அனைவருக்குமான தலைவரா அம்பேத்கர்?
ஒடுக்கப்பட்ட மக்களின்
விடுதலைக்கு போராடும்
தோழர்களுக்கு தலைவர்..,
ஆர்.எஸ்.எஸ்
அட்டவனைக்கு
ஆட்டம் போடும்
அல்லக்கைகளுக்கும்
தலைவரா??
ஏற்றத்தாழ்வான சமூகத்தில்
எல்லோருக்குமான தலைவர்
எப்படி இருக்க முடியும்.?
குடிநீரில் மலம் கலந்து
சுடுகாட்டு வழி தடுத்து
விடியலின் ஒளி மறைத்து
வர்ணத்தை கட்டிக் காக்கும்
ஆதிக்க வெறியர்களுக்கா
தலைவர் அவர்?
நாள் முழுதும் வயல் உழுது
ஆண்டைகளின் அடி சுமந்து
சூத்திர பட்டம் சுமந்து
விடுதலைக்குப் போராடும்
பூர்வகுடி மக்களுக்கு தான்
தலைவர் அவர்.
நாக்பூர் கட்டளைக்கு ஏற்ப
நாவில் நாட்டியமாடும்
நடிகர்கள், இயக்குநர்கள்
அம்பேத்கர் எழுதிய
அரசியல் சாசனமும்,
அறிவியலுக்கு எதிரான
பகவத் கீதையும்
ஒன்றாக கருதும்
அரசியல் ‘ மூளை ‘ வளர்ச்சி இல்லாத
பனையூர் பண்ணையார்,
படங்களில் நடித்தது போதுமென்று
ஆர்.எஸ். எஸ் இன்
கதை – வசனம் – இயக்கத்தில்
மேடைகளில் நடிக்க
வந்திருக்கிறார்.
பெரியாரின் பணி மறைத்து
திராவிடத்தை எதிர் நிறுத்தி
இனவெறிக்கு உணர்வூட்டி
திரள்நிதிக்கு வாய் விற்று,
பிரபாகரன் கதை கேட்டு
வாய்பிளந்த தம்பிகளின்,
கரம் பிடித்து கமலாலயம்
அழைத்து செல்ல
கதைக்கிறார்
உருட்டுக்களின் பிதாமகன்.
அரசியலில் பிழைத்திருக்க
அம்பேத்கர் பிச்சை எடுக்கிறார்கள்.
அம்பேத்கர் இருந்திருந்தால்
அடிக்கொம்பால் வெளுத்திருப்பார்.
சனாதன இந்து மதத்தை
அம்பேத்கர் பெரியார்
அடித்ததை போல
நாமும் சேர்ந்து அடிப்போம்.
ஆண்டையை
அடிக்கிற அடியில்
அல்லு சில்லுகள்
தெறித்து ஓடிவிடும்..
- செல்வா
நெற்றியடி தோழர் செல்வா! பொறுக்கி நடிகர் விஜய், ஆமைக்கறி புகழ் புளுகன் சீமான் முதலிய சீரழிவு சக்திகள் மணிப்பூரில் மலைவாழ் குக்கி இன கிறித்தவ சிறுபான்மையினரை மெய்தி இன பிற்படுத்தப்பட்ட மக்களை தூண்டிவிட்டு நூற்றுக் கணக்கானோரைக் கொலை செய்து, குக்கி இன இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்து கொலை செய்திட்ட ஆர் எஸ் எஸ் பாஜக இந்து மத வெறி கும்பல் குறித்து இந்த கழிசடைகள் வாய் திறக்கவே இல்லை. இது மட்டுமல்ல வடநாடு முழுமையும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் முழுமையும் சிறுபான்மையினரான இஸ்லாமிய கிறிஸ்தவ தலித் மக்கள் மீது இந்த சங்கிகள் கூட்டம் நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக கட்டவிழ்த்து விடும் படுபாதக செயல்களைப் பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை! காரணம் தாம் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள சொத்தையும், மேலும் சேர்க்கத் துடிக்கும் இழி செயலுக்கும் பாதுகாப்பாக ஆர்எஸ்ஸ்-பாஜக தயவு இந்த இழிபிறவிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் தான் அவர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை! மாறாக சங்கி என்றால் ‘சக தோழன் சக நண்பன்’ – என்ற புது வியாக்கியானத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது இந்த பிராணி சைமன் சீமான்! எனவே இவை குறித்தும் அம்பலப்படுத்தி சில வரிகளை நீட்டிப்பு செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.
ஏனெனில் இவர்களது எண்ணவோட்டம் முழுமையும் தமிழ்நாட்டில் மட்டுமே வட்டமடிக்கிறது என்பதையும், அகில இந்திய அளவில் கார்ப்பரேட் காவி பாசிசம் பேரபாயமாக முன்னிற்பதை இவர்கள் துளியும் கண்டு கொள்ளவே இல்லை என்பதையும், இவர்கள் ஆர் எஸ் எஸ் -பாஜகவின் கைக்கூலிகளாகி விட்டவர்கள் என்பதையும் உணர்வோம்!
நன்றி தோழர் எழில்மாறன்
சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் ஆண்டைகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சரியான சவுக்கடியாக கவிதை உள்ளது. தோழருக்கு வாழ்த்துக்கள்
நன்றி தோழர் ஆனந்தன்
அம்பேத்கரை பயன்படுத்தி பதவி ஆசையில் ஓட்டுக்காக கொள்ளை புறத்தில் நுழையும் கை சாடைகள் இவர்கள்
உண்மை
உண்மைதான்