GujaratFiles

இந்துத்துவாவும் அதன் மற்ற வானரக் கூட்டங்களும் இணைந்து எவ்வாறு திட்டமிட்டு குஜராத்தில் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்களை அடித்துவிரட்டினார்கள், எவ்வாறு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை எரித்தும் அடித்தும் கொன்றார்கள், எவ்வாறு நூற்றுக்கணக்கான மசூதிகளை இடித்துத் தள்ளினார்கள் என்பதை அவர்களின் வாயிலாகவே சொல்லவைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் “Final Solution”.

2004 ஆம் ஆண்டு அப்படம் வெளியான போது, அதனை குஜராத் மோடி அரசு தடை செய்துவிட்டது. உடனே அந்தப் படத்தை மக்களிடம் பணம் வசூலித்து சிடி தயாரித்து இலவசமாக வழங்கினார் இராகேஷ் சர்மா. ஆனால் இலவசமாக வாங்கும் ஒவ்வொருவரும் இன்னொரு 5 சிடிக்களிலாவது காப்பிசெய்து மேலும் 5 பேருக்கு கொடுக்க வேண்டும் என்று மட்டும் அன்புக்கட்டளையிட்டார்.

அதன்பின்னர் அப்படம் மக்களின் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கானவர்களைச் சென்றடைந்தது. அப்போது நானும் பல சிடிக்களில் காப்பி செய்து ஏராளமான நண்பர்களுக்குக் கொடுத்தேன்.

பின்னர் அதுவொரு மக்கள் இயக்கமாக மாறியது. யூட்யூபெல்லாம் பிரபலமான பிறகு அது யூட்யூபிலும் வந்தது.

அதே மோடி இன்றைக்கு பொய்களையும் புரட்டுகளையும் வெறுப்புணர்வையும் தூண்டும் விவேக் அக்னிகோத்ரியின் படத்தை விழுந்து விழுந்து ப்ரமோட் செய்கிறார்.

உற்று கவனித்தால் ஒன்று புரியும். ஆர்எஸ்எஸ்ஐப் பொறுத்தவரையில், பார்ப்பனர்களுக்கு ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் கூட, ” ஐயய்யோ இந்து சமூகமே கொடுமையில் வாழ்கிறது” அப்படின்னு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பிரச்சினை மாதிரி திரிப்பதும், அதுவே குஜராத்திலும் உபியிலும் தலித்துகள் கொடூரமான அடித்துக்கொல்லப்படும் போதெல்லாம் இந்துகளுக்கு எதுவுமே பிரச்சனை இல்லை என்பதுபோலவும் கண்டுகொள்ளாமல் செல்வார்கள்…

போங்கடா டேய்… சூது என்னான்னு எங்களுக்கும் தெரியும்…

நன்றி:
Chinthan E P

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here