3 வேளாண் சட்டங்களை திருத்தக் கோரி 230 நாட்கள் கடந்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் அரியானாவில் போராடிய விவசாயிகள் மீது செடிசன் (sedition) வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்து அரசு விவசாயிகளை மிரட்டி வருகிறது. இந்த அதிகாரத்தை எதிர்த்து நாடு தளவிய அளவில் கிளர்ச்சி வெடிக்கட்டும்!
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
230வது நாள், 14 ஜூலை 2021.
••• 3 கறுப்பு வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றுவதற்குமான ‘மக்களின் வேண்டுகோளை’ பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் அனைத்து எம்.பி.க்களுக்கும் எஸ்.கே.எம். கொடுக்கவிருக்கிறது !
••• ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 9 வரை, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு வேலை நாளிலும் நாடாளுமன்ற எதிர்ப்பு பேரணி நடைபெறும் – எஸ்.கே.எம் !
••• ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் பெண் விவசாயிகளால், சிறப்பு நாடாளுமன்ற எதிர்ப்புப் பேரணி நடத்தப்படும் !
••• வெளிநாட்டை அடித்தளமாகக் கொண்ட பிரிவினைவாத அமைப்புகளால் கொடுக்கப்பட்ட அழைப்புகள், உழவர் விரோதமானது மற்றும் கண்டிக்கத்தக்கது; ஐக்கிய விவசாயிகள் முன்னணிக்கும், உழவர் போராட்டத்திற்கும் அவர்களுடன் எந்தவித தொடர்பும் கிடையாது – எஸ்.கே.எம். !
••• அரியானாவின் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான பயங்கரமான தந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது; சிர்சாவில் உள்ள பாஜக தலைவர்களுக்குக் கறுப்புக் கொடிகளைக் காட்டியதற்காக, அரியானா கிசான் மன்ச் தலைவருக்கு எதிராக புனையப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகள், நீதிமன்றம் மற்றும் தீவிரமான போராட்டத்தின் மூலம் எதிர்கொள்ளப்படும் – எஸ்.கே.எம், !
••• போராடும் பெண்களை அவமதித்ததற்காக, ரோட்டக்கில், பிஜேபி தலைவர் மனிஷ் க்ரோவரின் இல்லத்திற்கு வெளியே, விவசாயிகளின் தர்ணா தொடர்கிறது !
இந்தியாவின் அனைத்து விவசாயிகள் சார்பாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி இன்று ‘மக்களுடைய வேண்டுகோள்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், ‘மக்களுடைய வேண்டுகோள்’ வழங்கப்படும். குடிமக்களுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில், நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ‘மக்களுடைய வேண்டுகோள்’ வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்த தொகுதிகளின் நேரடி அறிவுறுத்தலாகவும்,
அவர்கள் அரசியலமைப்பு ரீதியாக பொறுப்பேற்கக் கூடியவர்களாகவும் கருதப்படுவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எச்சரிக்கையோடு கவனித்துச் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். உழவர் போராட்டத்தின் கோரிக்கைகளை, அதாவது கோவிட் காலங்களில் ஒன்றிய அரசு இயற்றிய 3 கறுப்பு வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்பதையும், அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதையும் நாடாளுமன்றத்தில் எழுப்பும்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ‘மக்களுடைய வேண்டுகோள்’ கோருகிறது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு உறுதியளிக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு நிகழ்ச்சிநிரலையும் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், ஆளும் கட்சி தன்னுடைய நிகழ்ச்சிநிரலைத் தங்குத் தடையின்றி நடத்த உதவும் வகையில் அவையிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும், மக்களவை/மாநிலங்களவை உறுப்பினர்கள், சபாநாயகர்/ தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டாலும், அவர்கள் மீண்டும் அவைகளுக்குச் சென்று ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டும் என்றும் மக்களவை/மாநிலங்களவை உறுப்பினர்கள் கேட்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் மக்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கத் தவறினால், இந்திய விவசாயிகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்று ‘மக்களுடைய வேண்டுகோள்’ குறிப்பிடுகிறது.
நாடாளுமன்ற எதிர்ப்புப் பேரணி குறித்த விரிவான திட்டங்களை எஸ்.கே.எம் இன்று அறிவித்துள்ளது. ஜூலை 22 முதல், நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் ஒவ்வொரு நாளும், 200 உழவர் தன்னார்வலர்கள் மற்றும் தலைவர்களின்
குழுக்கள், எஸ்.கே.எம் வகுத்த ஒழுங்கு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் பாராளுமன்ற வளாகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும். போராட்டக்காரர்களின் தினசரி குழுக்கள், டெல்லியின் எல்லைகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து போராட்ட முகாம்களில் இருக்கும் பல்வேறு அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட விவசாயிகள், தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டிருக்கும்.
பெண்கள், உழவர் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பிரத்தியேகமாக சிறப்பு நாடாளுமன்ற எதிர்ப்பு மார்ச் ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்காக இந்த நீண்ட மற்றும் வரலாற்றுப் போராட்டத்தில் பெண் விவசாயிகள் முன்னணியில் உள்ளனர். இந்த இரண்டு நாட்களில் நடைபெறவிருக்கும் சிறப்பு அணிவகுப்புகள் பெண்கள் ஆற்றிய தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத பங்கை எடுத்துக் காட்டுவதாக இருக்கும்.
வெளிநாடுகளை அடித்தளமாகக் கொண்ட சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பு கொடுத்த அறிக்கை-அழைப்பை எஸ்.கே.எம் கவனத்தில் கொண்டுள்ளது. ஒரு பிரிவினைவாத அமைப்பு அளிக்கும் இத்தகைய அழைப்புகள், விவசாயி விரோதமானது; விவசாயிகள் இயக்கத்தின் நலனுக்கு எதிரானது; எனவே எஸ்.கே.எம் இதைக் கடுமையாக கண்டிக்கிறது. எஸ்.கே.எம் அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்கும், அத்தகைய அமைப்புகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை. எஸ்.கே.எம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்திய விவசாயிகளின் எதிர்கால தலைமுறை மற்றும் 140 கோடி இந்தியர்களின் உணவைப் பாதுகாக்கவும், நடத்தும் நீண்ட மற்றும் கடினமான, ஆனால் அமைதியான மற்றும் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நியாயமான காரணத்தைத் திசைதிருப்ப, மற்றும் தடம் புரட்டுவதற்கான முயற்சிகளில் இருந்து விலகுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.
அரியானா சிர்சாவில், துணை சபாநாயகருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால், உழவர் தலைவர்கள் ஹர்ச்சரன் சிங், பிரஹ்லாத் சிங் மற்றும் சுமார் 100 விவசாயிகள் மீது சிர்சா காவல்துறையினர்
தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். அரியானாவின் உழவர் விரோத பாஜக அரசின் அறிவுறுத்தலின் கீழ் பொய்யான, அற்பமான மற்றும் புனையப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகளையும், விவசாயிகள் மற்றும் விவசாய தலைவர்கள் மீதான மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் எஸ்.கே.எம் கடுமையாகக் கண்டிக்கிறது. 2020 நவம்பரில் அரியானாவில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்த விவசாயிகளுக்கு எந்த திட்டமும் இல்லை என்றாலும், விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க அரியானா அரசு கடுமையாக முயன்றது என்பதை நினைவு கூரலாம். அரியானா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்கு நீர் பீரங்கிகள், கண்ணீர்ப்புகை, தடுப்புகள், முள்வேலி மற்றும் விவசாயிகளுக்கு எதிராக சாலைகள் தோண்டப்படுதல் – ஆகியவற்றிற்கு நாடே சாட்சியம் அளித்திருக்கிறது. சிர்சாவில் பாஜக தலைவர்களுக்கு விவசாயிகள் கறுப்புக் கொடிகளைக் காட்டியதால், அதே அரசு இப்போது இதுபோன்ற பொய்யான மற்றும் கடுமையான தேசத் துரோக குற்றச்சாட்டுகளுடன் வழக்குகள் பதிவு செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு எதிரான பயங்கரவாத தந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் சந்திக்க அனைத்து விவசாயிகளுக்கும், தலைவர்களுக்கும் எஸ்.கே.எம் உதவுவதோடு, அதன் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் எதிர்ப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் சந்திக்கப்படும் என்று ஹரியானா அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.
அரியானா பாஜக தலைவர் மணீஷ் குரோவர், பெண் விவசாயிகளையும், போராட்டக்காரர்களையும் அருவெறுப்பான மற்றும் மன்னிக்க முடியாத உடல் அசைவுகள் மூலம் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அரியானாவின் ரோட்டக்கில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் குடியிருப்புக்குத் தடுப்புகளை அமைத்துள்ளனர்; மனீஷ் குரோவர் தனது சொந்த வீட்டில் கைதியாகி விட்டிருக்கிறார். குற்றமிழைத்த பாஜக அரசியல்வாதியிடமிருந்து நிபந்தனையற்ற மன்னிப்பு பெறும் வரை தர்ணா தொடர்ந்து நடைபெறும்.
அறிக்கையை வழங்கியவர்கள் –
பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் தல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவ்குமார் சர்மா ‘கக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
9417269294, samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு : AIKSCC, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here