தலைப்பு :
கூச்சலிட்டுக்கொண்டே
இருக்கும்
குழந்தைகளின்
இசைப்பாடல்!
……………………..
வீரம் என்பது மௌனமொழி —
போர் வந்தால்
புகழ்பாடும் எக்காளமாக இருக்காது —
கனத்த பூட்சுகள் போட்ட தடித்த ஆசாமிகள்
புகழ்பாடுவதாக இருக்காது
எந்த முரட்டு பூட்சுகளின் ஒலியையும் பாடாது.
என்றாலும்
கூச்சலிட்டுக்கொண்டேயிருக்கும்
குழந்தைகளின்
இசைப்பாடலாக இருக்கும்.
— கண்கள்
— மாசற்ற எளிய கண்களோடு குழந்தைகள்
உங்களை ஏறெடுத்துப் பார்த்து
” அம்மா எங்கே ? ” ,
” அப்பா எங்கே ? ” என்று
கேட்கும்போது
” நாட்டுக்காகச் செத்துப்போனாங்க ”
என்று சொல்வீர்கள் ;
” நாடு என்றால் என்ன ? ” என்று
கேட்கும்போது
மனிதமற்ற மனிதரின் செயல்களால்
வதைபட்டுச் சாய்ந்து பாலையாகச்
சிதறிய நிலத்தைக் காட்டுவீர்களா ?
நோயும் புகைமண்டலுமாகக் கிடக்கும்
பூமியைக் காட்டுவீர்களா ?

நம்பிக்கை அத்துப்போய்
சிதைந்து சரிந்துகிடக்கும் பொருளாதாரம்,
கடல்அலைபோல்
வந்துகொண்டேயிருக்கும்
வீடற்ற அனாதைகள்.
(வீடுகளா, அவை எங்கே போயிற்று ? ).

” நாடு என்றால் என்ன ? ” என்று
அவர்கள் கேட்கும்போது,
” எதற்காகச் சண்டையிட்டுக்
செத்துப்போனார்கள் ? ” என்று
கேட்கும்போது
உங்களுக்கே சமாதானமாக
அது என்ன என்னவென்று
சொல்லிக்கொள்ள முடிகிறதா ?

இந்தப்போரில்
இழக்காதவர்கள் யார் ?

மேகலா சரண்

ஆங்கிலம் வழி தமிழில் :
புதிய புத்தன்.

நன்றி : தி குவிண்ட்.காம். ( the quint.com )

( குறிப்பு : உக்ரைன் போர் பற்றி , இக் கவிதை இன்னொரு கோணம். போரினால் சிதைந்த நம்பிக்கை அற்ற குரலை கவிஞர் எழுதியிருக்கிறார். உக்ரைனில் விஷவேராய்ப் பரவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷியாவுக்கு எதிராகப் பல ஆண்டுகளாய் போரைத் தூண்டிக் கொண்டே வந்தது. ரசிய ஏகாதிபத்தியமும் தற்போது மூர்க்கமாக உக்ரைனில் போரில் இறங்கியுள்ளது. இவர்களுக்கு எதிரான உக்ரைன் மக்களின் நியாயமான போர்தான் தேவை என்று நாம் காரண காரியத்தைச் சேர்த்துப் புது வீரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கை அற்றுப் பேசமுடியுமா, பேச முடியாது என்றே தோன்றுகிறது. வீரம் என்பது கவிஞர் சொல்வதுபோல மௌனமொழிதானா, அதன் பொருளென்ன, நீங்கள் சொல்லுங்கள் — மொழிபெயர்ப்பாளன். )

https://www.thequint.com/news/world/ballad-of-bawling-babies-a-poem-for-ukraine-against-war#read-more

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here