தற்போது 72 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளர். அவர்களில் 28 பேரின் மீது கொலை, பாலியல் வல்லுறவு, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவை பொய்யானவை அல்ல. இந்த விவரங்கள் தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவர்களால் கூறப்பட்டுள்ளவை. அதாவது தற்பொழுது பதவியேற்றுள்ள அமைச்சர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
இவர்களில் பலர் மீது ஒன்றிரண்டு வழக்குகள் அல்ல, பல வழக்குகள் உள்ளன. உதாரணமாக, உள்துறை அமைச்சரான பண்டி குமார் சஞ்சய் மீது 42 வழக்குகள் உள்ளன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறைகளுக்கான அமைச்சர் சாந்தனு தாக்கூர் மீது 23 வழக்குகள் உள்ளன. கல்வித் துறை அமைச்சர் சுகந்தா மஜும்தார் மீது 16 வழக்குகள் உள்ளன.
பாசிச ஜனவிரோத கட்சியான பாஜக அமைத்துள்ள அமைச்சரவை நாட்டு மக்களுக்கு எப்படிப்பட்ட அரசாட்சியை தரவிருக்கிறது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
இம்மாதிரியான விஷயங்களை நாட்டு மக்கள் பார்வையில் இருந்து மறைக்க வேண்டும். பொய்யான செய்திகளை மக்கள் மத்தியிலே பறப்பி மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே பஜக தனது தகவல் தொழில்நுட்ப துறையை(ஐடி விங்) வைத்திருக்கிறது. இத்தகைய ஐடி விங்கின்
தேசியத் தலைவராக உள்ள அமித் மாளவியா ஒரு பாலியல் குற்றவாளி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வைத்தும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் வைத்தும் பெண்களிடம் பால்லியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். இப்படிப்பட்ட அமித் மாளவியாவை பாஜக வினுடைய ஐடி விங்-ன் தேசிய தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சங்கிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இப்படி மோடியின் குடும்பமான பாஜகவின் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,
தங்களது சமூக ஊடகங்களில் இருந்து “மோடி கா பரிவார்” (மோடியின் குடும்பம்) என்பதை நீக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படிக்க:
♦ மோடி தனது பாசிச ஆட்சியை தொடர வாய்ப்பே இல்லையா?
♦ வாரணாசி மக்கள் மோடியின் பிம்பத்தை சிதைத்தனர்!
அதில் “நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து ‘மோடி கா பரிவார்’வை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று திருவாளர் மோடி X பக்கத்தில் கூறினார்.
மோடி தனது குடும்பத்திற்குள், அதாவது ஒன்றிய அமைச்சரவைக்குள் பிற கட்சிகளை சேர்ந்தவர்களையும் தற்பொழுது இணைத்து கொண்டுள்ளார். அதனால் தான் இப்படி ஒரு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளாரா என்பது நமக்குத் தெறியவில்லை.
கலவரங்களை நடத்தியே வளர்ந்து ஆட்சியைப் பிடித்த கட்சி பாஜக. அந்தக் கட்சியின் அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் நிரம்பி வழிவது என்பது எவ்வகையிலும் ஆச்சரியப்படத்தக்க ஒன்று அல்ல. ஆனால் அத்தகைய கிரிமின்களின் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறியும் வகையில் நாட்டு மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்படி மக்கள் செய்ய தவறினால் அது வருந்தத்தக்க ஒன்றாக மாறிவிடும். அது நாட்டையே சீரழித்து விடும் என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும்.
—குமரன்