1000 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் பத்திரிகையாளர் மகளின் ‘சுதந்திர’ தின உரை!

சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டதில் இருந்து கேரள பணிப் பத்திரிக்கையாளர் சங்கம் (KUWJ) மற்றும் சித்திக்கின் மனைவி ஆகியோர்  பத்திரிகையாளர் சித்திக் காப்பானை விடுவிக்கக் கோரி போராடி வருகின்றனர்.

நான் மெஹனாஸ் கப்பன். பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள். குடிமகனின் அனைத்து சுதந்திரத்தையும் உடைத்து இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட குடிமகன்,” என்று ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை அன்று சித்திக் கப்பனின் 9 வயது மகள் சுதந்திர தின உரையை தொடங்கினார்… சித்திக் கப்பன் டெல்லியைச் சேர்ந்த மலையாளி பத்திரிகையாளர், அவர் UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டு அக்டோபர் 2020 முதல் சிறையில் இருந்து வருகிறார், அவர் ஆதிக்க சாதி ஆண்களால் தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததைப் பற்றி புகாரளிக்க ஹத்ராஸுக்குச் செல்ல முயன்றார்.

“இந்தியாவின் மகத்தான தேசம் 76வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மகத்தான தருணத்தில், அசைக்க முடியாத பெருமையும் அதிகாரமும் கொண்ட இந்தியனாக இதைச் சொல்கிறேன் – பாரத் மாதா கீ ஜெய். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம், காந்திஜி, நேரு, பகத்சிங் மற்றும் எண்ணற்ற மாபெரும் புரட்சியாளர்கள் மற்றும் புரட்சிக் கதாநாயகர்களின் தியாகத்தின் விளைவாகும்,”

நாம் இன்னும் இந்தியாவை சிறந்த உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பிரிவினையும் முரண்பாடும் இல்லாத ஒரு நல்ல நாளைக் கனவு காண வேண்டும். இந்திய விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீர தேசப்பக்தர்களையும் நினைவு கூர்ந்து, இந்தியாவின் சாமானிய குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்பதை இங்கு நிறுத்திக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்,” என்று குழந்தை நோட்டபரம் ஜிஎல்பி அரசுப் பள்ளியில் தனது உரையின் போது கூறினார்.

சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டதில் இருந்து கேரள பணிப் பத்திரிக்கையாளர் சங்கம் (KUWJ) மற்றும் சித்திக்கின் மனைவி ஆகியோர் பத்திரிகையாளர் சித்திக் காப்பானை விடுவிக்கக் கோரி போராடி வருகின்றனர். அவர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக குடும்பத்தினர் பலமுறை கூறியுள்ளனர். உத்தரபிரதேச போலீசார் அவர் மீது முதலில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழும், பின்னர் (UAPA)யுஏபிஏவின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

மொழியாக்கம்: சமர்

https://www.thenewsminute.com/article/my-father-s-freedom-has-been-broken-siddique-kappans-daughter-i-day-speech-166862

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here