பெரியார் உயிரோடு இருந்திருந்தால்….

0

பெரியார் உயிரோடு இருந்த போது
இப்படி ஒரு படம் வெளியிட்டிருந்தால்
நடந்திருப்பதே வேறு!

கெடுமதி கொண்டு
கேடு விளைவித்தவன்
கைகள் இரண்டை வெட்ட சொல்லி இருப்பார்.
தன்னை முழுமையாய் காணாது,
தன் கை போன போக்கில்
வரைந்தவனை அழைத்து வர சொல்லி இருப்பார்…

கண்ணாடி சரியில்லை
கைத்தடி சரியில்லை
என கடிந்து கொண்டிருப்பார்.

“ஏண்டா ஒரு படத்தை கூட ஒழுங்காக வரையத் தெரியாதா”
என கமலாலய ஊழியனின்
கை பிடித்து
வரைய சொல்லிக் கொடுத்து இருப்பார்..

செருப்பெடுத்து வீசியவனிடம்,
“ஒரு செருப்போடு என்ன செய்ய?
இன்னொன்றை வீசு” என்று
அதே செருப்பால் அடித்தவரல்லவா பெரியார்?

தன்மானம் காக்க தமிழ்நாட்டுக்கே
வகுப்பெடுத்த தந்தை அவர்.
தனது சுய கெளரவம் குறித்து
சுத்தமாய் சட்டை செய்யாத
சுயமரியாதை சுடரல்லவா பெரியார்?

எப்போதும் போல இப்போதும் அழுகிறேன்…
நாயக்கர் என்று வசைபாடப் பெரும்
அந்த நாயகர் இல்லையே!

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here