பிபின் ராவத் பத்த வச்ச கொள்ளியே அக்னிபாத்!

முப்படைகளின் தளபதியாக இருந்து மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆர்எஸ்எஸ்க்கு வேலை செய்து கொண்டு இருந்தவர் பிபின் ராவத். 2020இல் அவர் உருவாக்கிய திட்டமாம் இது.

Tour of duty என்ற பெயரில் அவர் தீட்டிய திட்டம் அது. குறைந்த காலப்பணி எனப்படும் short service commission இப்போதும் ராணுவத்தில் உள்ளது. அது அதிகாரிகளுகக்கானது. கீழ் மட்ட சிப்பாய்களுக்கு ஆனது அல்ல. இரண்டாம் உலகப் போரின் போது அதிகாரிகள் மட்டத்தில் இருந்த ஆள்பற்றாக்குறையை சரிக்கட்ட பிரிட்டிஸ் ஆட்சி கண்டறிந்த ஒரு திட்டம்.

அதே போல் விடுதலை பெற்ற பின் இந்திய சீனப்போருக்குப்பின் emergency commission மீண்டும் திறக்கப்பட்டது, குறைந்த காலப்பணியில் அதிகாரிகளை நியமித்து 10 வருடங்களுக்கும் பின் அவர்களை விடுவிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னையில் உள்ள officers training school அதற்கான பயிற்சிக்கு என்றே உருவாக்கப்பட்டது.

படிக்க:

அதிகாரிகள் அல்லாத பல லட்சம் நிரந்தர சிப்பாய்களை பணியில் அமர்த்தாமல் 4 வருட பணியில் வைத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பும் கேவலமான இத்திட்டம்
பிபின் ராவத்தின் மூளையில் உருவானதற்கு மிகப்பெரிய தேசபக்தி, பாரத்மாதா கீ பக்தி போன்ற ஒரு மண்ணும் காரணம் இல்லை. கொடுமையான ராஜஸ்தானின் மேற்குப் பகுதி தார்பாலைவனம் கோடையில் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லும், டிசம்பர், ஜனவரியில் 5 டிகிரி செல்சியஸ் வரை கடும் குளிர் நிலவும்.

இமயத்தின் சியாச்சின் முனையிலோ மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை கற்பனைக்கு எட்டாத குளிர் நிலவும். ஆக்சிஜன் அநேகமாக இருக்காது. உயிர்வாழ்வது அதிசயம். சியாச்சின் முனையில் எந்த ராணுவ வீரரும் நிரந்தரமாக பணியில் வைக்கப்பட மாட்டார் என்பதற்கு இது போல பல காரணங்கள் உள்ளன.
ஆக இது போன்ற கடுமையான சூழல்களிலும் போர்முனையில் நேரடியாக எதிரிகளை சந்திக்கும் நிலையில் உள்ள கீழ் மட்ட சிப்பாய்கள் (உயிரோடு இருந்தால்) ஓய்வுபெறும் போது அவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் அரசு தரும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல பணப்பயன்கள், சலுகைகளால் அரசாங்கத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் செலவாகின்றது, அதை தவிர்க்க வேண்டும், அவை அவசியமற்ற செலவுகள் என்று கருதிய பிபின் ராவத்தின் கருணையற்ற, கொடூரமான அதிகார வர்க்க மூளையில் உதித்ததுதான் 4 வருட சிப்பாய் காண்ட்ராக்ட். அதற்கு மோடி அரசு வைத்த பெயர்தான் அக்னிபாத்.

சியாச்சின் மலை பகுதியில் பணிபுரியும் இராணுவ வீரர்கள்

பிபின் ராவத்தின் மூளை நாக்பூர் மூளை. ஆர் எஸ் எஸ் உயர்சாதி மூளை. என்னவோ அவர் விபத்தில் இறந்தவுடன் இந்தியாவே இருட்டானது போல் பலர் பொங்கிப் பொங்கி அழுதார்கள். நம் தோழர்கள் சிலரும் கூட அடக்கம்.

படிக்க:

ராணுவமும் போலீசும் அரசின் அடக்குமுறைக்கருவிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் சிப்பாய்களாக ராணுவத்தில் சேர விரும்புவோர் அநேகமாக 99 விழுக்காட்டினர் இந்திய சமூகத்தில் அந்தஸ்து நிலையிலும் பொருளாதார நிலையிலும் கீழ் மட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி, பழங்குடி வகுப்பினர்தான், உழைப்பாளி மக்களின் குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். அதிகாரிகள் மட்டத்தில் அநேகமாக ஆதிக்கசாதி, மேல்சாதி வகுப்பினர்தான் ஆக்கிரமித்து உள்ளனர், இதில் ரகசியம் எதுவும் இல்லை. ஆக இங்கே அதிகாரிகள், அதிகாரிகள் அல்லாதோர் என இரண்டு தரப்பிலும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றக்காரணம் பொருளாதாரம்தானே ஒழிய இதில் ஆகப்பெரிய தேசபக்தி எதையும் தேடவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

அப்படி எல்லாம் இல்லை, தேசபக்தி குருதியில் கொதித்து கொப்பளித்து காது மூக்கு வழியே வழியும்போது ராணுவத்தில் சேர ஓடுவார்கள் என்று யாரேனும் சொன்னால் அவர்களை நோக்கி நாம் முன்வைக்க வேண்டிய கேள்வி இதுதான்: பாரத்மாதா கீ சேனாவில் சிப்பாயாக (அதிகாரியாக அல்ல) பணியாற்றும் லட்சக்கணக்கான பேர்களில் எத்தனை பேர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், ஸ்மிர்தி இரானி, ஜெய்சங்கர், சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, பிபின் ராவத், சோ ராமசாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், ரஜினிகாந்த், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், புட்டபர்த்தி சாய்பாபா, நுபுர் ஷர்மா குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்?

  • மு.இக்பால் அகமது

முகநூல் பகிர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here