இலங்கையில் கோத்தபய வீட்டிற்கு தீ வைத்து விட்டதாக நகர்புறத்து அறிவு ஜீவிகள் அலறுகின்றனர்.

உண்மையில் அவர்களது கவலை அதுவல்ல!

ஜனாதிபதி மாளிகை முற்றுகையிட்ட மக்கள் உல்லாச ஊதாரி ஆளும் வர்க்கத்தினரின் வாழ்க்கையை தொட்டுப் பார்க்கிறார்கள் என்பது தான்.
சீனாவில் விவசாயிகளின் எழுச்சி நடந்த போது நிலப்பரப்புகளின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் மெத்தைகளில் குதித்துப் பார்த்தனர் விவசாயிகள்.
அதைக் கண்டு நகர்புறத்து அறிவுஜீவிகள் அதனை விமர்சித்தனர்.
ஆனால் தோழர் மாசேதுங் இதனை அற்புதம் என்று விவரித்தார்.
அதே மன உணர்வு தான் உண்மையான உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு இன்று தோன்றுகிறது.

புரட்சியின் காட்சிகளில் ஒன்று
மிகவும் உவகையூட்டுகிறது
அரசனின் பிரமாண்டமான நீச்சல் குளத்தில்
மக்கள் கிளர்ச்சியுடன்
தலைகீழாகப் பாய்கின்றனர்.
தண்ணீரை ஒருவர்மேல் ஒருவர்
வாரி இறைக்கின்றனர்.
நீருக்கு அடியில் இருந்து
மேலே வருகின்றனர்.
நீர் கலங்கலாகிறது
பரவசக் குரல்களால் தளும்புகிறது.

நான் இவ்வளவு வசீகரமான தண்ணீரை
இப்போதுதான் பார்க்கிறேன்

 

9.7.2022
மனுஷ்ய புத்திரன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here