ஒட்டாண்டி நிலையினை நோக்கி இந்தியாவினை உந்தித் தள்ளும் இந்துத்துவா!
இந்தியா முதன்மையான ஏழு வளைகுடா நாடுகளுடன் மட்டுமே 18 விழுக்காடு வெளிநாட்டு வணிகத்தினைச் செய்கின்றது {18.3% of its combined value of imports and exports in 2021-22}.
GCC (Gulf Cooperation Council) நாடுகளுக்கான ஏற்றுமதி மட்டும் 58.26% ஆல் கடந்தாண்டு அதிகரித்திருந்தது, இதன் பெறுமதி 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இத்தகைய ஏற்றுமதிப் பொருட்களே வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல பொருட்கள் விரைவில் பழுதடையக்கூடிய மாட்டிறைச்சி போன்ற பொருட்கள். மாட்டிறைச்சியானது எகிப்துக்கு 2316 கோடியும், சவுதிக்கு 1316 கோடியும், ஈராக்குக்கு 767 கோடியும் இந்திய ரூபாவில் 2015-16 இல் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இப் பெறுமதி இப்போது இன்னமும் அதிகம். இவ்வாறான பொருட்களை இனி அராபிய நாடுகள் பிரேசிலிடமிருந்து பெறலாம்; ஆனால் இந்தியாவால் அவ்வாறு எளிதாக எரிநெய்யினையோ (பெற்றோல்), எரிவளிமத்தினையோ (Gas ) இவ்வாறு வேறு நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது.

உலக வங்கியின் கணிப்பின் படி 2018 ம் ஆண்டு இந்தியாவுக்குக் கிடைத்த NRI வருமானம் 79 பில்லியன் டாலர். இது அப்போதைய மொத்த உள்நாட்டு ஆக்கத்தில் 3 விழுக்காடாகவும் {2.9% in GDP}, வெளிநாட்டுப் பணமாற்று விகிதத்தில் ( Foreign exchange money ) 22% ஆகவுமிருந்தது. இதில் மிகப் பெரும்பான்மையான பணம் அரபு நாடுகளிலிருந்தே கிடைத்தது. அராபிய நாடுகளில் ஏறக்குறைய 9 மில்லியன் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் மட்டும் வேலை செய்கின்றார்கள். கூலி வேலை முதல்கணினிப் பொறியியல் வரை, செவிலியர் முதல் மருத்துவர் வரை, சிறு குறு வணிகர்கள் முதல் கார்ப்பிரேட் வணிகர்கள் வரைப் பல இந்தியர்கள் வேலையிலுள்ளனர்.
படிக்க:
♦ பாப்ரி மசூதியிலிருந்து கியான்வாபி வரை – இந்திய நீதிமன்றங்கள்!
♦ இந்துமதமும்! இந்துத்துவாவும் ஒன்றல்ல!
இங்கும் இழப்பு இரு பகுதிக்கும் எனினும் இன்று உலகளாவிய முறையில் காணப்படும் வேலையின்மைச் சிக்கலுக்கு நடுவே அராபிய நாடுகளால் வேறு நாடுகளிலிருந்து இலகுவாக வேலையாட்களைப் பதிலீடு செய்ய முடியும். இந்தியாவால் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ இவர்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியாது.
இந்தியாவும் சில ஆண்டுகளில் இலங்கையினைப் போல நொடிந்து போவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன. தமிழர்கள் விழித்துக் கொண்டு இப்போதே தன்னறைவுப் பொருளாதாரம் நோக்கி நகர வேண்டும்.
- வி.இ. குகநாதன்.