2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி தஞ்சை சிறுமி லாவண்யா விஷமருந்தி உயிரிழந்த விவகாரத்தில் என்ன நடந்தது..
கட்டாய மத மாற்றமே தற்கொலைக்கு காரணம் என்ற புகார் உண்மையா?
மத்திய அரசு ஆவணங்கள் என்ன சொல்கிறது என பார்க்கலாமா ?

சிறுமி லாவண்யாவின் மரணத்தை வைத்து தமிழ்நாட்டில் பிஜேபியும்,,ஹிந்துத்துவ அமைப்புக்களும் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல மதமாற்றமே மரணத்திற்கு காரணமெனக் கூறி அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தை நாடு முழுக்க பரப்பினார்கள். ஒட்டுமொத்த வடஇந்திய ஊடகங்களையும் பேச வைத்தார்கள்

தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம்,போராட்டம்,,இல்லையில்லை இந்தியா முழுக்க ABVP அமைப்பின் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.சமூக ஊடகங்களில் #JusticeforLavanya என்று ட்ரெண்டிங் செய்தார்கள்..

ABVP -ன் தேசிய பொதுச்செயலாளர் நீதி திரிபாதி தலைமையில் டெல்லியில் இருந்த சென்னை வந்த கும்பல் ஒன்று Chief Minister of Tamil Nadu தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin வீட்டை முற்றுகையிட்டு லாவண்யாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினர்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அவசர அவசரமாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து விசாரணை நடத்தினார்கள்

 

Image

BJP4India 27-01-22 ம் தேதியன்று 4 பேர் கொண்ட உண்மைக்கண்டறியும் குழுவை அறிவித்தார்கள் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார் ஜெ.பி.நட்டா.

உண்மைக்கண்டறியும் குழுவை அமைத்ததற்காக பிஜேபி மகிளா மோர்ச்சா தலைவர் வானதி ஸ்ரீனிவாசன்,கட்சித்தலைவர் நட்டாவுக்கு நன்றி எல்லாம் தெரிவித்தார் ஆனால்,ஒரு வருடம் 45 தினங்கள் ஆகிவிட்டது.இப்போது வரை அதன் அறிக்கையை BJP தலைமை வெளியிடவில்லை.

இந்தியாவையே ஆட்சி செய்யும் ஒரு கட்சி மிகவும் மோசமாக,,கீழ்த்தரமாக தீய எண்ணத்துடன் ஒரு பள்ளிச்சிறுமியின் தற்கொலையை அரசியல் ஆதாயத்திற்காக அப்பட்டமாக பயன்படுத்தினார்களா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா !
எவ்வளவு ஆபத்தான செயல் இது ?

அரசியல் ஆதாயத்திற்காக சொந்த நாட்டு மக்களிடமே பிரிவினையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை உண்டாக்கவேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு கட்சியால் இவ்வளவு தரம் தாழ்ந்து நடக்க முடியுமா? அல்லது தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தான் செயல்பட்டார்களா ?

https://swarajyamag.com/…/why-justice-for-lavanya-may-no-lo…

தஞ்சை சிறுமியின் வாக்குமூல வீடியோவை எடுத்த VHP-ன் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல்,அந்த சிறுமி மரணிக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு வீடியோவை வெளியிட்டு கலவரம் செய்ய கூட்டாக சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கு, பிஜேபியின் அகில இந்திய தலைமை வரை அப்பட்டமாக உதவி செய்துள்ளது

தஞ்சை சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கிய வீடியோவை பரப்பி பணம் பறிக்கவும்,கலவரம் செய்யவும் VHP-ன் அரியலூர் மாவட்டசெயலாளர் முத்துவேல் திட்டமிட்டது தற்போது வெளிவந்துள்ளது. எவ்வளவு கேவலமான விஷயத்திற்கு அண்ணாமலை Ex.IPS உதவி செய்திருக்கிறார் என்று நினைக்கையில் வருத்தமளிக்கிறது

https://twitter.com/Iyankarthik…/status/1635596036264828928…

25 லட்சம் பணம் பறிக்க திட்டம் தீட்டியது தொடர்பான ஆடியோ குறித்து அரியலூர் லூர்து ஆலய பங்குத்தந்தை டோம்னிக் சேவியோ கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..சரி விஷயத்திற்கு வருகிறேன்..தேசிய குழந்தை உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம்,அதாவது
NCPCR என்ற அமைப்பு என்ன கூறுகிறதென்றால்!இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் பள்ளிகளில் குழந்தைகள் மதரீதியாக பாதிக்கப்பட்டதாக 25 புகார்கள்,மதவெறுப்பால் பாதிக்கப்பட்டதாக 20 புகார்கள்,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 100 புகார்கள் மட்டுமே பதிவானதாக NCPCR தெரிவிக்கிறது

கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் 61 உண்மைகண்டறியும் ஆய்வுகளை NCPCR மேற்கொண்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில், POCSO Wing-2 Legal Wing -1 Health Wing-1 என 4 ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் மதமாற்ற துன்புறுத்தலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக ஒரே ஒரு புகார் கூட பதிவாகவில்லை என NCPCR தெளிவுபடுத்துகிறது. 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், மத ரீதியாக பாதிக்கப்பட்டதாக 25 புகார்களும்,மத வெறுப்பு தொடர்பாக 20 புகார்கள் மட்டுமே பதிவானதாக குழந்தைகளின் உரிமைகளுக்காக இயங்கும் NCPCR எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கிறது. நண்பர்களே அதில் ஒரே ஒரு புகார் கூட தமிழ்நாட்டில் இருந்து பதிவாகவில்லை

ஆனால்,தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்புவதற்காகவே மட்டுமே சிறுமி லாவண்யாவின் மரணத்தை பூதாகரமான விஷயமாக மாற்றியிருக்கிறார்கள்
ஒரு பள்ளிச் சிறுமியின் மரணத்தை வைத்து பணம் பறிக்க திட்டமிட்டது மட்டுமின்றி
மரணப்படுக்கையில் இருந்த சிறுமியிடம் வீடியோ வாக்குமூலம் எடுத்து,,அந்த குழந்தை சாகும்வரை காத்திருந்து அதன் பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டு அரசியல் செய்தது எல்லாம் கேடுகெட்ட அரசியல் என்று கூறினால் என்ன தவறு.
யோசித்துப்பாருங்கள்

இந்தியாவையே ஆட்சி செய்யும் ஒரு கட்சி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா?
மக்களின் ஒற்றுமையை சிதைத்து,மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலமாக ஆதாயம் அடையநினைக்கும் இந்த வகையான அரசியல் ஆரோக்கியமானதா? இது தமிழ்நாட்டுக்கு நலனுக்கு மட்டும் எதிரானதல்ல ஒட்டு மொத்த தேசத்திற்குமே கேடு விளைவிக்கக்கூடியது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக சொன்னால் கூட தவறில்லை.
ஆம் இவர்களின் இந்த துரோக செயல்,மனித குலத்திற்கே எதிரானது..

B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here