கங்குவா- ஓயாத சர்ச்சை !

சினிமா துறையில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கு இடையிலான போட்டியில் கங்குவாவும் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது. கங்குவாவை தூற்றுவதில் சங்கிகளுக்கு பேரானந்தமும் கிடைத்திருக்கிறது.

2
கங்குவா படம் 2000 கோடி வசூலிக்க வைக்கும் என ஊதிப்பெருக்கப்பட்ட நிலையில், தற்போது மரண அடி கிடைத்திருப்பதாக சங்கிகள் கொண்டாடுகின்றனர் .

ங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து, விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படம் அவ்வளவு மோசமாக ஒன்றும் இல்லை.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் கங்குவாவின் மீது எதிர்மறை விமர்சனங்களை முன் வைப்பதாக ஒரு தரப்பு வாதிடுகிறது. குறிப்பாக சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவின் கருத்து இது தான்.

திரைப்படத்தில் நடிகர் சூர்யா அற்புதமாக நடித்திருப்பதாகவும், பல்வேறு கலைஞர்களும் தமது திறமையை முழுமையாக வெளிக்காட்டி இருப்பதாகவும், அதே நேரம் திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பதாகவும் சிலர் முன் வைத்த விமர்சனங்களும் கூட சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது.

படத்தின் ஆரம்ப கட்டத்தில் வரும் காட்சிகளில் ஒலியின் அளவு அதிகமாக இருப்பதை ஏற்றுக் கொண்டு, அதை குறைத்து இருப்பதாக அறிவிப்பும் வந்துள்ளது.

படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்தும் விமர்சனங்களுக்கு முடிவு வந்த பாடு இல்லை.

எதிர்மறை விமர்சனங்களை எதிர்க்கலாமா?

முதல் காட்சி பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படத்தை பற்றிய கருத்தைக் கேட்டு ஒளிபரப்புவது நேற்று வரை கொண்டாடப்பட்டு வந்துள்ளது .

தற்போது கங்குவா படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு ரசிகர் “படமா எடுத்திருக்காங்க? கத்து கத்துன்னு கத்துறாங்க காது கிழியுது” என கோபத்தோடு பேசியிருந்தார். இது பான் இந்தியா படத்திற்காக பல கோடி முதலீடு செய்து, அதை பல மடங்காக அள்ள காத்திருக்கும் அனைவருக்கும் எரிச்சலை கிளப்பியுள்ளது. . எனவேதான் வாய்ப்பூட்டு போடத் துடிக்கின்றனர்.

கங்குவா படத்தை பொருத்தவரையில் இப்படி கருத்து கேட்பதே குற்றம் எனும் அளவிற்கு போகின்றனர். திரைப்பட தயாரிப்பாளர்களாலும் திரையரங்கு உரிமையாளர்களாலும் யூடியூப் சேனல்கள் மீதான கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது .

எளியவனின் கைக்கெட்டும் சமூக ஊடகங்கள்!

நேற்று வரை மிகப் பெரும் கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் மட்டுமே திரைப்படம் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டு வர முடிந்தது . தற்போது சமூக ஊடகங்கள் குறிப்பாக youtube சேனல்களின் மூலம் யார் வேண்டுமானாலும் தமது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்து உள்ளது.

அப்படி சமூக வலைத்தளங்கள் திரைப்படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை முன் வைக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் பலரும் கதறுகின்றனர்.


படிக்க: இந்திய அரசின் துரோகத்தை மறைக்கும் அமரன்!


இன்று சினிமாத்துறை என்பது மிகப்பெரும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டுள்ளது. முன்னணி உச்ச நட்சத்திரங்களை கொண்டு எடுக்கப்படாத சாதாரண திரைப்படங்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படைப்புகளுக்கு ரிலீஸ் செய்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்றெல்லாம் பல விமர்சனங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

சினிமா துறையில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கு இடையிலான போட்டியில் கங்குவாவும் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது. கங்குவாவை தூற்றுவதில் சங்கிகளுக்கு பேரானந்தமும் கிடைத்திருக்கிறது.

 “நடிப்பை மட்டுமே பார்! அரசியல் பேசாதே !”

சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட சிவக்குமார் குடும்பத்தினர் சினிமாவையும் கடந்து சமூகப் பணிகளில் கல்வி துறையில் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செலுத்துகின்றனர். ஜோதிகா தஞ்சையில் முன்வைத்த ஒரு விமர்சனம் சங்கிகளை தூங்க விடாமல் செய்துள்ளதை தற்போதைய விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.

நாம் கோவிலுக்கு தரும் முக்கியத்துவத்தை விட மருத்துவமனைகளுக்கு கவனம் தர வேண்டும் என்றதை, அவர் விமர்சனம் வைத்ததாக கூட எடுக்க வேண்டியது இல்லை; சரியான வேண்டுகோள் விடுத்ததாக தான் பார்க்க வேண்டும். காவிகளால் அப்படி கடக்க முடியவில்லை.

இப்பொழுது கங்குவா படம் 2000 கோடி வசூலிக்க வைக்கும் என ஊதிப்பெருக்கப்பட்ட நிலையில், தற்போது மரண அடி கிடைத்திருப்பதாக சங்கிகள் கொண்டாடுகின்றனர்.

அரசு, சினிமாவுக்கு அப்பாற்பட்டு சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோதிகா, சூர்யாவை கடுமையாக விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது ஒரு நடிகனாக, நடிகையாக பிழைக்கிற வேலையை மட்டும் பாருங்கள் என ஆலோசனைகளையும் பாசிஸ்டுகளுக்கு உரிய பாணியில் அள்ளி விடுகின்றனர்.

ஏதோ ஒரு வகையில் சூர்யா நடத்தி வரும் அகரம் ஃபவுண்டேஷன் சங்கிகளை சீண்டியுள்ளது.

சங்கிகள் கக்கும் விஷம்!

மாரிதாஸ் போன்ற கடைந்தெடுத்த காவிகள் திடீரென கருத்துரிமையைப் பற்றி வகுப்பெடுக்கிறார்கள்.

இவர்களின் – மோடியின் ஆட்சியை விமர்சித்த குற்றத்திற்காகவே கௌரி லங்கேஷ் உள்ளிட்டு பலரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதை மறந்துவிட்டு, மறைத்து விட்டு, தற்போது ஒரு சினிமாவைப் பற்றி கருத்து சொல்வதற்கு தடை போட முடியுமா என்று திரையரங்கு உரிமையாளர்களையும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரையும் பார்த்து கொதிக்கிறார்கள்.

எந்த ஒரு படைப்பை பற்றியும், எந்த ஒரு இயக்கத்தை பற்றியும், எந்த ஒரு ஆட்சியை பற்றியும் விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது தான். ராமாயணத்தில் ராமர் பாலம் கட்டியதாக வருகிறது; ராமர் என்ன இன்ஜினியரா என கலைஞர் விமர்சித்தபோது, கலைஞர் தலைக்கு விலை வைத்தவர்களும் சங்கிகள்தான்.

நாம் சங்கிகளின் பார்வையில் வறட்டுத்தனமாக கருத்துரிமையை பறிக்கிறார்கள் என்று மட்டும் கூக்குரல் எழுப்ப முடியாது. அதேபோல், திரைப்பட தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் ஒன்றிணைந்து கொண்டு எந்த ஒரு படைப்பையும் ஒரு ரசிகன் தனது கோணத்திலிருந்து விமர்சிக்கும் அடிப்படை உரிமையை மறுப்பதையும் ஆதரிக்க முடியாது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் உள்ள சினிமா துறையால் உழைக்கும் மக்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கப் போவதில்லை; ஆனால் காவி பாசிசத்திற்கு ஏற்ற வகையில் மக்களை சாதி மத வெறியேற்றவும், மழுங்கடிக்கவும் தான் பெரிதும் துணை போகிறது.

  •  இளமாறன்

2 COMMENTS

  1. மக்கள் வாழ்வியலை காசாக்கும் வேலையை இன்று கார்ப்பரேட் சினிமாத்துறை நவீன வடிவங்களில் மேற்கொள்கிறது.

  2. மக்கள் வாழ்வியலை காசாக்கும் வேலையை இன்று கார்ப்பரேட் சினிமாத்துறை நவீன வடிவங்களில் மேற்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here