் “ஸ்மசானம்” என்பது சுடுகாடு அல்லது மயானத்தைக் குறிக்கிறது.
மேலுள்ள தர்ம சாஸ்திர நூல்களில் உள்ள சூத்திரங்கள், சூத்திரன் மற்றும் வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிக்காத பதிதன் இருவரும் சுடுகாட்டைப் போன்றவர்கள், இவர்களுக்குச் சமீபமாய் வேத மந்திரங்களை ஓதுதல் கூடாது என்கின்றன.

இந்த நூல்களில் சூத்திரன் சுடுகாட்டிற்குச் சமம் எனக் குறிப்பிடும் சூத்திரங்களைக் கீழே தருகிறேன்,

“சூத்ரன்,பதிதன் ஆகிய இருவர் விஷயத்தில் ஸ்மசானத்திற்குச்(சுடுகாடு) சொன்னபடி நியமம். இவ்விருவர்களின் ஸமீபத்தில் அத்யயனம் செய்யக்கூடாது.”

“சூத்ரனோ,பதிதனோ இருக்கும் ஒரு கட்டிடத்தில் அத்யயனம் செய்யக்கூடாதென்று சில ஆசார்யர்கள் நினைக்கிறார்கள்.”

-ஶ்ரீ ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், முதல் ப்ரஸனம்-மூன்றாவது படலம்-ஒன்பதாவது கண்டிகை

“A Sudra and an outcast are (included by the term) burial-ground, (and the rule given, Sutra 6, applies to them.

Sutra 6 is, “He shall never study in a burial-ground nor anywhere near it within the throw of a Samya”

-Apastamba Dharma Sutra 1.3.9

இதே கருத்தை வசிஷ்டர் தர்ம சாஸ்திர நூலும் பின்வருமாறு குறிப்பிடுகிறது,

“According to some, Sudras are a cremation ground. Therefore, one should not recite the Veda in the vicinity of a Sudra.”
“Sudras, people of evil conduct, are manifestly a cremation ground. Therefore, one should not recite the Veda in the vicinity of a Sudra.”

Dharmasutra of Vasistha (18.11-13)

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here