இந்திய ஹாக்கி அணியில் கேப்டன் ராணி ராம்பாலுக்கு அடுத்த நிலையில் உள்ள சீனியர் வீரர் வந்தனா கட்டாரியா. 245 போட்டிகளில் 67 ஹோல்கள் அடித்துள்ள வந்தனாவின் ஆட்டம்தான் இந்திய ஹாக்கி அணியை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அரையிறுதி வரை அழைத்துச் சென்றது.
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி வந்தனாவின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார் தந்தையின் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை. ஒலிம்பிக் போட்டியில் திவீரமாகி விடுகிறார்.

Times of India news

ஒரு வழியாக அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் தோற்றாலும் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் அரையிறுதி வரை ஹாக்கி அணி சென்றதே என்று இந்தியர்கள் அதை கொண்டாடி வரும் நிலையில், சாதி இந்துக்கள் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னா பாத் கிராமத்தில் வசிக்கும் வந்தனாவின் வீட்டின் முன்னால் திரண்ட சாதி இந்துக்கள் வந்தனா போன்ற தலித்துக்களை அணியில் சேர்த்ததால்தான் அணி தோற்று விட்டது என்று அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

நன்றி

அருள் எழிலன், முகநூல் பக்கத்திலிருந்து

இந்தியாவில் பலதுறைகளிலும் பார்ப்பனர் மற்றும் மேல் சாதியினர் ஆதிக்கம் இருப்பதைப்போல விளையாட்டுத் துறையிலும் ஆதிக்கம் நிலவுகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை அனுப்பி வைத்து இருந்தாலும் 1,2 பதக்கங்களை கூட தாண்டவில்லை என்பதை பார்க்கும் அனைவரும் வெட்கித் தலை குனிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் விளையாட்டுத்துறையில் வீரர்களை தேர்வு செய்வதில் தான் அவர்களை பரிந்துரைப்பது வரை அனைத்திலும் லாபி அதாவது சாதி ரீதியிலான லாபி விளையாடுகிறது. உண்மையிலேயே திறமை உள்ளவர்கள் அதற்கான வாய்ப்புகளை பெறுவது இல்லை. ஒருவேளை அவ்வாறு பெற்று சென்றாலும் கட்டாரியா போன்ற வீரர்களை அவமானப்படுத்துவது போன்றுதான் நடக்கிறது.
கிரிக்கெட் போன்ற பூணூல் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தும் இந்திய விளையாட்டுத்துறை உடலுழைப்பும் திறனும் கொண்ட விளையாட்டுகளில் போதிய அக்கறை காட்டுவதில்லை.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அடுத்த ஒலிம்பிக்கிற்கு தற்போதே தயார்படுத்துகிறார்கள் ஆனால் இங்கோ அது போன்ற நிலைமை இல்லை வெறும் வாய்ச்சவடால் அடிப்பதன் மூலமோ திறமையற்ற நோஞ்சான்களை குறுக்கு வழியில் பரிந்துரைப்பதன் மூலமும் எந்த பதக்கத்தையும் நம்மால் பெற முடியாது என்பதே உண்மை.
அதைவிட கொடுமையாக தோல்வி அடைந்ததற்கான காரணத்தை உண்மையாக பரிசீலிக்காமல் சாதி ரீதியாக விளையாட்டு வீரர்களை இழிவு படுத்துவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
தன்னுடைய தோல்விகளை ஒப்புக் கொள்ள முடியாதவர்கள் உடனடியாக கையில் எடுத்துக்கொள்ளும் ஆயுதம் சாதி ரீதியிலான தாக்குதல்தான் சகோதரியே! என்றும் நாங்கள் துணை நிற்போம்! தொடர்ந்து விளையாடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here