இதுதான் தமிழக பத்திரிகை உலகம்!

பெரும்பாலான விஐபிகளுக்கு செய்தியாளர்கள் என்போர், தங்கள் தோட்டத்தில் வேலைப் பார்க்கும் பணியாளர்கள் என்கிற பண்ணையார்த்தன சிந்தனை இருக்கிறது. இதைப் பல நேரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலையும் அப்படிப்பட்டவர்களில் ஒருவராகியிருக்கிறார். கை கட்டி, வாய்ப்பொத்தி, சொல்லுங்க ஐயா என சொன்னதை எழுதிவிட்டு போக வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த சந்திப்பில் எந்தப் பத்திரிகையாளரும் திணறவைக்கும் கேள்விகளை கேட்கவில்லை.

ஒருவர் மிக சாதாரணமான கேள்வி ஒன்றை கேட்கிறார். அதைக்கூட நேர்மையாக எதிர்கொள்ள அண்ணாமலையால் முடியவில்லை. கதறுகிறார். காசு வாங்கிக்கோ என அவமதிக்கிறார். அங்குள்ள சில பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். பல பத்திரிகையாளர்கள் அதிகாரத்தைக் கண்டு அஞ்சி சுரணையற்று அமர்ந்திருக்கிறார்கள்.

இதுதான் தமிழக பத்திரிகை உலகம்.

முகநூல் பகிர்வு

மு.வி.நந்தினி
ஊடகவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here