சம உரிமை – இட ஒதுக்கீடு = பார்ப்பன மேலாதிக்கம்!


தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி எனக் கருதுவோரும் திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்வார்கள்.

‘ இட ஒதுக்கீட்டில் கூட பிரச்னையில்லை. ஏற்கனவே பலனடைந்தவர்களே திரும்பத் திரும்பப் பலனடைகிறார்கள். அந்த சமூகங்களைச் சேர்ந்த பிறருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது ‘ என நீலிக் கண்ணீர் வடிப்பார்கள்.

நானும் இந்த வாதத்தை வைக்கும் பல நண்பர்களை , அறிமுகமானவர்களை கேட்டபடி இருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த யாரவது பட்டியலின/ பிற்படுத்தப்பட்ட

1)ஐ ஏ எஸ் / ஐபிஎஸ் / அல்லது மருத்துவம் / பொறியியல் துறைகளில் அல்லது அதே ரீதியான இதர ஒன்றிய / மாநில முதல்நிலை அதிகாரிகளாக இருந்தவர்களின் பிள்ளைகள் அதே பதவிக்கு வந்ததாகத் தெரியுமா ?

தெரிந்தால் பட்டியலைக் கொடுங்கள் என்பதே .இப்போதும் இதை வாசிப்பவர்கள் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஏன் முதல்நிலையைக் குறித்து மட்டும் கேட்கிறீர்கள் என்ற கேள்வி எழும். பதில் நேரடியானது / எளிமையானது , கடைநிலை / இடைநிலை ஊழியர்களின் பிள்ளைகள் அதே வேலையைப் பெறுவதையும் ‘ பொறாமையாக’ பார்க்கும் அநாகரிகம் இழிவானது. பொருட்படுத்தும் தகுதியற்றது. அதிலும் கூட சதவீதம் மிகச் சொற்பமானது.

1990 களிற்கு பின்னரான உலகமயமாக்கல் அரசு வேலையை முன்னுரிமை பெற்ற நிலையிலிருந்து தள்ளிவிட்டது. முதல் தலைமுறை அரசு வேலை பெற்றவர்களின் ( SC/ST/OBC ) பிள்ளைகள் அரசுத்துறைக்கே வருவது இல்லை. அப்படியே வந்தாலும் 1-2% அளவில் மட்டுமே இருக்கும்.

ஆனால் இட ஒதுக்கீடே இல்லாத நீதித்துறையின் உயர்நீதி / உச்சநீதி மன்றங்களில் சர்வசாதாரணமாக பார்ப்பன / உயர்ஜாதியினரை மூன்று தலைமுறையினரைக் காணமுடியும். தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் அப்பா உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவரது மகன் ‘நீதிமன்றங்களும் பார்ப்பனப் பரம்பரைகளும் ‘ என கடும் விமர்சன நூலே எழுதியுள்ளார். என்ன செய்ய ? வாரிசாக இருந்தாலும் இப்போதைய சந்திரசூட் தான் நமக்கான/ நீதிக்கான மனிதராகவும் இருக்கிறார். நிற்க.

இப்போதுதான் ‘மெயின் ஸ்டோரி ‘ . இந்திய ஐஐடிகளின் பேராசிரியர் பணியிடங்கள் 85% மேலான பட்டியலின / பழங்குடி/ ஓபிசி இடங்கள் நிரப்பாமல் காலியாக உள்ளது எனத் தெரிவிக்கிறது தகவலறியும் உரிமையின் கீழ் பெறப்பட்ட ஒன்றிய அரசு தகவல்.

நியாயமாரே! முதல் தலைமுறைகளையே இன்னும் உள்ளே நுழைய விடாமல் 21 ஆம் நூற்றாண்டிலும் சாதனை செய்யும் உங்களுக்கு என்னதான் வேண்டும். உயர் தொழிற்நுட்பம், ஆராய்ச்சி மையங்கள் என பலவும் இன்னும் இட ஒதுக்கீட்டிற்கு வெகு தொலைவில் உள்ளது. அங்கே நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். ஆனால் போதவில்லை. அதற்காகத்தான் ஜெய் ஶ்ரீ ராம்.

இந்தப் புளுகர்கள் இதற்கும் ஏதாவது விளக்கம் சொல்வார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் இதுபோன்ற ‘புனித வாதங்களை’ வைக்கும் காயத்ரி, ஶ்ரீராம் சேஷாத்திரி, இன்னொரு ஶ்ரீராம், அப்புறம் டாக்டர் சுமந்த் ராமன் போன்றவர்களை ‘ பார்ப்பனர்கள்’ என மட்டுமே ‘ அட்டை’ போடுவதுதானே சரி. வேண்டுமானால் அவர்கள் மனம் நோகாமல் ‘ பிராமணர் ‘ என்று கூட போடலாம்.

பட்டியல் இணைப்பில் .

நன்றி:
சுபகுணராஜன். VMS.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here