மிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மார்ச்-1ம் தேதி சென்னைக்கு வருகிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்பது குறித்து அதில் பல தலைவர்கள் பேசுகிறார்கள். திமுக தலைவரின் பிறந்த நாள் விழா மேடையில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றதால்,,அதை வைத்து அரசியல் செய்ய பீகார் பிஜேபி முடிவெடுக்கிறது.

நல்லது..அரசியல் ரீதியாக அதை செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால்,அவர்கள் அதற்காக கையிலெடுத்த விஷயம் 8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு என்ற மாநிலத்தையே காட்டுமிராண்டிகளாக காட்டி  கலவரத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்டது.

போலியான வீடியோக்களை எடிட் செய்து, 12 பீகார் தொழிலாளர்கள் விரல்களை வெட்டி தூக்கிலிடப்பட்டதாகவும்,ஆனால் அதை கண்டிக்காமல் தேஜஸ்வி யாதவ் திமுகவோடு நட்பு பாராட்டுவதாக பொய்களை பீகார் பிஜேபி பரப்புகிறது.

நன்றாக கவனிக்கவும், இந்த வீடியோக்கள் பீகார் மாநிலத்திற்குள் மட்டும் இலக்கு வைத்து பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும் தொழிலார்களுக்கும் வாட்சப் மூலமாக அனுப்பப்படுகிறது. மற்றொரு பக்கம் தீயாய் பரவுகிறது வதந்தி.

தவறான தகவல் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மார்ச் 2-ம் தேதி மதியம் 12.38 க்கு ட்விட்டரில் பதிவிடுகிறது.சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை DGP அலுவலகம் பீகார் முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறது

ஆனாலும், தொடர்ச்சியாக பீகார் மாநில பிஜேபியினரால் தொடர்ச்சியாக பொய்கள் கட்டவிழ்க்கப்படுகிறது..பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த தமிழ்நாடு DGP மார்ச் 2-ம் தேதி மதியம் 12.51-க்கு வீடியோ மூலமாக தெளிவாக  விளக்கம் தருகிறார். பொய்களை பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்

ஆனாலும், மார்ச் 3-ம் தேதி தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாகவும்,கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பீகார் சட்டப்பேரவையில் பெரும் அமளியில் ஈடுபடுகின்றனர் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள்.

மற்றொரு பக்கம் பீகாரிகள் கொலை செய்யப்பட்டதாக YOUTUBE சேனல்களில் வெளியான போலி வீடியோக்களை பிஜேபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நண்பர்களே, 12 பீகார் தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாக பொய்களை பரப்பினார்கள்.

இந்தியாவையே ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் மாநிலப்பிரிவு அந்த தகவல் உண்மையா என விசாரிப்பதற்கு கொஞ்சமும் முயற்சிக்கவில்லை. உள்துறை அமைச்சகத்திடமோ, அல்லது தமிழ்நாடு மாநில காவல்துறையிடமோ கூட தொலைபேசியில் கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன், ட்விட்டரில் கேட்டிருந்தால் கூட பதில் கிடைத்திருக்கும். அல்லது,தமிழக பிஜேபி தலைமையிடமாவது கேட்டிருக்கலாம்.

ஆனால் எதையும் யாரிடமும் கேட்கவில்லை. இஷ்டத்திற்கு பிகார் பிஜேபி பொய்களை பரப்பிக்கொண்டே இருக்கிறது. பீகார் மாநிலமே பதற்றமாகி பற்றி எரிகிறது. அவசர உதவி எண்கள் எல்லாம் பீகார் மாநில பிஜிபி நிர்வாகிகளால் அறிவிக்கப்படுகிறது

ஆனால், 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி குறித்து அறியாத அப்பாவியான தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவொரு அச்சறுத்தலும் இல்லை பத்திரமாக உள்ளனர் என்று 3-ம் தேதி மாலை 6.09-க்கு அறிக்கை வெளியிடுகிறார்

இந்த இடத்தில தான் கதை ஆரம்பமாகிறது.

நண்பர்களே, பீகார் மாநில சட்டப்பேரவையில் பிரச்சனைகளை கிளப்பி 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பியது பீகார் பிஜேபி மட்டுமே..

புரிந்துகொள்ளுங்கள்..3-ம் தேதி இரவு 9-30 மணிக்கு கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா ?

பீகார் ஸ்டேட் பிஜேபி தலைவர் எனக்கு போன் பண்ணாரு.. போன் பண்ணி, இந்த மாதிரி வந்து வடமாநில தொழிலாளர்களுக்கு இங்க பாதுகாப்பு பிரச்னை இருக்கு. எங்களுக்கு செய்தி வருதுன்னாரு. நான் சொன்னேன். அப்படியெல்லாம் இல்லீங்க. யார் சொன்னா, தமிழக மக்கள் சிறப்பா இருக்காங்க. நாங்க அப்படி நடக்க விடமாட்டோம்.

தமிழகத்தில் இருக்கும் காவல்துறை அவங்களுக்கு பாதுகாப்பா இருக்கு. அரசும் கூட இந்த விஷயத்தில் பாதுகாப்பா இருக்கு. அதனால் தயவு செஞ்சு அப்படி சொல்லாதீங்க. எங்க தமிழ்நாட்டின் மீது அப்படி அவப்பெயர் வருவதற்கு நான் அதை விட மாட்டேன்னு பேட்டியில் சொன்னார்.

உண்மையில் தமிழ்நாட்டின் மீது அவப்பெயர் வருவதை தடுக்க முயற்சித்தாரா அண்ணாமலை ?

மார்ச் 1-ம் தேதி நடந்த  தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் விழா முடித்து, தேஜஸ்வி யாதவ் பீகாருக்கு சென்ற 2-ம் தேதி காலையில் இருந்தே வதந்திகளை பரப்பத்தொடங்கிவிட்டனர் பீகார் பிஜேபியினர்.

தமிழ்நாடு, பீகார் என இரண்டு அரசின் நிர்வாகங்களும் 2 தினங்களாக பதற்றத்துடன் வதந்தியை தடுக்க போராடி வருகிறது. ஆனால், அதே பிஜேபி கட்சியின் மாநிலத்தலைவரான அண்ணாமலை ஆற அமர கூறுகிறார்.

நான் பிஜேபியின் பீகார் தலைவருக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன் என்று. சரி இப்போது தான் நமக்கு சந்தேகம் வருகிறது, அதாவது அண்ணாமலை பீகார் பிஜேபி தலைவருக்கு விளக்கம் கொடுத்தது எப்போது?

2 ம் தேதியா அல்லது 3-ம் தேதியா ?

அண்ணாமலை தவறான தகவல் என்று என்று கூறிய பிறகும்,12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாக திட்டமிட்டே வதந்தியை பரப்பியதா பீகார் பிஜேபி தலைமை?

தவறான தகவல் விளக்கம் என கொடுத்த பிறகும் பீகார் பிஜேபி தலைமை தொடர்ச்சியாக பொய்களை பரப்பியதை தடுக்க அண்ணாமலை முன்வராததற்கு என்ன காரணம் ?

24 மணிநேரமும் ட்விட்டரில் குடியிருக்கும் அண்ணாமலைக்கு, தமிழ்நாட்டிற்கு எதிராக பீகார் பிஜேபி உள்நோக்கத்துடன் பரப்பிவரும் வதந்தி தெரியாதா? அல்லது நன்றாக தெரிந்த பிறகும் மார்ச் 3-ம் தேதி இரவு 9.30 மணி வரை அமைதி காத்ததற்கு என்ன காரணம் ?

நண்பர்களே, 12 பேரை தூக்கில் போட்டுவிட்டதாக பொய்களை பரப்புகிறார்கள். ஒன்று இரண்டல்ல 12 பேர். இப்படி எல்லாம் ஒரு பொய்யை ஒரு கட்சியால் பரப்ப முடியுமா ?

எவ்வளவு பெரிய குற்றசாட்டு.. சர்வதேச பிரச்சனை இது. இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை உலகில் எந்த கட்சியாவது மேற்கொள்ளுமா ?ஆனால், இந்த கேடுகெட்ட காரியத்தை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பீகார் BJP மேற்கொண்டது.

அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் தமிழக பிஜேபியின் தலைவர் அண்ணாமலை. இப்படி ஒரு குரூரமான எண்ணம் கொண்ட மனிதரை உலகத்தில் எங்காவது பார்க்க முடியுமா ?

ஆனால், தமிழ்நாட்டிற்கு அவபெயர் வருவதற்கு நான் விடமாட்டேன்னு கூறுகிறார். எப்போது சொல்கிறார் எல்லாம் நடந்து முடிந்த பிறகு. இரண்டு மாநில அரசுகளும் பீகார் பிஜேபி பரப்பிய வதந்தியை தடுப்பதற்கு கடந்த 4 நான்கு தினங்களாக படாதபாடுபட்டு வருகிறது.

ஆனால், பீகார் பிஜேபி பிணங்களின் மீது அமர்ந்து  அரசியல் செய்து ரத்தத்தை குடிக்கும் வரை அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு ஒய்யாரமாக கூறுகிறார் அண்ணாமலை நான் பீகார் பிஜேபி தலைவருக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன் என்று ?

நீங்கள் எந்த தேதியில், எத்தனை மணிக்கு பீகார் பிஜேபி தலைவருக்கு விளக்கம் கொடுத்தீர்கள் என கூற முடியுமா அண்ணாமலை ?

வதந்திகளை தடுக்க வேண்டுமென நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் ஒரே ஒரு இடத்தில கூட மொத்த வதந்திகளையும் திட்டமிட்ட பரப்பிய பீகார் பிஜேபியை ஏன் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை ?

IPS அதிகாரியாக பணியாற்றியபோது, RSS,BJP க்கு அடிமை சேவகம் புரிந்தது உங்களுக்கு சரியானதாக தோன்றி இருக்கலாம்.

ஆனால், முதலமைச்சராக ஆசைப்படும் அண்ணாமலை, பீகார் பிஜேபியின் கேடுகெட்டதனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது தமிழ்நாட்டிற்கு செய்திருக்கும் துரோகத்தின் உச்சம்..

8 கோடி மக்கள் வாழும் தமிழ்நாடு என்ற மாநிலத்தை அரசியல் ஆதாயங்களுக்காக கூறுபோட்டு ரத்தக்காடாக மாற்ற சதித்திட்டம் தீட்டிய பீகார் பிஜேபி தலைமையை கண்டிக்க துப்பில்லாத அடிமை வாழ்வு எதற்கு  அண்ணாமலை உங்களுக்கு?

வெளிப்படையாகவே சொல்கிறேன் தமிழ்நாடு உங்களைப்போல ஒரு பச்சை துரோகியை இதுவரை பார்த்ததும் இல்லை. இனி பார்க்கப்போவதும் இல்லை

  • B.Rஅரவிந்தாக்ஷன்
    ஊடகவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here