உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது!

தமிழக அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை. நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இப்படியே போனால் கொஞ்ச நாளில் விவசாயம் என்பதே இல்லாமல் போய் நம் தமிழ்நாடும் இலங்கை போல் ஆகும்.

ஒரு விவசாயி கணக்கு:
எங்களுக்கு 7 ஏக்கர் நிலமும் மூன்று கறவை மாடுகளும் வைத்துள்ளோம்.
எங்கள் ஊரில் இருக்கும் ஆவின் பால் பண்ணைக்கு தான் பால் ஊற்றுகிறோம்.
ஒரு மாட்டிற்கு உண்டான வரவு செலவை கீழே கொடுத்துள்ளேன்.

ஒரு நாளைக்கு
* Feed(தீவனம்-3கி)-₹96
* தவிடு(3.5கி)-₹52
* சோழத்தட்டு(4கத்தை)-₹152
* ஆள்கூலி(1மாட்டிற்கு) -₹100
* ஆக மொத்தம்-₹304(ஒரு நாள் செலவு)
* பால் சராசரி-₹8லிட் × ₹29= ₹232(ஒரு நாள் வருமானம்)
* ஒரு மாட்டிற்கு ஒரு நாள் நஷ்டம்-₹72
* மூன்று மாட்டிற்கு-₹216
* ஒரு வாரத்திற்கு நஷ்டம்-₹1512
* ஒரு வருடத்திற்கு நஷ்டம் -₹80,000
தலை சுற்றியது.

இதில் நான் மாட்டிற்கு சினை ஊசி போட, மாட்டிற்கு உடம்பு சரியில்லை எனில் வைத்தியம் பார்க்க, பசுந்தீவனம் (சீமைப்பில்) இதையெல்லாம் கணக்கில் சேர்க்கவில்லை.
இன்று ஒரு லிட்டர் தண்ணி விற்பனை விலை-₹25 ரூபாய்.
ஒரு குவாட்டர் சாராயம்(200ML) விற்பனை விலை-₹120
ஆனால் தன் இரத்தத்தை பாலாக்கும் மாட்டின் பாலிற்கு கொள்முதல் (1லிட்) விலை-₹29.
அநியாயமாக தெரியவில்லையா.

எப்படி விவசாயி தன் குடும்பத்தை நடத்துவான்.
சரி என் கதைக்கு வருவோம்.
அம்மா, பால் ஒரு லிட்டர் -₹40 ரூபாய்க்கு ஆவினில் வாங்கினால் மாட்டை வைத்திருங்கள். இல்லையெனில் தயவுசெய்து விற்றுவிடுங்கள்.
இல்லையெனில் இருக்கும் நிலத்தை விற்றுத்தான் நாம் பிழைக்க வேண்டும்.
இன்று சினிமா, டாஸ்மாக், மருத்துவம், கேபிள் என்ற பெயரில் மக்களின் பணத்தை சுருட்டும் கொள்ளை கும்பல் ஒரு பக்கம். மக்களின் பணத்தை அவர்கள் அறியாமலே பிடுங்கும்போது.

அத்தியாவசிய உணவான பாலிற்கு கூட செலவு செய்ய முடியாத நிலைமையை உருவாக்கிவிட்டனர்.

தமிழக அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை. நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இப்படியே போனால் கொஞ்ச நாளில் விவசாயம் என்பதே இல்லாமல் போய் நம் தமிழ்நாடும் இலங்கை போல் ஆகும்.

என்று தாயிடம் கூறிவிட்டு வேலைக்கு கிளம்பினேன்.

நம்மைப் போல்தானே எல்லா விவசாயிகளும் கணக்கு பார்க்காமல் அழிகிறார்கள் என நினைக்கும் போது
நெஞ்சம் வலித்தது.

நவீன விவசாயி பதிவு
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here