• விவசாயிகள் படுகொலையைக் கண்டித்து நாடெங்கும் ஆர்ப்பாட்டம்

தோழர்களே,

உ.பி.யில் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் பாஜக எம்.பி.க்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் மீது, ஒன்றிய அமைச்சருடைய மகன் மற்றும் குண்டர்கள் காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் விவசாயிகளைப் படுகொலை செய்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்தச் செயல் பாஜகவின் பாசிச கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விவசாய தோழர்களும் ஜனநாயக சக்திகளும் இதைக் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக போராட வேண்டியது நமது கடமை. அந்த வகையில்

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் (4-10-21)இன்று 4 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் முக்கியமான நகரங்களில் மக்கள் கூடுமிடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில எஸ்.கே.எம்.குழு வேண்டுகோள் விடுக்கிறது.

கோரிக்கைள்

ஒன்றிய அமைச்சர் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்,

அவருடைய குடும்பத்தினர் மற்றும் சம்மந்தப்பட்ட குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்,

தோழர்கள் அனைவரும் உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்.
(மாநில குழுவிற்காக – SKM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here