ந்த மாணவன் நன்றாக படிக்கின்றான், அவனைப் பார்த்து எல்லோரும் படியுங்கள்!. இந்த மாணவன் நன்றாக விளையாடுகிறான், அவனைப் பார்த்து எல்லோரும் விளையாடுங்கள்!. இந்த மாணவன் திறமையாக இருக்கின்றான், அவனைப் போல் அனைவரும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்!” என்று வகுப்பு ஆசிரியர் மாணவன் சின்னதுரையை பார்த்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று பிற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டியுள்ளார்.

ஆதிக்க சாதித் திமிருடன், கையில் கயிறு கட்டிக் கொண்டு தனி கும்பலாகவும், தனித்தனி கேங்குகளாகவும், தறுதலைகளாக திரிந்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த முன்னுதாரணம் கடுங்கோபத்தையும், கண்மண் தெரியாத அளவிற்கு சாதிவெறியையும் தூண்டியுள்ளது.

மாமன்னன் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் மீது வன்மத்தை ஏவிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த வில்லன் ரத்தினவேல் கடந்த ஒரு மாத காலமாக ஆதிக்க சாதி வெறியர்களின், ஆதிக்க சாதி சங்க தலைவர்களின் ஹீரோவாக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூகத்தை கட்டமைப்பதில் ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. ஆனால் அது கேடுகெட்ட சாதி வெறியையும் சாதித் திமிரையும் உருவாக்குவதற்கு ரத்தினவேல் போன்ற கேரக்டர்கள் மூலம் படிப்படியாக கட்டி எழுப்பி பற்றி எரியச் செய்கிறது.

இந்த மனநிலையில் தயாராகியுள்ள மாணவர்கள் சக மாணவனை அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனை முன்னுதாரணமாக காட்டும் போது உடம்பு முழுவதும் சாதி வெறியால் பற்றி எரிகிறது. விளைவு வீச்சருவாளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கே சென்று தலை முதல் கால் வரை செதில் செதிலாக வெட்டச் சொல்கிறது. தடுக்க வந்த சகோதரியையும் வெட்டி விட்டு, தட்டிக் கேட்ட தாத்தாவை படுகொலை செய்து விட்டு நிதானமாக செல்கின்றனர் மறவர் சாதியை அந்தப் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவர்கள்.

ஆணாதிக்க வக்கிரத்தாலும் சாதி ஆணவ படுகொலைகளாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யும்போது பத்தோடு பதினொன்று என்று கடந்து செல்லும் சமூகம், மாணவர்கள் இந்த அளவிற்கு வெறியூட்டப்பட்டு அரிவாள் எடுத்துக்கொண்டு கொலை வெறியாட்டம் நடத்தியதை கண்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

சாதியை வைத்து பிழைப்பு நடத்துவதும், சதையை வைத்து பிழைப்பு நடத்துவதும் ஒன்றே தான் என்பதை இந்த காட்டுமிராண்டி கும்பலுக்கு எப்படி புரிய வைப்பது?

வடமாவட்டங்களில் தேர்தலின் போது தனது வன்னியசாதியை காட்டி திரட்டப்படும் ஓட்டு வங்கியை முன்னிறுத்தி பல கோடிகளை சுருட்டிக் கொண்டிருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு சாதி என்பது அழகான வார்த்தையாக தெரிகிறது. ஏனென்றால் அவரது பிள்ளைகள் சுகபோகமாக வெளிநாடுகளில் படிக்கிறார்கள். சாதி வெறியூட்டப்பட்ட வன்னிய சாதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பேருந்துகளை உடைத்துக் கொண்டும், ரயில்களில் கல்லெறிந்துக் கொண்டும், சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டிப் போட்டுக் கொண்டும், ‘இருட்டடி வீரர்களாக’ வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.

கொங்கு கவுண்டர் சாதியைச் சேர்ந்த யுவராஜ் டிஎஸ்பி விஷ்ணு பிரியாவிற்கு கடும் மன உளைச்சலை உருவாக்கியது மட்டுமின்றி தற்கொலைக்குத் தள்ளியதன் மூலமாக கொங்கு கவுண்டர்களின் ஹீரோவாக மாறினான். அதன் பிறகு அவனுக்கு ரசிகர் மன்றமே உருவாகி சிறையில் இருந்து வெளிவந்த இடைக்காலத்தில் ஒரு பெரும் கூட்டம் திரண்டு வரவேற்றது. யுவராஜ் போன்றவர்கள் சாதியை வைத்து மக்களை திரட்டி கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாயில் மஞ்சள் குளிக்கிறார்கள் ஆனால் கொங்கு கவுண்டர் சாதியைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் கொங்கு மண்டலத்தில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்..

மேற்கண்ட இரு நிகழ்ச்சி போக்குகள் முக்குலத்தோர், வன்னியர், முதலியார், வேளாளர், பிள்ளைமார், செட்டியார், நாயுடு, ரெட்டியார், கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்களின் அன்றாட நிகழ்வுகளில்  சில எடுத்துக்காட்டுகள் தான்.

நாங்குநேரியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவருக்கு எதிராக கையாண்ட வழிமுறைகளும், மணிப்பூரில் குக்கி பழங்குடிகளுக்கு எதிராக மெய்த்தி ஆதிக்க சாதியினர் கையாண்ட வழிமுறைகளும் ஏறக்குறைய ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.

தமிழகத்தை மணிப்பூராக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு அதிக காலம் பிடிக்காது என்பதைத்தான் நாங்குநேரி மறவர் சாதி மாணவர்கள் சக தலித் மாணவனின் மீது நடத்திய ஆதிக்க சாதி வெறி தாக்குதல் மற்றும் அவனது தாத்தா படுகொலை ஆகியவை நமக்கு உணர்த்துகின்றன.

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நிலவில் வரும் சாதிய தீண்டாமை கொடுமைகளும் அதனை கட்டிக் காத்து வருகின்ற அரை நிலப்பிரபுத்துவ உறவுகளும் பொருளாதார ரீதியாக சமூகத்தை கட்டிக் காக்கிறது. அதுவே ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் வர்க்கத்தை ஆதிக்கம் செய்கிறது.

இது ஒருபுறமிருக்க சாதிப் பெருமிதம், அந்தஸ்து, கௌரவம் என்ற பல பெயர்களை வைத்துக் கொண்டு தனக்கு கீழ் உள்ள சாதிகளை கொடூரமாக அடக்கி ஒடுக்குகின்ற ஆதிக்க சாதி மனோபாவம், படிநிலையில் கீழே உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிராக வெறித்தனத்துடன் பல்வேறு சமயங்களில் வினைபுரிகிறது.

இத்தகைய பிற்போக்கு சமூகம்தான் ஆர்.எஸ்.எஸ் பாரதிய ஜனதா கொண்டு வர துடிக்கின்ற சனாதன தர்மத்தின் அடிப்படையிலான இந்துராஷ்டிரம். அதனை உருவாக்குவதற்கான அடிப்படைகளும், வேர்களும் இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் அப்படியே தான் இருக்கிறது.

ஆதீனங்கள், மடங்கள் துவங்கி கோவில்கள், பண்ணையார்களின் நிலங்கள் எந்த சேதாரம் இன்றி அப்படியே நீடிக்கிறது. அவை கல்வி நிலையங்கள் என்ற பெயரிலும், டிரஸ்ட்கள் என்ற பெயரிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் சாதி ஆதிக்கத்தின் பொருளியல் அடிப்படையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 50 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பச்சையப்ப முதலியார் அறக்கட்டளை பச்சையப்பன் டிரஸ்ட் ஆக மாறி கல்வி நிறுவனங்கள் முதல் பள்ளிக்கூடம் வரை நடத்தி வருகிறது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை காலங்காலமாக பராமரித்தும் பயிரிட்டும் வருகின்ற சிறு நடுத்தர விவசாயிகளுக்கு அனுபவ பாத்தியதை தவிர எதுவும் மிஞ்சவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை பகடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொத்து இன்னமும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் தான் இருக்கிறது. இதுபோன்று எண்ணற்ற உதாரணங்கள் தமிழகத்தில் மலிந்து கிடக்கின்றன.

அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட திராவிட இயக்கத்தின் ஆட்சி தமிழகத்தில் சாதி ரீதியிலான வேறுபாடுகளையும், ஆதிக்க சாதியினரின் மிருகத்தனமான சிந்தனையையும் மட்டுப்படுத்தி இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அந்த மிருகம், மிருக பலத்துடன் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டு எழக்கூடிய ஆற்றலை திராவிட இயக்கங்களின் சமூக நீதி ஆட்சி எந்த வகையிலும் அசைத்துப் பார்த்து விடவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

தீண்டாமை உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியாட்டங்களை கட்டிக் காக்கின்ற சாதிகளுக்கு பொருளியல் அடித்தளம் மிக மிக முக்கியமானது. அதனை தகர்த்து எறியாமல் அதன் விளைவுகளை மாத்திரம் எதிர்த்து போராடுவது குறிப்பிட்ட அளவிற்கு உதவுமே ஒழிய நிரந்தரமாக தீர்க்காது என்பது தான் பரிசீலிக்க வேண்டிய உண்மை.

தீண்டாமை உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியாட்டங்களை பற்றி பேசும்போது குறிப்பாக அதற்கான தீர்வுகளை பேசுவது என்பதே குற்றவாளிகளை தப்ப வைத்து விடும் என்று சிந்திப்பது அபத்தமானது.

சாதி ஆதிக்க திமிருடன் பெருமிதம் பேசுகின்ற சாதி சங்க தலைவர்களை அரசியல் கட்சித் தலைவர்களை அடக்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமானது அல்ல. வேண்டுமானால் இப்படி செய்து பார்க்கலாம் ஆதிக்க சாதி சங்கத் தலைவரை அரை டவுசருடன் நிர்வாணமாக்கி அவர் குடியிருக்கும் ஊரில் சங்கிலி போட்டு ஒரு கிலோமீட்டர் இழுத்துச் சென்று பிறகு லாக்கப்பில் வைத்து சிறையில் அடைத்தால் அதனைப் பார்த்து தினவெடுத்து திரியும் கூட்டம் அடக்கி வாசிக்கும். நெஞ்சை புடைத்துக்கொண்டு மீசையை முறுக்கி திரியும் தறுதலைக் கூட்டம் தானாக பணிந்து நடக்க துவங்கும்.

டெல்டா மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கூலி விவசாயிகள், கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்திற்காக ராமையன் குடிசையில் 33 பேர் அடைத்து வைக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டனர் என்பது தான் வெண்மணியின் வரலாறு. அந்த வெண்மணி தியாகிகளின் உயிர் பலிக்காக பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவை 33 துண்டுகளாக வெட்டி எறிந்தது நக்சல் பரி இயக்கம்  அதன் பிறகு ஆதிக்க சாதிகளின் திமிர்த்தனம் குறிப்பிட்ட காலம் அடங்கி ஒடுங்கியது.

இதையும் படியுங்கள்: 

இது சற்று வன்முறை போல தோன்றினாலும் ஆதிக்க சாதிகள் சமூகத்தில் விளைவிக்கின்ற கொடூரமான சிந்தனைகளையும்,, புதிதாக வளர்ந்து வருகின்ற இளம் தளிர்களையும் கருக்கிவிடும் அளவிற்கு அவர்கள் மனதில் நஞ்சை விதைத்து வருகின்ற காலகட்டத்தில், சனாதன தர்மமே நாட்டின் பண்பாடு என்று ஆர் எஸ் எஸ் துணிச்சலாக பேசுகின்ற நேரத்தில் அதற்கு எதிர்த்தாக்குதல் தொடுப்பது என்பது வெறும் சித்தாந்தம் பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் தீர்க்க முடியாது.

சாதி தீண்டாமை உள்ளிட்ட கொடூரத்திற்கு திருப்பி அடிக்கும் துணிவையும் தன்னம்பிக்கையும் கூட்டு சிந்தனையையும் உருவாக்குவதும், சாதி தீண்டாமைக்கு அடிப்படையான நிலப் பிரபுத்துவ உறவுகளை முற்றிலும் அறுத்தெரிகின்ற வகையில் நிலங்களை பிரித்துக் கொடுப்பதும்தான் தீர்வாகும்.

நாங்குநேரியில் கொலை வெறியுடன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சின்னதுரை மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு உரிய உதவிகளை செய்வதும் குற்ற சுமத்தப்பட்டுள்ள சிறுவர்களாக இருந்தாலும் சட்ட ரீதியாக கடும் தண்டனைக்கு உள்ளாக்குவது, தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய் என்று முழங்குவது போன்றவை உடனடி தீர்வுகள் ஆகும்., தொலைநோக்கில் அணுகும் வகையில் ஆதிக்க சாதி திமிர்த்தனமும் வெறியாட்டங்களும் நீடித்து நிற்பதற்கு அடிப்படையான பொருளியல் பலமான நிலங்களை ஆதிக்க சாதிகளிடமிருந்து பறிமுதல் செய்வதும், அதனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படிப்படியாக விநியோகிப்பது என்ற தீர்வை நோக்கி பயணிப்பது தான் நாங்குநேரிகள் மீண்டும் மீண்டும் எழாமல் தடுப்பதற்கு உதவும்.

தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்!
நிலங்களை பறிமுதல் செய்து தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கு வழங்கு!

மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here