ன்னை ஏறெடுத்துப்
பார்க்கிறேன்
மறவாமல் இருப்பதற்காக.

கை கொடுத்திருக்கிறாய்,
பழகியிருக்கிறாய்,

உன்முகம் எதற்கோ தேவை
எனக்கு, அதனால்
திரும்பத் திரும்ப உன்னை
ஏறெடுத்துப் பார்க்கிறேன்
மறவாமல் இருப்பதற்காக.

ஏனோ உன்  முகம்
மறந்துகொண்டே இருக்கிறது.
எங்கிருந்தோவந்து உதவிசெய்யக்
கை கொடுத்தாய், அதனால் இருக்கலாம்.

உன்னை எனக்கு நிச்சயமா,
நிச்சயமாப்பிடிக்கணும்னா
உன்னை ஏறெடுத்துப்
பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்.

  • பீட்டர்

கவிதைக்கான  கோட்டுச்சித்திரம் : ஓவியர் மருது.

( குறிப்பு :  மூன்றாம் உலக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து   போர்கள், இன மோதல்கள், வறட்சி – பஞ்சம் ஆகியவற்றில் ஏதோ ஒரு  காரணத்தால் ஏதிலி ஆக்கப்பட்டு அலைகின்ற குழந்தைகளின் மனஉளைச்சலில் ஒரு சிறு பகுதியே நீங்கள் இங்கே காண்பது. )

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here