பொடியரசு!
மாட்டிறைச்சி வைத்திருந்தவனைக்
கொன்று விளிம்புநிலை
பண்பாட்டுக்கு
அடி!
நீட்டைக் கொண்டு வந்து
ஏழைப்பிள்ளைகளின்
மருத்துவக் கல்வி
கனவுக்கு
அடி!
விளைநிலங்களை
கார்ப்ரேட்டுகளுக்கு கொடுத்து விவசாயத்துக்கு
அடி!
ஜிஎஸ்டி போட்டு
சிறுதொழிலுக்கு
அடி!
அய்யப்பன்
கோவிலுக்குப்போனால்
பெண்களுக்கு
அடி!
ஸ்டெர்லைட், மீத்தேனுக்கு
போராடிய இளைஞர்களுக்கு
அடி!
அம்பானிக்காக
அதானிக்காக
வேதாந்தாவுக்காக
அமெரிக்காவுக்காக
இந்தியனுக்கு அடி!
காஷ்மீருக்கு
அஸ்ஸாமுக்கு
ஜாமியாவுக்கு
ஜெஎன்யுவுக்கு
என எங்கும்
அடி
அன்று
ராபர்ட் கிளைவிடம்
அடி!
இன்றோ
மோடியிடம்
அடி!
கோர்ட்டிடம் அடி!
போலீஸிடம் அடி!
என்டிடிவி, ஐஎன்என்,
சன், தந்தி, பு.த.மு
ஊடகங்களிடமிருந்தும்
ஏழை இந்தியனுக்கு
அடி!
இந்திய நாற்காலிகளில்
அடியாட்கள்
உட்கார்ந்திருக்கிறார்களே
இது அடியரசோ!
சந்தேகம் தோன்றியது
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக்
காட்டிய காலம் மாறியது
பொளீர்!
விவசாயிகள்
அடித்தார்கள்
பஞ்சாப் அடித்த அடியில்
உயிரோடுதான் இருக்கிறேன்
ஓட்டம் பிடித்து திரும்பினார்
டிராமா போட்டு
அடித்த அடியில்
பால்வாடியைக் கண்டால்
பயந்து நடுங்குகிறார்
மா மன்னர்
போதாக்குறைக்கு
ஒரு மெஷின்..
டெலிபிராம்டர்
டவுசரை உருவியது
அடிச்ச கைப்பிள்ளைக்கே
இவ்வளவு ரத்தம்ன்னா..
சாக்லெட்
பரிமாறி சிரிக்கிறது
டிராமா பொடியரசு!
- கரிகாலன்