சிவராத்திரி என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் பார்ப்பன சாமியார்கள் நாடு முழுவதும் குத்தாட்டம் போடுவதும், பக்தி மற்றும் பலான போதையில் மயங்கி கூச்சலிட்டுக் கொண்டு கும்மாளம் போடுவதும் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.
காசியில் இருக்கும் அகோரிகளும், வெள்ளியங்கிரியில் இருக்கும் கிரிகிரிகளும் இந்துமதம் என்ற பெயரில் இதுபோன்ற இழிவுகளை பெரும்பான்மை பக்தர்களின் தலையில் கட்டுகிறார்கள்.
வால் நட், அக்ரூட், பாதாம் பருப்பு, பிஸ்தா முழுங்கி கொழுப்பு அண்டி கிடக்கும் சாமியார்களுக்கு துறவிகளின் வாழ்வை காட்டும் பொறுப்பு நமக்கு உள்ளது.
அதையும் சேர்த்து செய்வோம்.
ராத்திரி..
சிவ ராத்திரி!
யானைகளின்
வழித்தடங்களைப் பறித்து
கட்டிய ஈஷாவுக்கு
யோகா செய்யக்
கூப்பிடுகிறார் ஜக்கி
கிர்ஷ்ணமூர்த்தி
கிட்டு
ஜாவா வாசுதேவன்
ஜக்கி வாசுதேவானது
அன்னபூரணி
அன்னபூரணி அரசு அம்மா
ஆன கதை!
முதுகெலும்பை நிமிர்த்த
யோகாசெய்ய அழைத்து
மூளையைக் கூனாக்கிடும்
கார்ப்பரேட் சாமி!
சிவராத்திரி யோகாவுக்கு
கங்கைக்கரை
அகோரிகளை அழைத்து
வருபவரில்லை ஜக்கி
பாலிவுட் டோலுவுட்
மல்லுவுட்டிலிருந்து
மஸ்காரா பூசிய
அழகிகளை
அழைத்து வருபவர்
விடிய விடிய
பக்தி பஜனைகள்
பாடுவார்களா?
அதுவும் இல்லை
காஸ்ட்லி கரகாட்ட கோஷ்டிகள்
டப்பாங்குத்து டான்சுகள்
குத்துப் பாடல்களால்
புனிதமாகும் இரவிது
கேட்டால் ,
‘எது இல்லையோ
அதுவே சிவம் !’
என்பார் ஜக்கி
கல்லா கட்டி கயிலாயம்
அழைக்கிறார்
ஞானம்,
தியானம்,
டிஸ்கொத்தே!
காசு உள்ளவர்கள்
ஈஷா சாதனா
போகலாம்
இல்லாதவர்கள்
கவலை வேண்டாம்
திருச்சி சாதனா
லைவ்வில்
விழித்திருங்கள் !
கரிகாலன்.