3 வயது
குழந்தையும் பாலியல் வல்லுறவு
செய்து கொலை செய்யப்படுகிறது…
85 வயது
மூதாட்டியும்
பாலியல் வல்லுறவு-க்கு உள்ளாக்கப்படுகிறார்கள்!
சொந்த கட்சி
பெண்ணுக்கே – பாதுகாப்பு இல்லை
பாலியல் வல்லுறவு நடந்தேறுகிறது
சிங்கப்பெண்
சிறப்பு படை திட்டம்
தொடங்குவதை விட…
மேலாளர் வீட்டு
புதுமனை புகுவிழா!
அரசருக்கு – முக்கியமாகிப்போனது !
சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தால்
நமக்கென்ன!
சக்காளத்தியோடு ! நகர்வலம் போவோம் !
என திரியும் ! அரசர் !
பைத்தியம் ஊரை
கொளுத்தியது என்பதை விட !
பைத்தியத்தின் கையில்
தீப்பெட்டியை கொடுத்தது
மக்கள் என்பது
வரலாற்று முரண் !
நடிகர் – அரசரா?
அரசராக – நடிக்கிறாரா?
கேள்விக்கு – விடை
20 -தே நாளில் கிடைத்துவிட்டது !
அடுத்து என்ன?
என்பதை சிந்தி !
- செங்கூற்றன்
படிக்க: சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!






