பாவேந்தரின் சாதி ஒழிப்புப் பாடல்கள்:

“சாதி ஒழிந்திடல் ஒன்று
நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால்
மறு பாதி துலங்குவதில்லையாம்!”

தமிழருக்குச் சாதியில்லை

” மிக்கு உயர்ந்த சாதி, கீழ்ச்சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை; தமிழர்க்கில்லை
பொய்க் கூற்றே சாதி எனல்”

(பாரதிதாசன் கவிதைகள் – கடல்மேல் குமிழிகள் : 26)

“சாதி களைந்திட்ட ஏரி – நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்”

(பாரதிதாசன் கவிதைகள் – 2, 25, பாரதி உள்ளம் -1
………………………….

“உலகினில் சாதிகள் இல்லை-என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்ற சாதி-என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?”

(காதல் பாடல்கள், ‘அவள் அடங்காச் சிரிப்பு’ – 3)
………………………………………………………………

“பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை – இந்தப்
பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை “

(பாரதிதாசன் கவிதைகள், 60, சகோதரத்துவம் 1)
………………………………………………………….

” மாந்தரில் சாதி வகுப்பது சரியா?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?”

(பாரதிதாசன் கவிதைகள் 50. ஆய்ந்துபார் 1)
………………………………………………………………………..

“வேதம் உணர்ந்தவன் அந்தணன் – இந்த
மேதினியை ஆளுபவன் சத்திரியனாம் – மிக
நீதமுடன் வைசியன் என்று உயர்வு செய்தார் – மிக
நாதியற்று வேலைகள் செய்தே – முன்பு
நாத்திறம் அற்றிருந்தவன் சூத்திரன் என்றே – சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் – இவை
அன்றியும் பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் “

(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் 6)
{நாதியற்று = உதவியில்லாமல், நாத்திறம் = வாதாடும் திறமை}
…………………………………………………………..

“தீண்டாமை என்னும் ஒருபேய் – இந்தத்
தேசத்தில் மாத்திரமே திரியக் கண்டோம் – எனில்
ஈண்டு பிறநாட்டில் இருப்போர் – செவிக்கு
ஏறியதும் இச்செயலைக் காறி உமிழ்வார்”

(பாரதிதாசன் கவிதைகள் 3, ஞாயமற்ற மறியல் – 3)
………………………………………………………….

“சாதிப்பிரிவு செய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி-சகியே
நீதிகள் சொன்னாரடி”

(பாரதிதாசன் கவிதைகள் 3, சமத்துவப்பாட்டு – 45)
………………………………………………………..

 சாதி ஒழிப்பு  சாதி மறுப்பு மணம்

“நமது சாதி வேறு நல்லோய்
அவனது சாதிவேறு என்று அறிகிலாய்
என்று சினத்தைச் சொல்லில் ஏற்றினான்”

(காதல் பாடல்கள், ‘கலப்புமணம் வாழ்க’ – 2)

என்று கூறுகிறார். அதைக் கேட்ட மகள்,

“அப்பா! உண்மையில் அவரும் என்போல்
மனிதச் சாதி, மந்தி அல்லர்;
காக்கை அல்லர்; கரும்பாம்பு அல்லர் “

(காதல் பாடல்கள், ‘கலப்பு மணம் வாழ்க’ -2)

என்று கேலியாகக் கூறுகிறாள். அதைக் கேட்ட அவளது தந்தை,

“மனிதரில் சாதி இல்லையா மகளே “

(காதல் பாடல்கள், ‘கலப்பு மணம் வாழ்க’ – 2)

என்று கேட்கிறார். அதற்கு மகள்,

“சாதி சற்றும் என்நினைவில் இல்லை
மாது நான்  தமிழனின் மகள் ஆதலாலே “

(காதல்பாடல்கள், கலப்பு மணம் வாழ்க -3)

குகநாதன்.வி.இ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here