கரூர் மாவட்டம் விளக்கக் கூட்டம்

ஒன்றிய அரசே !
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு !
பாஜக மோடி அரசுக்கு எதிராக வருகிற செப்டம்பர் 27 நாடு தழுவிய பந்த் முழு அடைப்பு போராட்டம் AlKSCC விவசாயிகள் அறைகூவல் என்ற தலைப்பில் கரூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக விளக்கக் கூட்டம் நடைபெற்றது . தோழர் சக்திவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார்.
மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் போராட்டத்தை விளக்கி பேசினார். இதில் ஆண்கள், பெண்கள் என 23 பேர் கலந்து கொண்டனர் . மேலும் கூட்டத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டம் கடந்த ஒன்பது மாதமாக 270 நாட்களுக்கு மேலாக நடக்கிறது. இதுவரை 700 விவசாயிகள் வீரமரணம் அடைந்த நிலையிலும் இப் போராட்டமானது தொடர்ந்து கடும் மழை, குளிர், வெயில் என பார்க்காமல் விவசாயிகள் உணர்வோடு டெல்லி எல்லையிலே நடைபெற்று வருகிறது . இதில் கார்ப்பரேட் முதலாளிகளிடம் எப்படி விவசாயி நிலம் பறிபோகிறது , விவசாயிகளை அவர்களுடைய சொந்த நிலத்தில் கொத்தடிமையாக வேலையில் ஈடுபடுத்துவது , நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது ,சிறு குறு உற்பத்தியை முற்றிலுமாக அளித்துவிட்டு மொத்த நாட்டு உற்பத்தியாக உருவாக்குவது அதேபோல் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி நம்மிடம் அதிக விலைக்கு விற்பது , இலவச மின்சாரத்தை காலி செய்வது , பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்குவது , திட்டமிட்டே அரசு சொத்துக்களை நஷ்டம் அடைய செய்து அதை கார்பெட் முதலாளிக்கு குறைவான நிதியில் விற்பனை செய்வது போராடுகின்ற விவசாயிகள் மீது ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குதல் நடத்துவது , வரிக்கு மேல் வரி போடுவது என மத்திய அரசு விவசாயிகள் மேல் நடத்தும் தாக்குதல்களை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வந்திருந்த தோழர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செப்டம்பர் 27 போராட்ட பணிகளில் ஈடுபடுவதாக ஆர்வத்துடன் தெரிவித்தனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்
கரூர்.
♦♦♦

திருச்சி மண்டலம்

செப்-27 டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த்!

விவசாயிகளின் பாரத் பந்தை ஆதரித்தும் அதில் மக்களை பங்கேற்க வலியுறுத்தியும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பலபகுதிகளில் CPM தோழர்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்.

பிரச்சார படங்கள்:

♦♦♦

விருத்தாச்சலம் வேப்பூர்

செப்-27 டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த்!

வேப்பூர் கடைவீதியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் வட்டாரம் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (23/09/2021) வேப்பூர் கடைவீதியில் வணிகர்கள் மற்றும் பொது மக்களிடம் டெல்லி விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர் பத்து மாதமாக போராடும் விவசாயிகளுக்கு நாம் தோள் கொடுக்க வேண்டும் என்றனர்.

பொது மக்களும் மோடி அராஜக நடவடிக்கையை தங்களது அனுபவத்தில் இருந்து பதிவு செய்தனர்.

தகவல்:

தோழர். மணிவாசகம்,
(வட்டார ஒருங்கிணைப்பாளர்) விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு:
88703 81056

♦♦♦

தஞ்சை

செப்டம்பர் 27 முழுஅடைப்பை உறுதி செய்ய தஞ்சை மக்கள் அதிகாரம் விவசாயிகள் சந்திப்பு.

அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு (AIKSCC) மற்றும் ஐக்கிய உழவர்களின் இயக்க (SKM) அறைகூவலுக்கு இணங்க வருகிற செப்டம்பர் 27ந் தேதி அகில இந்திய அளவில் முழுஅடைப்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச்செய்ய பல்வேறு அமைப்புகள் களப்பணியாற்றி வருகின்றனர்.

தஞ்சையில் மக்கள் அதிகாரம் சார்பாக முழுஅடைப்பை உறுதி செய்ய மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். தேவா தலைமையில் கிராமப்புற விவசாயிகள் சந்திப்பு இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. 23-09-2021 அன்று குருவாடிப்பட்டி, ஆலங்குடி, கள்ளப்பெரம்பூர் பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து முழு அடைப்பு விளக்கப் பிரசுரம் விநியோகிக்கப் பட்டது மக்களிடையே வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

மக்கள் அதிகாரம்
தஞ்சை – 93658 93052
23-09-2021

♦♦♦

கடலூர் மண்டலம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கடலூரில் வருகிற செப்டம்பர் 27 பந்து ஆதரித்து வணிகர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் ஆதரவு திரட்டப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளும் தோழமை அமைப்புகளும் மக்கள் அதிகாரம் பங்கெடுத்துக் கொண்டது.

கடலூர் மண்டலம்

♦♦♦

சீர்காழியின் பிரச்சாரம்

மயிலாடுதுறை, மாவட்டம் சீர்காழி தாலுகாவில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வருகின்ற 27/9/2021 அன்று நடைபெறுகின்ற பாரத் பந்த் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சீர்காழி கொள்ளிடம் பகுதியில் நடைபெறுகின்ற சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும்,விவசாயிகளும், தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று இன்று புத்தூர் கொள்ளிடம் பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சார்பாக பிரசுரம் விநியோகிக்கும் பிரச்சாரம் நடைபெற்றது.

சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்.
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை

♦♦♦

அரசூர்

செப்டம்பர் 27 நாடுதழுவிய பந்த் பிரச்சாரம்…..

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி செப்டம்பர் 27 நாடு தழுவிய பந்தை ஆதரித்து ஆனத்தூர், குமாரமங்கலம், அரசூர்,காந்தலவாடி,கருவேப்பிலை பாளையம் ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

♦♦♦

கடவாசல் பகுதியில் அறைக்கூட்டம், பிரச்சாரம்

செப்டம்பர் 27 டெல்லி பாரத் பந்த்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வருகின்ற 27/9/2021 அன்று நடைபெறுகின்ற பாரத் பந்த் போராட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று இன்று 24/9/2021 வடகால், கடவாசல் பகுதிகளில் பிரசுர வினியோகம் நடைபெற்றது! மாலை 7 மணி அளவில் கடவாசலில் அரை கூட்டம் நடைபெற்றது! திராவிடர் கழகம் மயிலாடுதுறை மாவட்ட செயலர் தோழர் குணசேகரன் தலைமை தாங்கினார்! மக்கள் அதிகாரம் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில இணைச் செயலர் தோழர் முசாவுதீன் அவர்கள் விளக்க உரை ஆற்றினார்கள்! திமுக /திராவிடர் கழகம் /மக்கள் அதிகாரம்/ விவசாயிகள்/ தொழிலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்!

தகவல்:

தோழர்.ரவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
மயிலாடுதுறை செல் /9843480587

♦♦♦

திருச்சியில் மகஇக கலைக் குழு பாடல் பிரச்சாரம்

இகவேளாண் திருத்தச்சட்டத்தைக் கண்டித்து வருகிற 27 ந் தேதி நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தை விளக்கி இன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரம் நடைப் பெற்றது. இதில் ம.க.இ.க கலைக்குழுத் தோழர்கள் சத்யா..கோவன் பங்கேற்றனர். மக்கள் அதிகாரம் தோழர் ராஜா கண்டன உரையாற்றினர். ம.க.இ.க கலைக்குழுவின் சார்பாக பாடல்கள் பாடப்பட்டது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here