ளைகுடா நாடுகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமானநிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விமானங்கள் திருப்பி விடப்பட்டன. வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையின் வெள்ளக்காட்சிகளை கண்முன் கொண்டுவந்துள்ளது வளைகுடாவின் வெள்ளப்பெருக்கு.

என்ன நடந்துள்ளது?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -ல் வழக்கமாக ஓர் ஆண்டில், 9.47 செ.மீ., அளவுக்கு மழை பெய்யும். ஆனால், ஏப்ரல் 16 இல், 24 மணி நேரத்தில் 14.2 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. அதாவது ஒன்றரை ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியுள்ளது.

வளைகுடா நாடுகள் பொதுவாக வெப்பமான, வறண்ட வானிலைக்கு பெயர் பெற்றவை. யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக தண்ணீரைப் பெற்று வருகின்றன.

துபாயில் மழையை வரவைக்க மேகவிதைப்பு எனும் முறையில் இரசாயனத்தை மேகத்தில் தூவுவார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

ஓமனும் தப்பவில்லை!

ஆப்கனை போலவே கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து கனமழை கொட்டிவருகிறது.இதில் ஓமனும் சிக்கியுள்ளது.

ஓமனில் வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானம் மூலம் போலீசார் மீட்டனர். நாடு முழுவதும் இதுவரை பதினெட்டு பேர் இறந்துள்ளனர் – பள்ளி மாணவர்களும் பேருந்தோடு அடித்துச் செல்லப்பட்டனர்.

மின்னல், வெள்ளத்தால் பஹ்ரைனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும், பள்ளிகள் மூடப்பட்டன, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்காசியாவில் உள்ள வளைகுடா நாடுகளில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக உள்ளன. எண்ணெய் வளம் அதிகம் உள்ள இந்த நாடுகளில், மழை என்பது மிகவும் அபூர்வமாகவே பெய்யும். அதிலும், குளிர்காலத்தில் ஒரு சில நாட்களில் பெய்யும்.

கனமழைக்கு காரணம் மேக விதைப்பா? – பருவநிலை மாற்றமா?

நிலத்தடி நீரை தக்க வைக்க, அடிக்கடி இந்த நாடுகள், ‘கிளவுட் சீடிங்’ எனப்படும் மேகவிதைப்பு முறையை பயன்படுத்துகின்றன. இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட ரசாயனப் பொருட்களை மேகத்தில் தூவுவதன் வாயிலாக மழையைப் பெறுகின்றன.

யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக தண்ணீரை பெற்று வருகின்றன.

யு.ஏ.இ., அரசு சில தினங்களுக்கு முன்பு, செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஏழு விமானங்கள் வாயிலாக ரசாயனங்கள் தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிராந்தியத்தில், 16ம் தேதி பெரும் புயல் வீசியது. இதன் தாக்கத்தில், யு.ஏ.இ., பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்டவற்றில் பெரும் மழை பெய்தது. ஆனால், யு.ஏ.இ.,யில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது – என்கிறது தினமலர்.

இது அதிகரித்துவரும் புவிவெப்பமயமாதலின் விளைவு என்பதை மூடிமறைக்கும் கேடான செயலாகும். ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே சுனாமி வந்துள்ளதே? லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர்கள் அழிந்துள்ளனவே? அப்போது எந்த முதலாளி காற்றை கெடுத்தான்? என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஜிம்பாப்வேயை அச்சுறுத்தும் வறட்சி!

பிறந்த உயிர்கள் மடிவது உறுதி என்பதால் நாம் மருத்துவத்தை கைவிடுகிறோமா? கட்டிய வீடு ஒரு நாள் இடியும் என்பதால் அதை பராமரிக்காமல் விடுகிறோமா? இப்படி நாம் கேட்காதவரை முதலாளித்துவ தாசர்களான சில “அறிவாளிகளுக்கு” புரியாது.

இயல்பு நிலைக்கு திரும்புமா?

ஆப்கனைப் பொறுத்தவரை மழை விடாது என்றே எச்சரித்தனர். ஜிம்பாவே உள்ளிட்ட தென்னாப்பிரிக்க நாடுகளில் 1.36 கோடி பேர் கடும் உணவுப்பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். இனி இந்த உலகை எதிர்பாராத மழை வெள்ளமும் , கடும்வெப்பமும் வறட்சியும் மாறிமாறி தாக்கும் என்பது தெளிவாகிறது. நம் நுகர்வு வெறியை தூண்டும் கார்பரேட் மிகை உற்பத்தியை மக்கள் வெள்ளம் தாக்கப்போவது எப்போது?

இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here