அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகர மக்களின் வாழ்க்கை உருக்குலைந்துள்ளது.

அன்றாட காய்ச்சிகளின் நிலைமை மோசமாக உள்ளது. அதிகார வர்க்கமோ புள்ளி விவரங்களை அள்ளி வீசி மிக் ஜாம் புயலின் தாக்கத்தை விட பயங்கரமாக மக்கள் மீது துல்லியமாக தாக்குகிறது !

இந்நிலையில் புயலின் பாதிப்பை காட்டி தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகளால் கொடுரமாக சுரண்டப்படுகிறது. அதிலும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமையோ அதாள பாதாளத்தில் உள்ளது. இவர்களுக்காக உருவாக்கப்பட்ட நலவாரியங்கள் புயலை விட வேகமாக முடங்கிவிட்டன !

இந்நிலையில் , சென்னை பள்ளிகரணை ஆமாம் சதுப்பு நில பள்ளிகரணைதான் ! தற்போதைய புயலில் தீவு போல துண்டிக்கப்பட்ட தென்னிந்தியாவின் எஞ்சியிருக்கும் கடைசி இயற்கை ஈர நிலம் !

இந்த ஈர நிலத்தை இரண்டாக பிளந்து அடுக்குமாடி கட்டிடங்களை எழுப்பியும், அந்த மாளிகைகளுக்கு காவல் காக்க செக்யூரிட்டிகளை அடிமாட்டு விலைக்கு வைத்துக் கொள்வது கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் மாபிஃயாகளுக்கு கைவந்த கலை !

பள்ளிக்கரணை சதுப்புநில த்தை ஆக்ரமித்து கட்டுப்பட்டுள்ள PURVA WINDERMERE என்ற குடியிருப்பில் Stalwart என்ற செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது.

 

2000 குடியிருப்பிற்கு வெறும் 150 செக்யூரிட்டிகளை பணியில் அமர்த்தியுள்ளது இந்நிறுவனம் !

எந்த சட்டபடியான உரிமையும் இல்லை. ESI, PF இல்லை ! தினமும் 12 மணி நேர சுரண்டல் ! குடும்ப பிரச்சினை, உடல் பிரச்சினைகளுக்கு விடுப்பு எடுத்தால் சம்பளம் கட் ! இந்த தொழிலாளர்களை குத்தகைக்கு எடுத்துள்ள Stalwart நிறுவனம் கட்டுமான முதலாளியிடம் ஒரு தொழிலாளிக்கு 25,000 பெறுகிறான். ஆனால் சம்பளம் என்ற பெயரில் தருவது 14,500 ரூபாய். ஆக ஒரு தலைக்கு கமிஷன் 11500 /- !

போராடும் தொழிலாளர்களுடன் புஜதொமு!

தொழிலாளர்களை சுரண்டும் Stalwart முதலாளி கிரிஸ்டோபர் அர்விந்த் மற்றும் CEO ஷேக் அபு பக்கர் 100 நகரங்களில் ஆட்களை கொத்தடிமையாக வைத்துக் கொண்டு சாம்ராஜ்யம் நடத்துகிறார்கள் ! அரசும், அதிகாரிகளும் சலாம் போடுகிறார்கள் ! இது தான் கார்ப்பரேட் ஆட்சி !

இந்த கொடுமையான உழைப்பு சுரண்டலை எதிர்த்து PVRVA அப்பார் மெண்டில் பணிபுரிகின்ற Stalwart தொழிலாளர்கள் போராடுகின்றனர் !

Stalwart என்றால் உறுதி !

Stalwart செக்யூரிட்டி தொழிலாளர்களின் போராட்டமும் உறுதியானது , ஏனெனில் அந்த உறுதி கோடிக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டத்தால் கட்டியெழுப்பபட்டது. வெற்றி பெற்றே தீரும்!

புஜதொமு
தமிழ்நாடு – புதுச்சேரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here