வேலை ஏய்ப்பு

இருப்பது இரண்டு ரொட்டி
உண்ணத்துடிக்கும் வாய்களோ கோடி

கோடி வாய்களுக்கு
கேடி வித்தை புரிவதில்லை

பசியின் பதட்டத்தில்
வாழ்க்கை ஒளி தெரிவதில்லை

இருப்பது இரண்டு ரொட்டி
உண்ணத்துடிக்கும் வாய்களோ கோடி

கோடி வாய்களே கேடிகளை உணருங்கள்
போட்டி போர்களை விலக்கி வையுங்கள்
பசியின் நெருப்பிலே வெளிச்சம் தேடுங்கள்
ரொட்டி சமைத்திட அரசியல் பயிலுங்கள்

அன்பு முத்தங்களைப் பகிருங்கள்
கேடி கோட்டைகளை நொறுக்குங்கள்
மக்கள் அதிகாரம் நிறுவுங்கள்
நாம் சமூகவிஞ்ஞானப் பயணிகள்

இருப்பது இரண்டு ரொட்டி
உண்ணத்துடிக்கும் வாய்களோ கோடி

புதியவன்

1 COMMENT

  1. தேர்வறையில் மணியடித்தது தெரியாமல்
    கோவிலில் மணியடித்துக் கொண்டிருக்கிறான்
    பரிட்சையில் பாஸ் ஆக…

    -கனல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here