கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு! காவி பாசிஸ்டுகள் வெறியாட்டம்! – பு..தொ.மு. – ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தியதால் அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவ அமைப்பான ABVP, மதவெறியைத் தூண்டி விட்டு கலவரம் செய்வதற்காக இந்தப் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறது..

அதே போல், புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவியைத் தடுத்து நிறுத்தியுள்ளார் அந்தப் பள்ளி முதல்வர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர், இதே புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொகுதிக்கு உட்பட்ட திருக்கனூர். வாதானூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓம் காளி, ஜெய் காளி என்ற முழக்கமிட்டு ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி நடைபெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் மத நல்லிணக்கத்துக்கும், பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில், புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வளாகத்தில் மதரீதியான நிகழ்ச்சியை நடத்தியதைக் கண்டித்தும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புதுச்சேரியின் சமூக அமைதியை காக்க வேண்டும் என வலியுறுத்தியும், புதுச்சேரியில் செயல்படும், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதே போல், ஹிஜாப் தடை விதித்ததைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரசு-வுடனான கூட்டணி ஆட்சியைப் பயன்படுத்தி, மதக் கலவரங்களை உருவாக்கி, தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்ற தனது இந்துத்துவ செயல்திட்டத்தை நிறைவேற்றும் வகையில், பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் நடந்து வரும், இந்நிலைமைகளை விளக்கியும், பாஜக-வின் கடந்த கால செயல்பாடுகள், அதன் இந்துமதவெறி பாசிச நடவடிக்கைகளை விளக்கியும், வட மாநிலங்களைப் போலவே புதுச்சேரியையும் கலவர பூமியாக மாற்ற எத்தணிக்கும், இந்த மதவெறி பாசிஸ்டுகளை அனுமதிக்கக் கூடாது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கான மக்கள் ஒற்றுமை, தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும், திருபுவனை தொழிற்பேட்டைப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இடதுசாரி மற்றும் பெரியாரிய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர்,சரவணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில்,

  • பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர்.தீனா,
  • புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு,
  • ஏ.ஐ.சி.சி.டி.யூ மாநில தலைவர் தோழர்.மோதிலால்,
  • சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர்.ரமேஷ்,
  • ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் தோழர். சிவக்குமார் மற்றும்
  • புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில செயலாளர் தோழர்.மகேந்திரன்

ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், புதுச்சேரியின் இன்றைய அவல நிலையை விளக்கியும், மதக்கலவரத்தை உருவாக்கும் முயற்சியைத் தடுக்கும் வகையில் மக்கள் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசினர்.

சுரண்டலும், ஒடுக்குமுறையும் எங்கு நடந்தாலும் அதற்கு தொழிலாளி வர்க்கம் முன்னணியில் நின்று போராடும் என்பதை அறை கூவும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.  

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here