டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி ஸ்ரீ பட் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச்செய்தி இது.

இதுபோன்ற பத்திரிக்கை செய்திகளை வெளியிடுவதில் இருந்தே தற்குறிகளின் சிந்தனை மற்றும் அறிவு மட்டத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்த அம்மையார் இந்த துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பார்ப்பன மதவெறி கருத்துகளை எந்தவித ஆதாரமும் இன்றி தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.
அது ஒன்றே அவர் இந்த பதவிக்கு வருவதற்கு முக்கிய தகுதியாக இருந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள வலதுசாரி “முட்டாள் ஜீவிகள்” JNU இடதுசாரிகளின் கூடாரமாக செயல்படுகிறது, அர்பன் நக்சல்கள், ஆன்ட்டி இந்தியன்கள், பிரிவினைவாத சக்திகள் ஆகியவர்களின் புகலிடமாக உள்ளது என்று கதை அளந்துகொண்டே உள்ளனர்.
இத்தகைய ஜெயமோகன் வகையறாக்களின் அபிலாசை தற்போது சாந்தி ஸ்ரீ பட் நியமிக்கப்பட்டதன் மூலம் நிறைவேறி உள்ளது.
ஆனால் அறிவியல் ரீதியில் ஆய்வு செய்கின்ற வாய்ப்புள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூகம், பண்பாடு குறித்து பல்வேறு அற்புதமான கருத்தாக்கங்களை உருவாக்கிய JNU வின் நிலைமை இப்படி ஆகி விட்டதை கண்டு வெட்கப்படாமல் என்ன செய்ய முடியும்?

ஒரு புதிய காமெடி சேனல்

ஜேஎன்யூ பல்கலைக் கழகத்திற்கு ஒரு புதிய துணை வேந்தரை நியமித்திருக்கிறார்கள். பெயர் சாந்திஶ்ரீ பட். சென்னை ப்ரெஸிடென்சி கல்லூரியில் படித்தவர்.

வந்தவுடன் வேடிக்கை தொடங்கி விட்டது. இவருடைய டிவிட்டர் பக்கத்தில் அப்பட்டமான மதவாதக் கருத்துக்களை முன்பு பதிந்திருக்கிறார்.
அதைக் குறித்து கேட்ட போது என் டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப் பட்டிருக்கிறது என்றார். எனக்கு எனக்கு டிவிட்டர் கணக்கே இல்லையென்றும் சொன்னார். இல்லாத கணக்கை எப்படி ஹேக் செய்ய முடியும் என்றால் என் மகள் சைபர் பாதுகாப்பு நிபுணர்… அவர்தான் கண்டுபிடித்தார் என்கிறார்.
துணை வேந்தியாக நியமிக்கப் பட்டதற்கு நன்றி சொல்லி அவர் எழுதிய கடிதத்தில் ஏகப்பட்ட பிழைகள். பிழைகளைத் திருத்தி அவருக்கு 10க்கு 6 மதிப்பெண்களை கொடுத்து டிவிட்டரில் ஒரு நேசமணி பதிவிட்டு விட்டார். (கமெண்ட் பகுதியில் கடிதத்தைப் பார்க்கலாம்)
இந்தக் கடிதத்தை நான் டிக்டேட் செய்தேன். முன்னாள் விசிக்கு பணி புரிந்த அலுவலக ஊழியர்கள் இப்படிச் செய்து விட்டனர் என்று பழியை அவர்கள் மீது போட்டு விட்டார். டிக்டேட் செய்யும் கடிதத்தை படித்துப் பார்க்காமால் யாரும் கையொப்பம் இடுவதில்லை.
இது தவிர இவர் மேலும் சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார்:

நான் ஒரு விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவள் (எந்தப் பிரிவு என்று சொல்லவில்லை)…. 70 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி செய்த போதும் (????) ஒரு பெண்ணை ஜேஎன்யூ துணை வேந்தராக நியமிக்கவில்லை… இப்போதுதான் நடந்திருக்கிறது … நான் மதச்சார்பற்றவள், என் வகுப்பில் முஸ்லிம் மாணவிகள் இருந்திருக்கிறார்கள்….

எத்தனை ஆடுகளைத்தான் இந்த உலகம் தாங்கும்?

நன்றி:
விஜயசங்கர் ராமச்சந்திரன்.
ஆசிரியர்.
Frontline.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here