ராத்திரி திட்டங்களின்
ராவு கால நாயகனின்
ரஃபேல் கொள்முதலில்
கார்ப்பரேட்டுகளின் பின்பக்கம்
கொழுத்து தொங்குகிறது.

இந்தியாவின்
அரைஞான் கொடியும் கூட
அறுக்கப்படலாம்!

ஏழைகளின் உயிர்கள் மட்டும்
எஞ்சி இருக்கலாம்!

பூநூல்களின் நாணில்
சாமானியனின்
கழுத்தறுக்கும் நிலை!

நீதி மன்றத்தின்
தராசுகளின் தட்டுக்களை
பூநூலே தாங்கி நிற்கிறது!

மாட்டுக்கு கவலைபடும்
கூட்டங்கள்
மனித உயிர்களின்
இரத்தம் குடிக்கும்
அசைவ பிராணிகளாய்
உள்மாற்றம் செய்து கொண்டன
உருவம் மட்டும்
மனித நிலை!

விமானப் பயணியாய்
பிரதம பணி செய்த
காவி தேசத்தின்
எடுபிடிக்கு
கார்ப்பரேட் எஜமானருக்கு
கால் கழுவி விடவே
நேரமில்லையாம்
போதாகுறைக்கு
துணைக்கு
ஊடகத்துறையும்……

இலவம் பஞ்சு காய்களைப்
போல வெடித்து பரவுகிறது
இந்துத்துவாவின் விசம்.
மனித குலமே
தற்காத்து கொள்!

நன்றி: முகம்மது காசிம்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here