ன்னைப் பற்றற்ற துறவி போலவும் அவ்வப்போது காட்டிக் கொண்டு சுகபோகமான வாழ்க்கை வாழும் மோடிஜி, இன்று “நான் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனக்கு ஏழைகளின் வலி புரியும்.” என்கிறார்.

இந்திய வளங்கள் அனைத்தும் கொள்ளையடித்துப் பெரும் கார்ப்பரேட் திமிங்கலங்களாக அதானியையும், அம்பானியையும் வளர்த்துவிட…

மோடி அரசாங்கம் செய்த பணிகள், கதைகள் நாம் அனைவரும் நன்கு அறிந்தவையே! மோடியின் சொந்தங்களின் கதைகளை இங்கே கொஞ்சம் பார்ப்போம்.

‘பிரதமர் மோடியின் ஒரு சகோதரர் ஆட்டோ ஓட்டுவதாகவும் மற்றொரு சகோதரர் மளிகைக்கடை வைத்து நடத்துவதாகவும்’ திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லெப் குமார் தெப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறி, சமூக ஊடகங்களில் பரவலாகக் கேலி செய்யப்பட்டார்.

பாஜக தலைவர்கள் பலரும், “மோடியால், அவரது குடும்பம் எந்தவித ஆதாயமும் பெறவில்லை” என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் 2014 க்குப் பிறகு பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

மோடிஜியின் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சி விவரங்கள் பின்வருமாறு :-

எண் 1 முதல் 4 வரை பிரதமர் மோடியின் உடன்பிறந்த சகோதரர்கள்.

 1. சோமாபாய் மோடி (75 வயது)

ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி – தற்போது குஜராத்தில் அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தலைவர்.

 1. அம்ரித்பாய் மோடி (வயது 72) ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார், தற்போது அகமதாபாத் மற்றும் காந்தி நகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக உள்ளார்.
 2. பிரஹலாத் மோடி (64 வயது) தானியங்களைக் குறைந்த விலையில் விற்கும் ரேஷன் கடை வைத்திருந்தார்; தற்போது ஹூண்டாய், மாருதி மற்றும் ஹோண்டா நான்கு சக்கர வாகன ஷோ ரூம்கள் அகமதாபாத்தில், வதோதராவில் உள்ளன.
 3. பங்கஜ் மோடி (58 வயது) முன்பு தகவல் துறையில், இன்று சோம்பாயுடன் அரசுப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

எண் 5 முதல் 9 வரை மோடியின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்.

 1. மளிகைக் கடை உரிமையாளராக இருந்த போகிலால் மோடி (வயது 67), இன்று அகமதாபாத், சூரத் மற்றும் வதோதராவில் ரிலையன்ஸ் மால்களை வைத்திருக்கிறார்.
 2. அரவிந்த் மோடி (வயது 64) பழைய இரும்பு வியாபாரிகள், ஒரு ஸ்கிராப் டீலர். தற்போது பெரிய கட்டடக் கட்டுமான நிறுவனங்களின் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டீல் ஒப்பந்ததாரர்.
 1. பாரத் மோடி (55 வயது) பெட்ரோல் பம்ப்பில் வேலை பார்த்து வந்தார். இன்று அகமதாபாத்தில் 11 பெட்ரோல் பங்குகளை வைத்துள்ளனர்.
 1. அசோக் மோடி (51 வயது) காத்தாடி மற்றும் மளிகைக் கடை வைத்திருந்தார். இன்று, போகிலால் மோடியுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
 1. சந்திரகாந்த் மோடி (48 வயது) மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்து வந்தார். இன்று, அகமதாபாத் மற்றும் காந்தி நகரில் ஒன்பது பெரிய பால் உற்பத்தி மையங்கள் உள்ளன.
 1. ரமேஷ் மோடி (57 வயது) ஆசிரியராகப் பணிபுரிந்தார். இன்று, அவர் ஐந்து பள்ளிகள், 3 பொறியியல் கல்லூரிகள், ஆயுர்வேதம், ஹோமியோபதி, ஃபிசியோதெரபி கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வைத்துள்ளார்.
 2. டியூஷன் சென்ட்டரில் வேலை பார்த்து வந்த பார்கவா மோடி (44 வயது), தற்போது ரமேஷ் மோடியின் கல்லூரிகளில் பங்குதாரராக / பார்ட்னராக உள்ளார்.
 3. பிபின் மோடி (42 வயது) அகமதாபாத் நூலகத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று நர்சரி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிப் புத்தகங்களை வழங்கும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பங்குதாரர்.

இதையும் படியுங்கள்:


உறவுகளின் விவரங்கள் :

எண் 1 முதல் 4 வரை மோடியின் உடன்பிறந்த சகோதரர்கள்.

எண் 5 முதல் 9 வரை மோடியின் ஒன்றுவிட்ட சகோதரர்கள்.

நம்பர் 10 பிரதமர் மோடியின் மாமா ஜக்கிவன்தாஸ் மோடியின் மகன்.

11 பார்கவா காந்திலால், 12 பிபின் அவர்கள் பிரதமரின் இளைய மாமா ஜெயந்திலால் மோடியின் மகன்கள்.

” ஊழல் தான் காங்கிரசின் சித்தாந்தம்” என்ற வாய்ச்சவடால்களை விட்டு விட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், கூலி / சம்பளம் இழப்பால் அன்றாடம் துன்பப்படும் இந்திய ஏழைகளை முன்னேற்ற, ஏழைத்தாயின் மகன் என்ன செய்தார் ? இனி என்ன செய்வார் என்பதையும் நாட்டு மக்களுக்குத் தெளிவாக அறிவிக்க வேண்டும்!

நன்றி

முகநூல் பதிவு

 • Chandra Mohan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here